0,00 INR

No products in the cart.

கேள்விகளும் பதில்களும்  அவரைப் போலவே அழகாக இருந்தது.

யார் வேண்டுமானாலும் யூடியூப் சானல் துவங்கலாம் என்ற நிலையில் ஜாதி, மதம் தொடர்பான சர்ச்சைக்குரிய வீடியோக்கள் யூடியூபில் பதிவு செய்யப்படுவது பல பிரச்னைகள், மோதல்களை உருவாக்கும். யூடியூபில் பதிவு செய்யப்படுகின்ற ஆபாச வீடியோக்கள் சிறுவர்கள் மனதை கெடுத்து, அவர்கள் வாழ்வை கேள்விகுறியாக்கிவிடும். காலத்தின் கட்டாயம் கருதி காவல்துறையினர் சர்ச்சைக்குரிய வீடியோக்களை பதிவு செய்பவர்கள் மீது  ‘உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் ‘ என்று நீதியரசர் கூறிய வார்த்தைகளை மேற்கோள் காட்டி எழுதியிருந்த தலையங்கம், சமூகவிரோதிகளுக்கு ‘சாட்டை அடி’.
– ஆ. மாடக்கண்ணு, பாப்பான்குளம்

பிரிட்டிஷ் ராணியின் 70 ஆண்டு கால ஆட்சி அவர் வாழ்க்கை வரலாறு
96 வயதிலும் அவரது தோற்றம் சிரிப்பு அனைத்தும் படித்து பிரமித்தேன்.
– வசந்தா மாரிமுத்து, சென்னை – 64.

சைக் கருவிகள் அனைத்தையும் எளிதாக வாசிக்கும் திறன்பெற்ற ஸ்ருதியின் அறிமுகப்பேட்டி அருமை. கேள்விகளும் பதில்களும்  அவரைப் போலவே அழகாக இருந்தது.
– கண்ணபிரான், நெல்லை

“பாம்பு புடிக்கலையோ பாம்பு” என்ற பக்கத்தை படித்தவுடன் மனம் ‘பட் பட்’ என்று அடித்துக்கொண்டது. பாம்பு என்றால் படையும் நடுங்கும் அல்லவா. ஆனால், அந்த பாம்பை தைரியமாக பிடிக்கும் அவருடைய மனோதிடத்தை பாராட்ட வார்த்தைகளே இல்லை. பாம்பு கடித்து விட்டால்  என்ன முதலுதவி செய்வது, எப்படி காப்பாற்றுவது என்ற செய்தி மிகவும் பயனுள்ள தகவல்.
–  பிரகதாநவநீதன், மதுரை

மிக மிக பயனுள்ள கட்டுரை. எங்கள் குடியிருப்பில் பாம்பு நடமாட்டம் அதிகம் (இரண்டு நாட்கள் முன்பு கூட எங்கள் வீட்டிற்கு வந்து விட்டது .)
பாம்பு கடிக்கான முதலுதவியும் . அதை தடுப்பதற்கான வழிமுறையும் மிகவும் பயனுள்ள ஒரு குறிப்பு . இதை உற்றார் .உறவினர் அனைவருக்கும் share செய்து விட்டு தான் மறு வேலையே பார்த்தேன்.

ஸ்வர்ண ரம்யா செய்த ஸ்ருதியின் நேர்த்தியான நேர்காணல் அருமை‌.          ஸ்ருதி பல்கலை வித்தகியாக இருப்பதுடன், எம்.எஸ்.சுப்புலஷ்மி போன்ற  இசை மேதையின் வாழ்க்கையை மையமாக வைத்து படம் எடுத்தால் நடிக்கவும் தயார் என்றது மகிழ்ச்சி.
– ஸ்ரீகாந்த், திருச்சி – 621 216

கடூரில்  இப்படியொரு தமிழ்ச் சேவையா? அந்த அமைப்பினர் பாராட்டப் படவேண்டியவர்கள்.
– பாண்டியராஜ், மதுரை

