0,00 INR

No products in the cart.

சிலர்  “மதம்” பிடித்தவர்களாகத்தான் இருக்கிறார்கள் என்பது  கசக்கும் உண்மை.

நீங்கள் கேட்டவை – தராசு பதில்கள்

 

? எல்லா  நடிகைகளும்  ஏன் இன்ஸ்டாகிராம் வைத்திருக்கிறார்கள்?
– ராகினி நாயர், திருச்சூர்
! சில சமயங்களில் ஒரே நாளில்கூட தங்கள் படங்களை, பல வீடியோக்களை வெளியிட முடிகிறது. சின்ன வாக்கியங்களில் ரசிகர்களுக்கு செய்தி சொல்ல முடிகிறது என்பவற்றைத் தாண்டி, மற்றொரு முக்கிய விஷயமுமிருக்கிறது. விளம்பரங்களுக்கு ஒரு நடிகர் அல்லது நடிகையை அணுகும்போது அவரை  இன்ஸ்டாகிராமில் எத்தனைப் பேர் பின்தொடர்கிறார்கள் என்பதை பொறுத்து விளம்பர ஏஜென்சிகளால் அவருக்கான கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது.  நடிகை சமந்தாவின் இன்ஸ்டாகிராமைப்  பின்தொடர்பவர்கள்  2 கோடிப் பேர். இப்போது தெரிகிறதா? அவர் ஏன் பல விளம்பரங்களில் தோன்றுகிறார் என்று?

? தலைமறைவாகியிருக்கும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டுபிடிக்க தனிப்படை அமைத்திருக் கிறார்களே?
– சண்முக சுந்தரம், விழுப்புரம்
! ஒரு முன்னாள் அமைச்சரை அதுவும் நீதிமன்றத்தில் ஜாமின் மறுக்கப்பட்ட  நாளில் அரசியல் கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கும் அரசியல்வாதியை காவல் துறையால்  கைது செய்ய முடியவில்லை என்பது அபத்தம்.  உச்ச நீதிமன்றத்தில் ஜாமின் மனு வழக்கின் முடிவு தெரியும் வரை அவர் காவல்துறைக்கு தெரிந்த இடத்தில் பாதுகாப்பாகத்தான் இருப்பார்.

?  “முன்னாள் அமைச்சர்கள் மீது நடத்தப்படும் சோதனை என்பது சாதனை படைத்தவர்கள் மீது நடத்தப்படும் சோதனை” என்கிறாரே முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்?
– சா.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம்
! என்ன சாதனை என்று சொல்லவில்லை என்பதைக் கவனித்தீர்களா?

? “தவறு செய்தவர்கள் திருந்தி வந்தால் ஏற்க வேண்டும்” என்கிறாரே ஓ.பி.எஸ்?
நெல்லை குரலோன்
! பாவமன்னிப்பு அளித்து ஏற்பதுதான் தலைமைக்கு அழகு என்கிறார். புரிகிறது.  ஆனால் இவர்தானே தலைமை?  அதைச்செய்வதில் என்ன தயக்கம் ?அதுதான் புரியவில்லை.

? சசிகலாவை அ.தி.மு.க.வில் இணைக்க பா.ஜ.க. முயற்சி செய்கிறதா?
– கண்ணபிரான், இராஜபாளையம்
! தான் சவாரி செய்ய விரும்பும் குதிரை வலுவாக இருப்பதைத்தானே எந்த வீரனும் விரும்புவான்.

சென்னையில் பிப்ரவரி 24 முதல் புத்தக கண்காட்சி : பபாசி அறிவிப்பு | chennai Book Fair start from February 24: Bapasi Announcement | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News ...

? நடைபாதை கடைகளில் புத்தகங்கள் வாங்குவது, புத்தக கண்காட்சியில் புத்தகங்கள் வாங்குவது – என்ன வித்தியாசம்?
வாசுதேவன்,  பெங்களூரு
! நடைபாதைகளில் பளபளப்பான அட்டையில்லாமல், சில பக்கங்கள் கூட இல்லாமல் பொக்கிஷங்கள் கிடைக்கும். புத்தகக் கண்காட்சியில்  பதிப்பாளர்களும், விற்பனை நிலையங்களும் பொக்கிஷமாக மதிப்பது மட்டுமே கிடைக்கும்.

