0,00 INR

No products in the cart.

இவர்களாவது வெற்றிகரமாகச் செய்தால் வரும் தலைமுறை காப்பாற்றப்படும்.

நீங்கள் கேட்டவை – தராசு பதில்கள்

 

? ‘மஞ்சள் பை எடுத்து செல்வது சுற்றுச் சூழலை காப்பவரின் அடையாளம்’ என முதல்வர் பேசியுள்ளாரே?
– ஆ. மாடக்கண்ணு, பாப்பான்குளம்
! மீண்டும் மஞ்சப்பை திட்டம்மூலம் சுற்றுபுறச்சூழலுக்கு தமிழக அரசு முக்கியத்துவம் கொடுத்துள்ளது வரவேற்க வேண்டிய விஷயம். நெகிழி பைகளை அழிப்பதற்கான முயற்சிகளில் முந்தைய அரசு தோற்றுவிட்டது. இவர்களாவது வெற்றிகரமாகச் செய்தால் வரும் தலைமுறை காப்பாற்றப்படும். மக்களின் முழு ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே இந்தத் திட்டத்தில் வெற்றிப்பெற முடியும். ஓராண்டுக்கு இந்த பைகளை விற்பனை நிலையங்கள் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக கொடுத்தால்  பழக்கம் எளிதாகப்  பரவிவிடும்.

? முரண்பாடுகள் உள்ள கட்சிகள் சேர்ந்தால் தான் பா.ஜ.க.வை வீழ்த்த முடியும் என்கிறாரே திருமாவளவன்?
சா.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம்
! 2019ல் தேர்தலை சந்தித்த  கூட்டணிகள் அனைத்துமே முரண்பாடுகள் உள்ள கட்சிகளின் கூட்டணிதானே. மறந்துவிட்டாரா?

 

 

 ? போலீஸிடம் மாட்டிக் கொள்வோம் என்று தெரிந்தும் சில கொள்ளையர்கள் துணிச்சலாக கொள்ளை அடிக்கிறார்களே ஏன்?
– கே. இந்து குமரப்பன், விழுப்புரம்.
! பேராசைத் தாண்டித் தங்கள் துணிச்சலையும் சாகசத் திறனையும் காட்டுவதில் மகிழ்ச்சி அடையும் போக்கு என்கிறார்கள் மனித மனங்களின் கூறுகளை ஆய்வுகளைச் செய்யும் வல்லுனர்கள்.

? அதிர்ஷ்டம் எப்போது கதவை தட்டும் ?
– கண்ணன், பொட்டல்புதூர்.
! எப்போது என்பது தெரியாததால்தான் பலர் அது தட்டும்போது கதவைத் திறப்பதில்லை.

? நெத்தியடியாக காங்கிரஸுக்கு ஒரே ஒரு யோசனை என்றால் என்ன சொல்வீங்க?
– நெல்லை குரலோன், பொட்டல்புதூர்
! “எதிர்க்கட்சி அணிக்கு தலைமை தாங்க வேண்டும்” என்ற எண்ணத்தை மறந்து, பா.ஜ.க.விற்கு எதிராக நாட்டில்  எழுந்திருக்கும் சக்தியுடன் இணையுங்கள்.

? டிபன் பாக்ஸ், போஸ்ட் பாக்ஸ் என்ன வித்தியாசம்?
– ஆ . மாடக்கண்ணு, பாப்பான்குளம்.
! வித்தியாசங்களை விட ஒற்றுமைகள்தான் அதிகம்.  இரண்டும் கவனத்துடன் பாதுகாக்கப்படும் பாக்ஸ்கள்.  அவற்றின் உள்ளே போடப்படுபவற்றில் , அதைத் தயாரித்தவர்கள்  நம் மீது கொண்ட அக்கறையும் அன்பும்   உழைப்பும், நேரமும் இருக்கிறது.

