0,00 INR

No products in the cart.

புத்தாண்டு சிறப்பிதழிலிருந்து….

திரு. நா. கண்ணன் சூழல் வேதியியல், சூழல் நச்சுவியல் எனும் துறைகளில் உலகின் ஆகச்சிறந்த முதல் பத்து பேராசிரியர்களுள் ஒருவர்.  உலகின் நோபல் நாயகர்களின் தரத்தில்  அவரது கட்டுரைகள் மதிப்பிடப்பட்டிருக்கின்றன.  உலகின் பல நாடுகளில் வாழ்ந்தவர். பல நாடுகளுக்குப்  பயணங்கள் செய்தவர்.

அடுத்தவாரம் முதல் அவர் எழுதப் போகும் தொடர் குறித்து அவர்,

“எப்படி நாம் பிறந்த காலம், அதன் சூழல், சமூகம் தரும் வாய்ப்புகள், தன் முயற்சி, தன்னம்பிக்கை இவை ஓர் இந்தியனின், தமிழனின் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது என்பதை ஓர் மூன்றாவது மனிதனாக பாவித்து என் கதையை  உங்களுக்குச் சொல்லும்   தொடர் இது.

என் கதையை உங்களுக்குச் சொல்ல  எனக்கு என்ன தகுதி? கல்விதான்! அதுவே என்னை உங்கள் முன் நிறுத்தியுள்ளது. அறிவியல் இளங்கலை, முதுகலை, முனைவர் என உயர்ந்துள்ளேன். இருமுறை முனைவர் பட்டம் பெற்றுள்ளேன். ஒன்று மதுரையில் மற்றொன்று ஜப்பானில். என் ஆய்வு என்னை ஓர் உலகம் சுற்றும் வாலிபனாக ஆக்கிவிட்டது. முதல் ஐந்து வருடம் ஜப்பானில், அடுத்த 16 வருடங்கள் ஜெர்மனியில், அடுத்த 8 வருடங்கள் கொரியாவில், பின் ஏழு வருடங்கள் மலேசியாவில் என்று என் வாழ்வு கழிந்திருக்கிறது. நான் ஜப்பானில் இருந்தபோது ஹாங்காங், அமெரிக்கா சென்றிருக்கிறேன். ஜெர்மன் வந்த பிறகு பிரான்சு, நெதர்லாந்து, டென்மார்க், ஸ்வீடன், பின்லாந்து, போலந்து, இத்தாலி, எகிப்து, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளுக்குப் பயணப்பட்டிருக்கிறேன். கொரியாவில் வேலை பார்த்தபோது சீனா, தாய்லாந்து, கம்போடியா, தைவான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்குச் சென்றிருக்கிறேன். மலேசியாவிலிருந்து இந்தோனேசியா, அமீரகம், ஓமன் போன்ற நாடுகளுக்கு போய் வந்துள்ளேன். வட துருவ வட்டம் வரை வடக்கே. தெற்கே அண்டார்டிக் கண்டம் செல்ல வாய்ப்பிருந்தும் நான் முயலவில்லை. பசிபிக் மாகாசமுத்திரத்தை ஆய்வுக் கப்பலில் கடந்திருக்கிறேன். அட்லாண்டிக் மகாசமுத்திரத்தின் அங்கமான வடகடல், பால்டிக் கடல்களில் ஆய்வுகள் செய்திருக்கிறேன். ஜப்பானின் அங்கமான சேத்தோ உள்நாட்டுக் கடல், ஜப்பான் கிழக்குக் கடலில் ஆய்வுகள் செய்துள்ளேன்.

உலகில் எதுவும் காரண காரியமின்றி நிகழ்வதில்லை. நான் என்னை. இது. நான் உருவாகும் காலத்தில் இதை நான் அறிந்தேனில்லை. என் ஆர்வம் மட்டுமே என்னை உந்தித்தள்ளியது. ஆனால் இன்று திரு.இரமணன் என்னைப் பணித்த போது என் கதையே எனக்கு சுவாரசியமாகப் பட்டது. அதை எப்புனைவுமின்றி காய்தல் உவத்தல் இன்றி சொல்ல முயல்கிறேன். உங்களுக்குப் பிடிக்கும் என நம்புகிறேன்.

பெர்லின்,

18.12.2021

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

நல்ல கார்ட்டூனிஸ்ட் இடம் தமிழ்நாட்டில் இன்று காலியாகவே இருக்கிறது.

கார்ட்டூன்கள் பலவிதம் !   சுஜாதா தேசிகன்                                         ...

புத்தாண்டு சிறப்பிதழிலிருந்து….

0
36 ஆண்டுகள்  வங்கிப் பணி..30 நாடகங்களுக்கு மேல் எழுதி,தயாரித்து,இயக்கி நடித்துள்ள டி.வி ராதாகிருஷ்ணன் தன் நாடகங்களுக்காக பல முன்னணி அமைப்புகளிலிருந்து விருது பெற்றிருப்பவர். 20க்கும் மேற்பட்ட ஆன்மீக,சமூக,இலக்கிய நூல்கள் எழுதியிருக்கிறார். அவருடைய  “வால்மீகி...

கொஞ்சம் சிரிங்க பாஸ்

0
வாசகர் ஜோக்ஸ் ஓவியம்: ரஜினி   “கூண்டில் ஏறியதும் தலைவர் சோடா கேட்டாராமே?” “பொதுக்கூட்ட மேடையில் ஏறிய நினைப்பில் கேட்டுவிட்டாராம்.” - சி.ஸ்ரீரங்கம், திருவெறும்பூர்   அப்பா: “ஸ்கூல் போனியோ டீச்சர்கிட்ட என்ன கேட்டே?” பையன்: “அடுத்த லாக்டவுன் எப்ப டீச்சர்னு கேட்டேன்.” - பி.பாலாஜி...

தேவி பிரசாத் இசையமைத்து, சமந்தா ஆடும் ஒரு பாடல் காட்சி சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது

0
புஷ்பா தி ரைஸ் லதானந்த்   தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகியிருக்கும் இந்தப் படத்தில் செம்மரக் கடத்தலுக்குப் பயன்படும் லாரியின் ஓட்டுநராகக் கூலிக்கு வேலைசெய்யும் அல்லு அர்ஜுன் கடத்தல் தொழிலில் கடினமாக...

நீங்கள் எவ்வளவுதான் பிசியான வேலையில் இருந்தாலும், உங்களுடைய மனைவி, மக்களுக்காக  நேரம் ஒதுக்குங்கள்

0
அண்ணாத்தே வந்த பாதை – 11   எஸ்.பி.முத்துராமன்    /   எழுத்து வடிவம் : எஸ்.சந்திரமெளலி   "ஏவி.எம்.மின் “ராஜா சின்ன ரோஜா”  படப்பிடிப்பின்போது ரஜினி, கௌதமி மற்றும் குழந்தைகள் மட்டுமில்லாமல் கார்ட்டூன் கதாபாத்திரங்கள் கூட முழுமையான...