? யூடியூப் சானல்களில்  உண்மையிலேயே வருமானம் கிடைக்கிறதா?
– நெல்லை குரலோன்,  நெல்லை
கடந்த ஆண்டு வெளியான விபரங்களின்படி இந்தியாவில்  26.5 கோடி பேர் தினசரி யூடியூப் பார்க்கிறார்கள்.  10 லட்சம் பார்வையாளர்களைக் கொண்ட1200 சானல்கள் இருக்கின்றன். ஒவ்வொரு மாதமும் இந்தப் பட்டியலில் 300 சானல்கள் இணைகின்றன. எல்லோரும் செய்வதைச் செய்யாமல் புதிதாக ஏதாவது செய்தால் அதை சுவாரஸ்யமாக விளக்கினால் சந்தாதாரர்கள் பெருகும் வருமானம் கிட்டும்.  ‘என்ன புதிதாகச் செய்யலாம்’  என்று கேட்கிறீர்களா? அடுத்தவரிடம் கேட்காமல் நீங்களே கண்டுபிடியுங்கள்!

பொற்கோயிலில் பரபரப்பு.. அத்துமீறி நுழைந்த இளைஞர் அடித்துக் கொலை !!

? பொற்கோயிலில் நுழைந்து சன்னிதானத்தை தாக்க முயன்றவரை அடித்தே கொன்றிருக்கிறார்களே?
– சம்பத் குமாரி,  திருச்சி
! மதங்கள் நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டது. அதைத் தீவிரமாக பின்பற்றுபவர்கள் அதை மதிக்காதவர்கள் மீது கோபம் கொள்வது இயற்கை. அதுவும் அவர்கள் வழிபாட்டுத் தலத்திலேயே நடந்தால் சகித்துக்கொள்ள மாட்டார்கள். ஆனால் அப்படி செய்தவரை காவல்துறையிடம் ஒப்படைத்து முறையான தண்டனை பெற வழிசெய்திருக்கவேண்டும். மதங்கள் அன்பைப் போதித்தாலும் , மதத்தை மதிப்பவர்கள் எல்லாருக்கும் அது புரியவில்லை. சிலர்  “மதம்” பிடித்தவர்களாகத்தான் இருக்கிறார்கள் என்பது  கசக்கும் உண்மை.

Kolkata Corporation Election; Trinamool Congress win -7, lead-108 || கொல்கத்தா மாநகராட்சி தேர்தல்; திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி-7, முன்னிலை-108

? கொல்கத்தா  நகராட்சி தேர்தலில் மம்தாவின் கட்சி வெற்றிவாகை சூடியிருக்கிறதே?
– ஜாகீர் உசேன், வாணியம்பாடி
! ஆளும் கட்சி தலைநகரில் நகராட்சித் தேர்தல்களில் வெற்றி பெறுவது பெரிய விஷயமில்லை. ஆனால்  இம்முறை மிக அதிக இடங்களைப் பெற்றிருப்பது  அவர் கட்சியின் வளரும் செல்வாக்கின் அடையாளம்!

? ஐ.மு.கூ.க்கு தேசிய அளவில் ஸ்டாலின் தலைமையேற்க பிரசாந்த் கிஷோர் வியூகம் வகுக்கிறாராமே?
– துரைசாமி , பேட்டை நெல்லை
! இருவருமே  புத்திசாலிகள். அப்படிப்பட்ட தவறைச் செய்ய மாட்டார்கள்!

 ? உண்மையிலேயே பேய் என்று ஒன்றிருக்கிறதா?
– ரவிச்சந்திரன், மதுரை
! இருக்கிறதோ இல்லையோ இருப்பதான நம்பிக்கை காலம்காலமாக உலகெங்கும் தொடர்கிறது. ஜப்பான் பிரதமரின் அதிகாரபூர்வ இல்லம் டோக்கியோவில்  இருக்கிறது. ஆனால் 1963லிருந்து  இதுவரை அதில்  எந்தப் பிரதமரும் தங்கியதில்லை. காரணம் அதில் வாழும் பேய்கள்.

அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பிரதமர் புமியோ கிஷ்டோ  துணிவுடன் அங்கு வசிக்க ஆரம்பித்திருக்கிறார்.  அந்த வீட்டில் அவருடைய முதல் நாள் அனுபத்தை கேட்டபோது.  “நன்றாகத் தூங்கினேன்.   ஒரு பேயைக்கூட பார்க்கவில்லை” என்று கிண்டலாக ட்விட் செய்திருக்கிறார்.  பேய்கள் வீடு மாறிப் போய்விட்டதோ என்னவோ?

