0,00 INR

No products in the cart.

கோணம்

சிறுகதை

 

 – துளசி 
ஓவியம் : தமிழ்

 

து ஒரு சனிக்கிழமை காலை. பெங்களூரு நகரம் குளிரில் இருந்து தப்பிக்க போர்வையை  இழுத்துப்  போர்த்திக்கொண்டு உறங்கிக்கொண்டிருந்தது. மாலதி எழுந்து ஃபில்டர் காஃபி குடித்தவாறே வாட்சப்பில் வந்த பதிவுகளைப் பார்த்து முடித்தாள். நிம்மதியான காலை பொழுதுகள் மாலதிக்கு மிகவும் பிடித்தமானவை. இன்று மகள் ஸ்ருதி வருவதாக கூறியிருந்தாள். ஸ்ருதி பெங்களூரிலேயே திருமணமாகி கணவன், மாமியார், மாமனாருடன் வாழ்ந்து வருகிறாள். வாரம் முழுக்க வேலைக்காக ஓடி ஓடி உழைக்கும் மகள்  பிடித்த உணவை சாப்பிட்டு  சிறிது ரெஸ்ட் எடுக்க  அவ்வப்போது வருவது வழக்கம். உள்ளூரிலேயே  மகளை கட்டிக்  கொடுத்தது அந்த விதத்தில் நல்லது. மகளுக்கு  பிடித்த காலை உணவான  ஆப்பத்திற்கு அரைத்து வைத்திருந்தாள் மாலதி. வேகமாக குளித்து,  ஸ்வாமி விளக்கேற்றி விட்டு ஆப்பத்திற்கு ஏற்ற கடலைக் கறி செய்து வைத்து மகளுக்காக காத்திருக்க ஆரம்பித்தாள்.

ஒன்பது மணி  வாக்கில் ஸ்ருதியும் அவள் கணவன் ஆகாஷும் வந்து காலை உணவை ரசித்து உண்டபிறகு ஆகாஷ் “நான் என் நண்பர்களைப் பார்த்துவிட்டு வருகிறேன். சாயங்காலம் ஸ்ருதியை பிக் அப் செய்து கொள்கிறேன்” என்று சொல்லிவிட்டு சென்றான். அப்பாடா… என்று ஸ்ருதியும் மாலதியும் தேநீர் குடித்தவாறே கதைப் பேச தொடங்கினர். திருமணமாகி  இருக்கும் பெண் அம்மா வீட்டிற்கு வந்தால் தானே அவள் ஆதங்கத்தை கொட்டி தீர்க்க முடியும். ஸ்ருதியும் ஆரபித்தாள். “அம்மா நீ எவ்வளவு  இண்டிபெண்டெண்ட் வுமன். அப்பா போனப்பறம் எவ்வளவு ஸ்ட்ராங்கா எங்களை வளர்தினே. உன்கூட  வாழ்ந்துட்டு அந்த வீட்ல போனால் எனக்கு எரிச்சலா வருது.  அத்தைக்கு எதுக்கெடுத்தாலும் மாமாவும் ஆகாஷும் துணைக்கு வேணும். சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட யாரையோ எதிர்பார்க்கறாங்க. மாமா அவங்கள தாங்கறத பாத்தா எனக்கு எரிச்சலா வருது. ஒரு மாத்திரை கூட தானே எடுத்து போட்டுக்க மாட்டேங்கிறாங்க. நம்ப அப்பா உனக்கு ஒரு கப் தண்ணி கூட எடுத்துக்  குடுத்து  நான் பார்த்ததில்லை. ஆகாஷ் கிட்ட இதைப் பத்தி நான் சொன்னா “எங்க அம்மா ஒரு காலத்துல எவ்வளவு வேலைப் பாத்தாங்க தெரியுமா. இப்போதான் இப்படி ஆயிட்டாங்க. முன்னாடி எல்லாம் ரெண்டு மூணு பஸ் பிடிச்சு மார்க்கெட்டுக்குப் போய் காய் வாங்கறது முதல் எல்லாமே அம்மாதான் பண்ணிக்கிட்டு இருந்தாங்க. ஒரு வேலைக்கு கூட யாரையும் துணைக்கு வெச்சுக்கல”னு சொல்றாரு. இதெல்லாம் நம்பறா மாதிரியா இருக்கு?” என்று அங்கலாய்த்தாள்.

அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த மாலதி, “சரி விடு. வயசானவங்க எப்படி இருந்தா உனக்கென்ன. உன்ன எதுவும் படுத்தாம இருந்தா அதுவே எனக்கு போதும்” என்று சொல்லிவிட்டு மதிய சமையலை கவனிக்கச் சென்றாள். ஸ்ருதி சோபாவில் சாய்ந்து கொண்டு நெட்ஃப்லிக்ஸில் படம் பார்க்க ஆரம்பித்தாள்.