“புகை நிறைந்த புகைப்படம்” . நல்ல படத்துக்கு நல்ல  தலைப்பு அதற்கே பரிசு கொடுக்கலாம்.
– மலர்கொடி, கோவில்பட்டி

வாராவாரம் ஒரு நூலை அறிமுகப்படுத்தி  அதை வாங்க வைக்கிறீர்கள். என் பட்ஜெட் எகிறிக்கொன்டிருக்கிறது.
– நா. பாஸ்கரன், பாளையங்கோட்டை

2 COMMENTS

  1. __ என் கருத்தை வெளியிட்டதுக்கு (பாம்பு) நன்றி, பெயர் எங்கேயோ சிக்கி கொண்டது போலும் ,”உங்கள் குரலுக்குள் , எங்கள் குரல்

    Janakiparanthaman __ kovai __36 , phone _9O47588922

  2. சிவாஜி வீட்டுப் பக்கத்தில் —-ஒரு நிருபரின் டைரியை வாசித்தபோது நாங்களும் சிவாஜி சார் வீட்டுப் பக்கத்தில் வசிப்பது போன்ற உள்ளுணர்வை ஏற்படுத்தியது. “கொஞ்சம் சிரிங்க பாஸ் “ நிறைய சிரிக்க வைத்தது. ஹி…ஹி……

Stay Connected

261,056FansLike
1,932FollowersFollow
11,700SubscribersSubscribe

Other Articles

தேடாதே !

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன்   தேடாதே ! தேடினால் காணாமல் போவாய் ! வழிகள் மாற்றி வைக்கப்பட்டிருக்கின்றன... சுஜாதாவின் ‘தேடாதே’ என்ற நாவலின் ஆரம்பிக்கும் வரிகள் இவை. மிளகு போன்ற சின்ன வஸ்துவைத் தேடிக்கொண்டு நம் நாட்டுக்கு வந்தவர்களால் நாம்...

உலகெங்கும் தமிழோசை

0
  - ஸ்ருதி   சௌதி அரேபியாவில் உள்ள இஸ்லாமியர்களின் புனித தலங்களில் ஒன்றான மெக்காவில் இனி தமிழும் ஒலிக்கப்போகிறது. இஸ்லாமியர்களின் புனித நாட்களில் ஒன்றான அரஃபா தினம் இசுலாமிய நாட்காட்டியில் பன்னிரெண்டாவது மாதமான துல் ஹஜ்...

இந்த ஆட்டத்தின் ஊடாக காதல் மலர்ந்திருக்கிறது. கவிதைகள் மலர்ந்திருக்கின்றன.

0
 நூல் அறிமுகம்   புதியமாதவி    வாசிப்போம் தமிழ் வளர்ப்போம் குழு   விளையாட்டுகள் வெறும் விளையாட்டுகள் மட்டுமல்ல, அவை  கடந்து வந்திருக்கும் பாதை மனித வரலாற்றை அப்படியே பிரதிபலிக்கின்றன. திறந்தவெளியில் விளையாடும் விளையாட்டுகளைவிட ஓரிடத்தில் அமர்ந்து விளையாடும் விளையாட்டுகள் மனித எண்ணங்களைக் கட்டமைத்தத்தில்...

உன்னதமான இசைக்கலைஞர்கள் இவற்றை செய்ய மாட்டார்கள்.

0
முகநூல் பக்கம் சுரேஷ் கண்ணன் முகநூல் பக்கத்திலிருந்து...   இசை ஞானத்தில் நான் ஒரு பாமரன் என்றாலும் இந்த லிடியன் நாதஸ்வரம் என்கிற இளைஞன் ஒரு சாதனையாளன் என்பதை ஒரு மாதிரி 'குன்சாக' உணர முடிகிறது. பியானோவில்...