புத்தகப் புழுவா நீங்கள்? பணம் சம்பாதிக்க பயனுள்ள டிப்ஸ் இதோ:

புத்தகப் புழுவா நீங்கள்? பணம் சம்பாதிக்க பயனுள்ள டிப்ஸ் இதோ:

1. படித்த புத்தகத்தினைக் குறித்த மதிப்புரை சஞ்சிகைகளில் எழுதலாம்; வ்வாறு எழுதுவதன் மூலம், அந்தப் புத்தகத்தினைப் பற்றி பலர் தெரிந்துக் கொள்ள ஏதுவாகும். மேலும், மதிப்புரை எழுதுவதன் மூலம், சஞ்சிகை குறிப்பிட்டத் தொகை வழங்கும்.

2. புத்தகம் சார்ந்த காணொலிகளை யூடியூபில் பதிவேற்றலாம்; வ்வாறு பதிவேற்றி, புத்தகத்தை குறித்த உங்களது கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளலாம். புத்தகத்தை பரிந்துரைத்து, அதன் மூலம், தரகுத் தொகை (commission through affiliate marketing) பெறலாம்.

3. புத்தகம் சார்ந்த வலைப்பக்கம் (blog) தொடங்கலாம்; வ்வாறு புத்தகம் சார்ந்த வலைப்பதிவுகளின் மூலம், அதில் விளம்பரங்கள் மூலம் பணம் சம்பாதிக்கலாம்.

4. புத்தகம் சார்ந்த கருத்துக்களை சாராம்சமாக (summary) வெளியிடலாம்; வ்வாறு சாராம்சமாக வெளியிடும் போது, புத்தகத்தைப் பற்றி அறிந்துக் கொள்ள ஏதுவாக இருக்கும். அத்தகைய சாராம்சங்களைத் தொகுத்து, ஒரு புத்தகமாக வெளியிடலாம். புத்தகங்களை பரிந்துரைத்து பணம் சம்பாதிக்கலாம்.

5. ல்வேறு புத்தகங்களை படித்தக் காரணத்தினால், புதிய புத்தகங்களை எழுதும் அளவிற்கு, உங்களுக்கு சரக்கு இருக்கும். அதனைக் கொண்டு, புதிய புத்தகம் எழுதலாம். அதன் மூலம், பணம் சம்பாதிக்கலாம். ஆங்கில எழுத்தாளர், ஸ்டீபன் கிங் சொல்வது போல், Read everywhere, write in a single place. எங்கும் படியுங்கள். குறிப்பிட்ட இடத்தில் எழுதுங்கள்.

6. பதிப்பகங்களில் வேலைக்கு சேரலாம்; ல பதிப்பகங்களில், புத்தகங்களை அச்சுக்கு சரிபார்ப்பது (proof reading) போன்ற வேலைகளில், புத்தகத்தினை மேம்படுத்தும் குழுவில் (editorial team) வேலைக்கு சேரலாம்.

7. சினிமாத் துறையில் கதை உருவாக்கும் குழுவில் பணி புரியலாம்; சினிமாக்களில் திரைக்கதை உருவாக்கத்திற்கு பல்வேறு சம்பவங்களை எடுத்துக் கொடுக்க வேண்டும். அதற்கு பல்வேறு புத்தகங்களை படிக்கும் திறன் உதவும்.

8. ஒலிப்புத்தகம் (audio books) படிக்கலாம்; சரியான உச்சரிப்புடன், ஏற்ற இறக்கங்களுடன் புத்தகம் படிக்கும் திறன் இருந்தால், ஸ்டோரி டெல் (story tel) போன்ற ஒலிப்புத்தகங்களைப் படிக்கும் நிறுவனங்களில் வேலைக்கு சேர்ந்து, அதன் மூலம், பணம் ஈட்டலாம்.

9. ங்களிடம் அதிக புத்தகங்கள் இருக்கும் பட்சத்தில், தனியார் நூலகம் தொடங்கலாம். சந்தாக்களின் மூலம், பணம் ஈட்டலாம். தனியார் நூலகத்தினைப் புதிய தொழிலாகத் தொடங்கி அதன் மூலம் பணம் ஈட்டலாம்.