? மீண்டும் மோடி தொலைக்காட்சியில் மக்களுக்கான  உரைக்கு வந்து விட்டாரே?
– சி. கார்த்திகேயன், சாத்தூர்
! மீண்டுமா? புரியவில்லையே! அவர்தான் மாதந்தோறும்   “உங்கள் மனதோடு” டி.வி.யிலும், வானொலியிலும் நாடாளுமன்றத்தைத் தவிர எல்லா இடங்களிலும் பேசிக்கொண்டிருக்கிறாரே… மனதின் குரலை இதுவரை கேட்காவிட்டால் இந்த மாதம் கேளுங்கள். அருமையான தமிழாக்கம்.

? யூ டியூப் பார்த்து மனைவிக்கு பிரசவம் பார்த்ததில் குழந்தை இறந்திருக்கிறதே?
– எஸ். மோகன் கோவில்பட்டி
! யூ டியூப் பார்த்து செய்யும் சமையலே சரியாக வராத போது இம்மாதிரி விபரீதங்களைச் செய்ய இவரைப் போன்றவர்களுக்கு எப்படி மனம் வருகிறது என்று புரியவில்லை. ஆபாச யூடியூப்களுக்கு தடை விதித்திருப்பது போல இம்மாதிரி வீடியோக்களுக்கும் தடை விதிக்க வேண்டும்.

? “எதிர்வரும் நகராட்சி தேர்தல்களில் வெற்றி வாகை சூட  தயாராகிவிட்டோம்”  என்கிறதே  அ.தி.மு.க.?
– சண்முகநாதன், மதுரை
! அவர்கள் கட்சியில் நடந்த உட்கட்சி தேர்தல்களைப் பார்த்தால் அப்படி தெரியவில்லையே. அடிதடி… கலவரம்… போலீஸ்… மருத்தவமனை… என்று போராடிக்கொண்டிருக்கும் இவர்களுக்குத் தலைமை மன்னிப்பு வழங்கி கட்சியை ஒழுங்குபடுத்துவதற்குள் தேர்தல்கள் முடிந்துவிடும்.

? ஒமிக்கிரான் உண்மையிலேயே ஆபத்தானதா?
– பத்மினி ரங்கநாதன், கோவை
! உலகமே  விடைதேடிக்கொண்டிருக்கும் கேள்வி இது. நேரடி பாதிப்பின் வீரியம் குறித்து இதுவரை முழுவிபரம் அறிவிக்கப்படவில்லை.  இது பிறந்த இடமான தென்னாப்பிரிக்காவிலிருந்து வெளியாகும் அறிக்கைகள் அச்சப்படும்படியாக ஒன்றுமில்லை என்கிறது. ஆனால் அண்மையில் வந்திருக்கும் இங்கிலாந்தின் அறிக்கை இது டெல்ட்டாவைவிட  பயங்கரமானது என்கிறது. ஒமிக்கர்ரனை விட இம்மாதிரி அறிக்கைகள்தான்  நம்மை பயத்தில் ஆழ்த்துகின்றன.

? ஒரு நடிகை அணிந்திருக்கு உடை  37 கோடியாமே?  உண்மையாகயிருக்குமா?
– விஜய ராகவன், புதுக்கோட்டை
பிரபல நட்சத்திரங்கள் பேஷன் ஷோக்கள், தனியார் நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்பட நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போது விலையுயர்ந்த ஆடை அணிவது வழக்கம். அண்மையில் . துபாயில் நடந்த அரப் பேஷன் உலகம் நிகழ்ச்சியில்  பங்கேற்ற பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுடேலா, உலகிலேயே மிக விலையுயர்ந்த, தங்கத்திலான ஆடையை அணிந்திருந்தார். இதன் மதிப்பு ரூ.37 கோடி. என அந்த நிறுவனம் அறிவித்திருக்கிறது.
இந்தியனின் தனிநபர் வருமானம் பல ஆண்டுகளாக கணிசமாக உயராத நிலையில் இது ஒரு மிகப்பெரிய முரண்.
இம்மாதி விலையுர்ந்த ஆடைகளை சில மணிநேரத்துகாக நடிகைகள் அணிவது ஒன்றும் புதிதல்ல. பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா, கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லியை காதல் திருமணம் செய்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் அனுஷ்கா சர்மா அணிந்திருந்த ஆடையின் மதிப்பு ரூ.30 லட்சம். 2019ல் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடிகை ஈஷா தியோல் அணிந்திருந்த இளவரசி கவுனை தயார் செய்ய 350 மணி நேரம் ஆனது. அந்த கவுன் விலை ரூ.26 லட்சம். நடிகை ஷில்பா ஷெட்டி தனது திருமண நிகழ்ச்சியில் அணிந்திருந்த சிவப்பு நிற சேலையின் விலை ரூ.50 லட்சம். 2019ல் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தீபிகா படுகோன் அணிந்திருந்த இளவரசி கவுன் விலை ரூ.50.50 லட்சம். இந்த ஆடையை உருவாக்க 160 மணி நேரம் ஆனது. நடிகை ஐஸ்வர்யா ராய் தனது திருமணத்தில் காஞ்சிபுரம் புடைவை அணிந்திருந்தார். அன்றைய நாளில் அந்த புடவையின் விலை ரூ.75 லட்சம்.