மதியம் ஸ்ருதிக்கு பிடித்த வத்தக்  குழம்பு, உருளைக்கிழங்கு கறி செய்து அம்மாவும் பெண்ணும் சாப்பிட உட்கார்ந்தனர். அப்போது சரியாக மாலதியின் மொபைல் போன் அடித்தது. அதே பெங்களூரின் இன்னொரு பகுதியில் வாழ்ந்து வரும் மாலதியின் தங்கை ஜானகிதான் அழைத்திருந்தாள். பேசிவிட்டு கவலையுடன் உட்கார்ந்த மாலதி ஸ்ருதியிடம் சொன்னாள், “சித்திதான் பேசினா. அங்கேயும் ஒரே பிரச்னைதான். அவளோட புது மருமகள் நவ்யா கூட ஏதோ தகராறு போல. பாவம்”னு சொன்னாள். உடனே ஸ்ருதி “பாவம்மா நம்ம சித்தி. வேலைக்கும் போனதில்லை. சித்தப்பா சித்திய உருட்டி மிரட்டி வெச்சு அவங்க தன்னம்பிக்கை எல்லாத்தையும் சிதைச்சுட்டார். கல்யாணத்துக்கு முன்னாடி வேலைக்குப்  போயிட்டிருந்த சித்திய வேலைய விட்டு நிறுத்தி, வீட்டுல அடைச்சு போட்டுட்டார். அதோட அவங்க வாழ்க்கைல நடந்த நிகழ்ச்சி எல்லாமே அவங்களுக்கு ஒரு இன்செக்யூரிடிய உண்டு பண்ணிருச்சு. இப்போ ரொம்ப பையன் மேல டிபெண்டெண்டா இருக்காங்க. அது நவ்யாக்கு பிடிக்கலபோல”னு சொன்னா.

மாலதி அவளை ஒரு அர்த்தமுள்ள பார்வை பார்த்தாள். “பாத்தியா இந்த கான்டெக்ஸ்ட் எல்லாம் உனக்கு இருக்கறதால உனக்கு அவங்க கோணத்துல இருந்து பாக்க முடியுது. ஆனா நவ்யாக்கு அந்த பழைய சித்தியைத்  தெரியாது. அவளுக்கு தெரிஞ்சது இப்போ இருக்கற இன்செக்யூர் சித்தியதான். அதே மாதிரிதான் உனக்கு உன்னோட இளவயசு மாமியாரை தெரியாது. எல்லாருக்கும் வாழ்க்கையில வேற வேற நிகழ்ச்சிகள் நடக்குது. சிலர் அந்த நிகழ்ச்சிகளால இன்னும் ஸ்ட்ராங்க் ஆறாங்க. சிலர் இன்னும் டிபெண்டெண்ட் ஆறாங்க. நமக்கு அவங்க கடந்து வந்த பாதை தெரியாது. கிவ் தெம் தி பெனிஃபிட் ஆஃப் டவுட் அண்ட் ஃபோகஸ் ஆன் யுவர் லைஃப். அவங்கள நீ மாத்த முயற்சி பண்ணாம நீ உன் வாழ்க்கையைப் பாரு. நீ ஒரு சிறந்த எடுத்துக்காட்டா இருந்தா உன்னைப் பார்த்தே  அவங்க இன்னும் கொஞ்சம் தைரியமா இருக்க ஆரம்பிப்பாங்க. இதைப் பத்தி எல்லாம் நீ ஒர்ரி பண்ணி உன் நிம்மதிய கெடுத்துக்காதே.” என்று சொன்னார்.

புதிய கோணத்தில் சிந்திக்க ஆரம்பித்த ஸ்ருதி அம்மாவுக்கு ஒரு கட்டி முத்தம் கொடுத்தாள். ‘யு ஆர் தி பெஸ்ட் அம்மா’ என்று சொல்லிவிட்டு, ஒரு குட்டித் தூக்கம் போட்டாள். மாலை ஆகாஷ் வந்ததும் சந்தோஷமாக அவனுடன் கிளம்பி தன் வீட்டிற்கு சென்றாள்.

1 COMMENT

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

ரெய்டு

3
  “சரிங்க அண்ணா வெச்சுடறேன்...” போனை டேபிள் மேல் வீசி விட்டு “அம்மா அம்மா...” என அலறினபடி கிச்சனுக்கு ஓடினான் செந்தில். குக்கரின் மூன்றாவது விசிலுக்காகக் காத்திருந்த பார்வதி எரிச்சலுடன் திரும்பினாள். ‘என்னடா’ என்றது பார்வை. “அப்பாவோட ஆபிஸ்ல...

விசிட்டிங் கார்ட்

1
அந்த ஸ்டேஷனில் வண்டி வந்து நின்றபோது மணி நாலரை இருக்கும். வண்டி ஒரு குலுக்கலுடன் நின்றதால் மேல் பர்த்தில் படுத்திருந்த வேதமூர்த்தி திடுக்கிட்டு எழுந்து தலையைத் தூக்கிப் பார்த்தார். விழுப்புரம் போல இருந்தது....

மங்களூர்.மாதுவும் மங்குஷ் பேட்டும்

0
  மன்னார்குடி குண்டப்பா விஸ்வநாத்ன்னு பெயர் வாங்கிய கோச். கட்ட கோபால் இப்படி கவலையா, அதுவும் அவன்வீட்டு, இடிஞ்ச சுவரில் உக்கார்ந்து, யாரும் பார்த்தது இல்லை. மங்களூர் மாதுவும் கேப்ஸ்ம் சீனுவும். "கவலைப்படாதே சகோதரா நம்ம...

மஞ்சரி சுடப்பட்டாள்

 31.10.1984- புதன் கிழமை : காலை 9.45 மணி ‘இந்திய பொருளாதாரப் பிரச்னைகள்’. தீபக் ஷிண்டே எழுதியது. அதைப் படித்தாலே போதும்.  பாஸ் செய்துவிடலாமென்று சொல்லி  சுந்தர் அன்பளிப்பாகக் கொடுத்திருந்தான். அதை வாங்கிய நேரம், சந்திரன்...

வியாபார மொழி

3
சிறுகதை ஆர்.நடராஜன்   பொது கூட்டத்தில் பேசிய மொழி வளர்ச்சி மந்திரி “வடவர் மொழியும் வேண்டாம், வடவர் வழியும் வேண்டாம்... நாம் நாமே நமக்கு நாமே” என்று உரக்க முழங்கிவிட்டு வீட்டுக்கு வந்தார். நல்ல பசி... “சாப்பிட...