0,00 INR

No products in the cart.

அருளுரை

 

ஶ்ரீ அரவிந்தரின்   அமுதமொழி

ருவன் யோகபாதையில் இறங்கிவிட்டபின் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். என்ன நடந்தபோதிலும், என்ன கஷ்டங்கள் தோன்றினாலும் முடிவு வரை செல்வது என்று உறுதி பூண்பதுதான். உண்மையில் யாரும் தனது சொந்தத் திறமையால் யோகத்தில் சித்தி பெறுவதில்லை. உனக்குப் பக்கத்தில் நின்று உன்னைக் காத்து, வழி நடத்தும் சக்தியின் மூலமே அது வரும். எல்லா நிலை மாற்றங்களினூடும் அந்த சக்தியின் துணையை நாடி அழைக்கும் அழைப்பின் மூலமே சித்தி வரும். உன்னால் சுறுசுறுப்பாக ஆர்வமுற முடியாதபோதும் உதவி வருவதற்காக அன்னையை நோக்கித் திரும்பிய நிலையில் இரு – அது ஒன்றே எப்பொழுதும் செய்ய வேண்டியது .

தேவை விடாமுயற்சி – கஷ்டத்தினூடும் இயற்கையின் நடைமுறையும், அன்னையின் சக்தியின் செயலும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன, அவை தேவையானவற்றையெல்லாம் செய்யும் என்பதை உணர்ந்து அதைரியப்படாமல் செய்ய வேண்டியதைச் செய்து கொண்டிருத்தல், நமது திறமையின்மை பெரிய விஷயமல்ல – எல்லா மனிதரும் அவர்களுடைய இயற்கை பாகத்தில் திறமையில்லாதவர்களே. ஆனால் தெய்வ சக்தியும் உள்ளது. நீ அதில் நம்பிக்கை வைத்தால் திறமையின்மை திறமையாக மாற்றப்பட்டுவிடும். கஷ்டமும் போராட்டமுமே வெற்றிக்கான சாதனமாகிவிடும் .

“என்னால் முடியவில்லை”.

“நான் போதிய அளவு செய்யவில்லை” என்னும் எண்ணம் வந்து உன்னைத் தொல்லைப்படுத்த என்றுமே இடங்கொடாதே. அது தபோகுணசூசனை. அது மனச்சோர்வை உண்டாக்கும். மனச்சோர்வு தவறான சக்திகளின் தாக்குத லுக்குக் கதவு திறக்கும். இதுவே நீ எடுக்கவேண்டிய நிலை. என்னால் முடிந்ததை நான் செய்துள்ளேன். உரிய காலத்தில் எல்லாம் நல்லவையாக நடக்கும்படி பார்த்துக்கொள்ள அன்னையின் சக்தி உள்ளது என்று அடிக்கடி கூறிக்கொள்.

தன்னுடைய சொந்த பலத்தினாலோ
நல்ல குணங்களினாலோ யாரும்
தெய்விக மாற்றத்தை அடைய முடியாது.

இரு விஷயங்கள் முக்கியமானவை.
ஒன்று அன்னையின் சக்தி வேலை செய்தல்;
இரண்டு அதற்குத் திறக்க வேண்டும்
என்னும் சாதகனின் மன உறுதியும்
அன்னை வேலை செய்கிறார்
என்பதில் நம்பிக்கை வைத்தலும்.
உனது மன உறுதியிலும்
நம்பிக்கையிலுமிருந்து வழுவாதிரு,
மற்ற எதைப் பற்றியும் கவலை கொள்ளாதே
அவை சாதனையில் ஏற்படும்
கஷ்டங்கள்தாம்.

 

1 COMMENT

  1. தனது சொந்த பலத்தினால் தெய்விக மாற்றத்தை அடைய முடியாது, தெய்விக மாற்றம் பெற அன்னையின் சக்தி வேலை செய்தல், அதற்கு சாதகனின் மன உறுதி வேண்டும் என்ற அருளுரை அற்புதம். அன்னை வேலை செய்கிறாள் என்பதில் நம்பிக்கை மன உறுதியோடு இருப்போம். மற்றவை பற்றி கவலைப் பட வேண்டாம் அது சாதனையில் ஏற்படும் கஷ்டங்கள் என்பது பிரமாதம்.

    ஆ. மாடக்கண்ணு

Stay Connected

261,311FansLike
1,909FollowersFollow
8,370SubscribersSubscribe

Other Articles

அறிவும் இறைவனும்

3
  அறிவு பொய்த் தோற்றங்களை ஆய்ந்து, அனுமானித்து ஏற்கிறது. ஞானமோ திரைக்குப் பின் நோக்கி, காட்சியைப் பெறுகிறது. எண்ணம் என்பது உண்மையை நோக்கி எய்யப்படும் ஓர் அம்பு. தன் இலக்கின் புள்ளியை மட்டுமே அதனால்...

ஒரு  தேசியின் டைரி குறிப்பு

சுஜாதா தேசிகன்                          டைரி எழுதும் பழக்கம் எனக்கு (இதுவரை) இல்லை. நேற்று என் மனைவி எதையோ தேடும்போது “நீங்கள்...

கிருஷ்ணரிடம் சில கேள்விகள்

2
டி.வி ராதாகிருஷ்ணன்   36 ஆண்டுகள்  வங்கிப் பணி..30 நாடகங்களுக்கு மேல் எழுதி,தயாரித்து,இயக்கி நடித்துள்ள டி.வி ராதாகிருஷ்ணன் தன் நாடகங்களுக்காக பல முன்னணி அமைப்புகளிலிருந்து விருது பெற்றிருப்பவர். 20க்கும் மேற்பட்ட ஆன்மீக,சமூக,இலக்கிய நூல்கள் எழுதியிருக்கிறார். அவருடைய ...

மீண்டும் ராகுலுக்கு அமேதி மேல் ஒரு கண்!

0
பொலிடிகல் பிஸா   - எஸ். சந்திரமௌலி பிரஷாந்த் கிஷோரை வளைக்க போட்டி மம்தா பானர்ஜி, மு,க.ஸ்டாலின் இருவரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற வியூகம் அமைத்துக் கொடுத்த பிரஷாந்த் கிஷோரை 23ஆம் வருட சட்ட மன்றத் தேர்தலுக்கு வளைத்துப்...

காவல்துறை நிஜமாகவே நம் நண்பர்கள்தான்.

2
முகநூல் பக்கம்   கிராமத்தில் என் நிலங்களை ஆக்கிரமித்து ஒரு மூன்றாம் தர அரசியல்வாதி அட்டகாசம் செய்தபோது, நான் வாட்ஸ் அப்பில் டிஜிபி திரு.திருபாதி அவர்களுக்கு புகார் மனு அனுப்பி வைத்தேன். உடனே புகார் மனுவின் பேரில்...