0,00 INR

No products in the cart.

விற்பதற்கல்ல! விதைக்காக

பொலிடிகல் பிஸா

– எஸ். சந்திரமௌலி

 

கேட்பீர்களா? கேட்பீர்களா?

பாராளுமன்ற மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கர்நாடகாவைச் சேர்ந்த மல்லிகார்ஜுன கார்கே. பாராளுமன்றத்தில் பேசும்போது அவர் இந்தி, ஆங்கிலம் என்று பொளந்து கட்டுகிறார். ஆனால், தன் தாய்மண்ணுக்கு வந்துவிட்டால், கன்னடம்தான்! அண்மையில் பெங்களூருவில் கார்கேவின் பிரஸ் மீட்.  பிரஸ் மீட் முடிந்தவுடன், சில ஆங்கிலச் சேனல்களின் நிருபர்கள் கார்கேவிடம், “நீங்கள் சொன்னதை சுருக்கமாக ஆங்கிலத்தில் சொல்லிவிடுங்கள்!” என்றதும், அவருக்கு பொசுக்கென்று  கோபம் வந்துவிட்டது. “பெங்களூரில் இருக்கும் நீங்கள் எல்லாம் முதலில் கன்னடம் கற்றுக் கொள்ளுங்கள்!” என்று சொன்னதோடு நிற்காமல், “தமிழ்நாட்டில் ஸ்டாலினிடமோ, மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரேவிடமோ, இப்படி இங்கிலீஷில் சொல்லுங்கள்” என்று கேட்பீர்களா?” என்று ஆவேசமாகக் கேட்டார்.  நிருபர்கள் கப் சிப்!

கவர்னர் கான்டிரவர்ஸி

கேரளாவின் கவர்னராக இருக்கும் ஆரிஃப் முகமத் கானுக்கும், ஆளும் கம்யூனிஸ்ட் கூட்டணிக்கும் ஒத்துப் போகவில்லை. ஆளுனரின் பவரைக் குரைக்கும் நடவடிக்கைகளை எடுத்துவருகிறது பினரயி விஜயன் அரசு. வழக்கமாக, ஆளும் தரப்பு கவர்னருக்கு எதிராக களமிரங்கினால், எதிர்தரப்பு ஆளுனருக்கு சப்போர்ட்டாக களமிறங்கும்.  ஆனால், கேரளாவில், காங்கிரஸ் தரப்பு கவர்னருக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. காரணம், ஆரிஃப் முகமது கான் முன்னாள் காங்கிரஸ்காரர். அவர் பா.ஜ.க.வுக்குப் போய், கவர்னர் பதவியையும் பெற்றுக் கொண்டுவிட்டார் என்பது அவர்கள் மனசை உறுத்துகிறது.  கான்டிரவர்ஸி இல்லாத கவர்னர்கள் யாராவது இருக்கிறார்களா?

கொரோனா இங்கே! பழக்கூடை எங்கே?

மே. வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, கொல்கத்தாவில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சீக்கிரமே குணமடைய வாழ்த்து சொல்லி, பழக்கூடை ஒன்றை அன்பளிப்பாக அனுப்பி வைத்தார். இதற்கு கொல்கத்தா மீடியா பெரிய அளவில் பப்ளிசிடி கொடுத்தது. ஆனால், இது, மே. வங்காளத்தின் மற்ற பகுதிகளில் உள்ள உள்ளூர் தலைவர்களை கடுப்படைய வைத்துவிட்டது! காரணம், மே. வங்காளத்தின் மற்ற பகுதிகளில் இருக்கும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் “எங்களுக்கெல்லாம் பழக்கூடை எப்போ தருவீர்கள்?” என்று கேள்வி எழுப்புகிறார்கள்! அவர்களுக்கெல்லாம் பழகூடைக்கு பதிலாக அல்வாதானோ?

விற்பதற்கல்ல! விதைக்காக!

தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மீது, மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி ஒரு குற்றச் சட்டை சுமத்தி இருக்கிறார். ராவ் காரு ஊருக்கு உபதேசிப்பதை, தான் கடைபிடிக்கமாட்டார். “தெலங்கானா விவசாயிகளை அதிகமாக நெல் பயிரிடாதீர்கள் என அறிவுருத்துகிறார். ஆனால், ஹைதராபாதின் புறநகர் பகுதியில் உள்ள தன் 150 ஏக்கர் பண்ணையில் நெல் சாகுபடி செய்கிறார்”  என்பது அவரது குற்றச்சாட்டு.  ஆளும் தரப்பில் இதற்கு என்ன பதில் சொல்கிறார்கள் தெரியுமா? சந்திர சேகர ராவ்  பண்ணையில் விளையும் நெல் விற்பனைக்கு அல்ல; விதை நெல் பயன்பாட்டுக்கு மட்டுமே?’ அதெல்லாம் சரிதான்! 150 ஏக்கரிலுமா விதை நெல்லுக்கு? என பதில் கேள்வி எழுப்புகிறது எதிர்க்கட்சி!

பௌலர் எந்தப் பக்கம்?

டைபெறவிருக்கும் பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரச் சார்பில் சித்துவும், பா.ஜ.க. சார்பில் தினேஷ் மோங்கியாவும் போட்டி இடுவது உறுதியாகிவிட்டது. ஆனால், சமீபத்தில் கிரிக்கெட்டுக்கு முழுக்குப் போட்ட ஹர்பஜன் சிங்கை இழுத்துப் போட இருதரப்பும் முனைப்பாக உள்ளனர். ஹர்பஜனுடன் தான் இருக்கும் போட்டோவுடன் சித்து டுவீட் போட, பா.ஜ.க. தரப்பில், மோடி, ஹர்பஜனை சீக்கிய குரு தேஜ்பகதூரின் 400வது பிறந்தநாள் கொண்டாட்டக் குழுவில் உறுப்பினராகப் போட்டிருக்கிறார். ஹர்பஜன் பந்துவீச்சு யாருக்கு அனுகூலமாகப் போகிறது? வெயிட் அண்ட் சி!

Stay Connected

261,614FansLike
1,915FollowersFollow
7,420SubscribersSubscribe

Other Articles

5ஜி அலைக்கற்றைகளும் அமெரிக்க விமானங்களும்

- சுஜாதா தேசிகன்                                சென்ற வாரம் நடிகர்களின் விவாகரத்து செய்தியால் ஓரத்தில் ஒளிந்துகொண்ட...

குரு என்பவர், நெருப்பை உண்டாக்கும் அரணிக்கட்டையில் அடிப்பாகம் போன்றவர்.

0
உத்தவகீதை - 5 (உலக வாழ்க்கை நிலையற்றது) - டி.வி. ராதாகிருஷ்ணன் அவதூதன் யதுகுல பெரியவரிடம் மேலும் கூறினான்... மனித உயிர் வாழும்போது, அவனுடைய மூக்கு, நாக்கு, வாய், காது, கண், உடம்பு போன்றவை தன் ஆசைகளை...

இந்த வாரம் இவர்

0
மீண்டும் நானே வருவேன்     ஓவியர் ஸ்ரீதர்

என்னென்ன மாற்றங்களோ… அப்பப்பா….

0
- பாலாஜிகணேஷ்   1960 எப்பப் பாரு கதை புத்தகம் படிக்கிறதே வேலையா போச்சு, பாட புத்தகம் படிக்கிற நேரத்தை விட, விகடன், கல்கி அப்புறம் இந்த கருமம் புடிச்ச குமுதம். இன்னொரு வாட்டி கையில் குமுதத்தை...

கொஞ்சம் சிரிங்க பாஸ்

0
ஜோக்ஸ் : வி. ரேவதி, தஞ்சை ஓவியம் : ரஜினி    "தலைவரோட முழு நம்பிக்கையும் பெற்ற ஒரே ‘மெய் காப்பாளர்’ இவர் தான்!" "எப்படிச் சொல்றீங்க?" "தலைவர் சொன்ன உண்மைச் செய்தி எதையுமே அவர் வெளியே சொன்னதில்லை!"   "திடீர்னு அடுத்த...