10. எழுத்தாளர்களையும், பதிப்பகங்களையும் இணைக்கும் பணியில் (literary agent) ஈடுபடலாம்; ல்ல புத்தகங்களை, எழுத்தாளர்களை அடையாளம் கண்டு, அவர்களின் புத்தகங்களை பதிப்பகங்களில் அச்சேற்ற உதவி, அதன் மூலம், பணம் சம்பாதிக்கலாம்.

11. ரு மொழிகளில் திறன் இருந்தால், புத்தகங்களை ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு மொழி பெயர்த்து அதன் மூலம், பணம் ஈட்டலாம்.

12. புத்தகங்களுக்கு படம் வரையலாம்; அட்டைப் படம் வடிவமைக்கலாம்; டம் வரைவது, அட்டைப் படம் வடிவமைப்பது போன்ற திறன்களை வளர்த்துக் கொண்டால், புத்தகத்தின் கருவிற்கு ஏற்ற படங்களை, அட்டைப் படத்தை பதிப்பகங்களில் சமர்ப்பித்து, அல்லது எழுத்தாளரிடம் சமர்ப்பித்து பணம் ஈட்டலாம்.

13. ற்கனவே அச்சில் உள்ள, ஆனால் மின்னூலாக இல்லாத புத்தகங்களை மின்னூலாக மாற்றிக் கொடுத்து, அவற்றைச் சந்தைப் படுத்தி, அதன் மூலம், பணத்தை ஈட்டலாம்.

14. புத்தகங்களில் படித்த கதைகளை சுவாரசியமாக சொல்லி, பவா செல்லதுரை போல் கதை சொல்லியாக, பள்ளிகளில், கல்லூரிகளில், யூடியூப் காணொலியாக பதிவேற்றி பணம் ஈட்டலாம்.

15. பேச்சாளராக பணியாற்றலாம்; ஒரு கருத்துருவை எடுத்துக் கொண்டு, அதனைப்பற்றி பல்வேறு புத்தங்களில் உள்ள கருத்துக்களை உள்வாங்கி, அதனைக் கோர்வையாக பேசி, மக்களிடம் எடுத்துச் சென்று பணம் ஈட்டலாம்.

16. வெளியிடலாம்; புத்தகம் குறித்த திறன் காணொலிகளை, (podcast) இணையத்தில் பதிவேற்றி பணம் ஈட்டலாம்.

17. புத்தகங்கள் குறித்த திறனாய்வை பதிப்பகங்களுக்கு பகிரலாம்; goodreads போன்ற இணையதளங்கள், மற்றும் பதிப்பகங்கள் போன்ற வற்றில், புத்தகத்தின் திறனாய்வினைப் பகிரலாம். எதிர்காலத்தில் பதிப்பகங்கள் முன் கூட்டியே உங்களை அணுகி, புத்தகத்தினை திறனாய்வு செய்யச் சொல்வார்கள். அதன் மூலம், பணம் ஈட்டலாம்.

18. குறிப்பிட்டத் துறை சார்ந்த புத்தகங்களை அதிக அளவில் படிக்கும் பட்சத்தில், அது சார்ந்த வல்லு நராகினால், அந்த துறை சார்ந்த கருத்துகளுக்கு, உங்களிடம் மவுசு இருக்கும். அது சார்ந்த பேச்சுக்கள், கட்டுரைகள், நேர்காணல்கள் போன்றவற்றை செய்து, அதன் மூலம் பணம் ஈட்டலாம்.

19. புத்தகம் எழுதும் கலையினை கற்பிக்கலாம், அதனைக் குறித்து எழுதலாம்; ரு புத்தகம் எவ்வாறு கட்டமைக்கப்படுகிறது என்பதைக் குறித்த புரிதல் உருவாகும் போது, புத்தகம் எழுதும் கலையைக் குறித்து விவரித்து, புத்தகங்கள் எழுதி, வகுப்புகள் எடுத்து, அதன் மூலம் பணம் ஈட்டலாம்.

20. எழுத்தாளர்களுக்கு பிரத்யேக வாசகர் (ideal reader) ஆகி, பணம் ஈட்டலாம்; எழுத்தாளர்களின் புத்தகங்களை மதிப்பீடு செய்து, எழுத்தாளருக்கு ஆலோசனை வழங்கி, அவர்களின் பிரத்யேக வாசகர் ஆகி, அவர்களது படைப்பு களை ஆரம்பத்திலேயே படித்து ஆலோசனை வழங்கி, அதற்கு பணம் ஈட்டலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com