0,00 INR

No products in the cart.

பொங்கி நிறைந்த நெல்லை சங்கீத சபா

 – ஆ. மாடக்கண்ணு

 

மரர் கல்கி எழுதிய எக்காலத்தில் நிலைத்து நிற்கும் ‘பொன்னியின் செல்வன்’ வரலாற்று  நாடகம் , நெல்லை சங்கீதா சபாவில் 19.12.2021 ஞாயிற்றுக் கிழமை அன்று மதியம் 2 மணி, மாலை 6 மணி என இரண்டு காட்சிகளாக நடந்தது. நாடகத்தை கண்டுகளிக்க சிறுவர்கள், சிறுமியர்கள், இளசுகள், இளம் தம்பதியர்கள், முதியோர்கள் என குடும்பம் குடும்பமாக வந்து நெல்லையே விழாக் கோலம் பூண்டிருந்தது. பல திரையங்குகள்  ரசிகர்களை தொலைத்த வேளையில், மக்கள் வெள்ளம் பொன்னியின் செல்வன் நாடகத்தை காண வந்தது, தமிழ் இலக்கிய உலகத்தை இந்த தலைமுறை   ‘பொன்னியின் செல்வன்’ மூலம் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வது உறுதியாகியுள்ளது.

நாடகம் துவங்கியதும்  ஆழ்வார்கடியானும், வந்தியத்தேவனும் வந்ததும் மக்கள் கரவொலி எழுப்பி மகிழ்ந்தனர். சுந்தர சோழன், பழுவேட்டையர், நந்தினி, குந்தவை, வானதி, மந்திரவாதி, அருண்மொழி வர்மன், ஆதித்த கரிகாலன், ஜோசியர், சின்னப்பழுவேட்டையர், பெரியபிராட்டியார், பூங்குழலி, சேந்தன், அமுதன், மந்தாகினி போன்ற முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த   கலைஞர்கள் ரசிகர்களின்  கைதட்டலை  பெற்றனர். தந்திர காட்சிகள், தலை வெட்டப்படும் காட்சி, கட்டடம் இடிந்து விழும் காட்சி, கப்பல் எரியும் காட்சி போன்றன ரசிகர்களை பிரமிக்க வைத்தது.

வசனங்கள் அனைத்தும் அசத்தல். மனதில் எளிதாக பதிய வைத்தனர் கலைஞர்கள். வந்தியத்தேவன் ‘எளியர்களால்தான் தமிழைக் காக்க முடியும்’ என்று பேசியபோது அரங்கத்தில் பலத்த கைத்தட்டல். நான்கு மணி நேரம் நடந்த நாடகத்தில் ஒருவர்கூட வெளியே செல்லாமல் முழுமையாக நாடகத்தை கண்டுகளித்தது ‘பொன்னியின் செல்வன்’ வெற்றி மகுடத்தில் இன்னொரு வைரக்கல்.

டி.வி.கே.கல்சுரல் அகடாமி  “பொன்னியின் செல்வன்”  நாவலை மேடை நாடகமாக தயாரித்து சென்னை, கோவை, பெங்களூரு உட்பட முக்கிய நகரங்களில் அரங்கேற்றி வருவதாக இயக்குனர் மல்லிக்ராஜ் தெரிவித்தார். டி.கே. ரமேஷ் தயாரித்துள்ளார். நெல்லை தினமலர், ஆச்சி மசாலா நிறுவனம் இணைந்து வழங்கின. நாடகம் நிறைவு பெற்றதும் இயக்குனர் மல்லிக்ராஜ்,  நாடகத்தில் நடித்த கலைஞர்களை அறிமுகப்படுத்தும்போது ரசிகர்கள் எழுந்து நின்று கைத்தட்டி வாழ்த்தினர்.

‘கொரோனாவால் பல பாதிப்புகளை சந்தித்துள்ள வேளையில், இப்படியொரு  வரவேற்பை எதிர்பார்க்கவில்லை. மிக்க மகிழ்ச்சி’ என்று இயக்குனர் நெகிழ்ந்ததோடு கல்கியின் மற்ற நாவல்களையும்  நாடக மேடையில் அரங்கேற்றுவோம் என்று  கூறியதும் சுருதி கூடிய கைத்தட்டல் அரங்கை  வெளுத்துக் கட்டியது.

கல்கியின் அத்தனை படைப்புகளோடு வாருங்கள் இயக்குனரே, நெல்லை வரவேற்க காத்திருக்கிறது.  “பொன்னியின் செல்வன்” நம் மண்ணின் பொன்.

 

Stay Connected

261,056FansLike
1,932FollowersFollow
11,700SubscribersSubscribe

Other Articles

நல்ல கார்ட்டூனிஸ்ட் இடம் தமிழ்நாட்டில் இன்று காலியாகவே இருக்கிறது.

கார்ட்டூன்கள் பலவிதம் !   சுஜாதா தேசிகன்                                         ...

புத்தாண்டு சிறப்பிதழிலிருந்து….

0
36 ஆண்டுகள்  வங்கிப் பணி..30 நாடகங்களுக்கு மேல் எழுதி,தயாரித்து,இயக்கி நடித்துள்ள டி.வி ராதாகிருஷ்ணன் தன் நாடகங்களுக்காக பல முன்னணி அமைப்புகளிலிருந்து விருது பெற்றிருப்பவர். 20க்கும் மேற்பட்ட ஆன்மீக,சமூக,இலக்கிய நூல்கள் எழுதியிருக்கிறார். அவருடைய  “வால்மீகி...

கொஞ்சம் சிரிங்க பாஸ்

0
வாசகர் ஜோக்ஸ் ஓவியம்: ரஜினி   “கூண்டில் ஏறியதும் தலைவர் சோடா கேட்டாராமே?” “பொதுக்கூட்ட மேடையில் ஏறிய நினைப்பில் கேட்டுவிட்டாராம்.” - சி.ஸ்ரீரங்கம், திருவெறும்பூர்   அப்பா: “ஸ்கூல் போனியோ டீச்சர்கிட்ட என்ன கேட்டே?” பையன்: “அடுத்த லாக்டவுன் எப்ப டீச்சர்னு கேட்டேன்.” - பி.பாலாஜி...

தேவி பிரசாத் இசையமைத்து, சமந்தா ஆடும் ஒரு பாடல் காட்சி சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது

0
புஷ்பா தி ரைஸ் லதானந்த்   தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகியிருக்கும் இந்தப் படத்தில் செம்மரக் கடத்தலுக்குப் பயன்படும் லாரியின் ஓட்டுநராகக் கூலிக்கு வேலைசெய்யும் அல்லு அர்ஜுன் கடத்தல் தொழிலில் கடினமாக...

நீங்கள் எவ்வளவுதான் பிசியான வேலையில் இருந்தாலும், உங்களுடைய மனைவி, மக்களுக்காக  நேரம் ஒதுக்குங்கள்

0
அண்ணாத்தே வந்த பாதை – 11   எஸ்.பி.முத்துராமன்    /   எழுத்து வடிவம் : எஸ்.சந்திரமெளலி   "ஏவி.எம்.மின் “ராஜா சின்ன ரோஜா”  படப்பிடிப்பின்போது ரஜினி, கௌதமி மற்றும் குழந்தைகள் மட்டுமில்லாமல் கார்ட்டூன் கதாபாத்திரங்கள் கூட முழுமையான...