அதிமுகவில் தொண்டனாக இருப்பதே எனக்கு பெருமை... தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் ஓ.பி.எஸ். பேச்சு..! | O.Panneerselvam says I am proud to be a Cadre in the AIADMK - Tamil ...

? பன்னீர் செல்வத்தின் பலவீனம் என்ன?
– அரவிந்தன், சேந்தமங்கலம்
! பொறுமை. பொறுமையே தன் பொறுமையை இழந்துவிடுமளவுக்கு பொறுமை….!

? “தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது அனைவரும் எழுந்து நிற்க  வேண்டும்” என தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளதே?
ஆர். மாதவராமன், கிருஷ்ணகிரி
! தவறில்லையே.  இறைவணக்கம்,  தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் போன்றவை  பாடும்போது எழுந்து நிற்பது நம் தேசம் தழுவிய பண்பு.  அதை அரசாணைப் போட்டு செய்யச்சொல்லியிருப்பது  நமக்கு இழுக்கு.

1 COMMENT

  1. சுருக் பிளஸ் சுவையுடன் பதில் அளிப்பதில் வித்தகம் புரியும் தராசாரின் நேர்த்திக்கும் நேர்மைப் பண்புக்கும் தலை வணங்குகிறோம். ‘ சசிகலா வை அதிமுகவில் இணைக்க பா.ஜ.க. முயற்சி செய்கிறதா?’ என்ற கேள்விக்கு தராசார் கொடுத்த பதில் விளைவித்த பரவசத்தில் இருந்து இன்னும்
    விடுதலை ஆகவில்லை.
    நெல்லை குரலோன்
    பொட்டல்புதூர்

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

“ஆளுநருடன் அரசியல் பேசினேன்” – ரஜினிகாந்த்

1
? “உணவுப்பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி.யில் வரிச்சலுகை இருப்பதை மக்கள் புரிந்துகொள்ளாமல்  எதிர்க்கிறார்கள்” என்கின்றனரே பா.ஜ.க.வினர்? - ஜோஷ், அயன்புரம் ! அப்படியா. நீங்கள் சரியாகப் புரிந்துகொள்ளுங்கள்... அரிசி 25 கிலோ பாக்கிங் மூட்டைக்கு ஜிஎஸ்டி சேர்த்து ரூபாய் 1312-5.. அதே அரிசி...

‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் பாடல் எப்படி?  

2
நீங்கள் கேட்டவை - தராசு பதில்கள்   ? செஸ் ஒலிம்பியாட் துவக்க விழா எப்படி? - எம்.சண்முகம், எடப்பாடி ! ஒரு விளையாட்டுப் போட்டியின் உள்ளடக்கத்தை உள்வாங்கிப் பெரும் நிகழ்வாக்கிக் காட்டுவது எப்படி என்பதை  தொடக்க நிகழ்வுகள்...

ஓர் எழுத்தாளன்  எப்படியிருக்க வேண்டும் ?

1
? ஓர் எழுத்தாளன்  எப்படியிருக்க வேண்டும்? - மதி மாறன், சேலம் ! ஓர் எழுத்தாளன் தம் வாசகர்களுக்கு நெருக்கமான, தம்மைப் போன்ற ஒரு மனிதனாக, தாம் எளிதில் அணுகி உரையாடக்கூடிய ஒருவனாக,  தமக்குப் பிடிக்கக்கூடிய...

கண்ணியத்தை காக்காததற்கு கட்சி அவர் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

1
நீங்கள் கேட்டவை - தராசு பதில்கள்   ? சென்னை செஸ் ஒலிம்பியாட்  பற்றி... -நெல்லை குரலோன், பொட்டல்புதூர் முன்னேற்பாடுகள் கச்சிதமாக செய்யப்பட்டுக்கொண்டிருப்பதில் மகிழ்ச்சி. ஆனால், வெளியான விளம்பர படத்தில்  உலகம் அறிந்த விஸ்வநாத் ஆனந்தோ, அல்லது பிரஞ்யாவோ...

இளையராஜாவை ஜனாதிபதியாகவே ஆக்கலாம் என்கிறாரே கமல்?

0
  “இளையராஜாவை ஜனாதிபதியாகவே ஆக்கலாம்” என்கிறாரே கமல்? - மாடக்கண்ணு, நெல்லை ! அவர் ஏற்றுகொள்ள மாட்டார். இந்திய ஜனாதிபதி பணம் ஈட்டும் எந்தப் பணியையும் செய்ய முடியாது.  ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர் செய்யலாம். அவர் இசைஞானிதானே...