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

பா.ஜ.க.விற்குத்தான் நிதி கொட்டுகிறது

0
? பிராமணனாக வாழ ஆசைப்படும் ஒரு பிற்பட்ட வகுப்பில் பிறந்தவனுக்கு தராசாரின் அறிவுரைகள்...? - ஜோஷ், அயன்புரம் ! இந்தக் கேள்வி புத்தரிடம் கேட்கப்பட்டபோது அவர் சொன்ன பதில் இது. “பிறவியினால் யாரும் பிராமணரும் ஆவதில்லை;...

அவர்  அரசியல்வாதியாகிவிட்டதால்  தனக்கு வசதியானவற்றை மட்டும்தான் பேசுவார்.

2
நீங்கள் கேட்டவை - தராசு பதில்கள் Ø  “தரமான படத்தை தாங்கிப்பிடிக்க ரசிகர்கள் தவறியதே  இல்லை'  என கமல் கூறியுள்ளாரே? - ஆ. மாடக்கண்ணு, பாப்பான் குளம். ! அவருடைய விக்ரம்  வசூலில் வெற்றிப்பெற்றுவிட்டதால் பேசும் பேச்சு...

உங்கள் சமூகநல ஆர்வம் சிலிர்க்க வைக்கிறது.

2
நீங்கள் கேட்டவை - தராசு பதில்கள்   Ø தண்ணீரில் பொறிக்கும்படியான அப்பளங்களை உருவாக்க முடியாதா? - ரேவதி, பெங்களூரு ! தொடர்ந்து ஏறிக்கொண்டேயிருக்கும் எண்ணெய் விலையினால் கேட்கிறீர்களா? முடியாது மேடம். நீரின் கொதி நிலை 100 டிகிரி (சென்ட்டிகிரேட்)...

பிரதமர் வருகையால் தமிழ் நாட்டிற்கு என்ன  பயன்?

1
? பிரதமர் வருகையால் தமிழ் நாட்டிற்கு என்ன  பயன்? - ஜோஷ், அயன்புரம் ! முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அடிக்கல் நாட்டி ஜெயலலிதாவால் கிடப்பில் போடப்பட்ட மதுராந்தகம் துறைமுகம் சாலை திட்டம் உயிர் பெற்றிருக்கிறது. ...

பிரம்மாண்டம் என்பது கோடிகளை கொட்டிப் படம் எடுப்பது அல்ல

0
 காசியிலுள்ள கியான்வாபி மசூதி,  வழக்கு குறித்து  உங்கள் நிலைப்பாடு என்ன ? - இரா. அருண்குமார்,  புதுச்சேரி – 605001 கியான்வாபி மசூதியில் நீதிமன்றக் கண்காணிப்பின் கீழ் வழக்கறிஞர் குழு ஆய்வு நடந்துகொண்டிருக்கும்போதே அதன் ரிப்போர்ட்...