ஏமாறாமல் தப்பித்துக்கொள்வது நம்மிடம்தான் இருக்கிறது.

ஏமாறாமல் தப்பித்துக்கொள்வது நம்மிடம்தான் இருக்கிறது.

தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப மோசடித் தந்திரங்களும் தகவமைக்கப்படுகின்றன.

பெரும்பாலானோர் மிக எளிதாக ஏமாறும் விஷயம் - தொலைபேசி மூலம் அழைத்து ஏடிஎம் கார்டு விவரங்களைக் கேட்டு வங்கியில் இருக்கும் பணத்தை சுருட்டுவது.

நன்றாகப் படித்த, வங்கியிலேயே அதிகாரியாகப் பணி செய்கிற ஒருவர், தானே இவ்வாறு ஏமாந்ததாக ஓராண்டுக்கு எழுதியிருந்தார். 

எனக்கு கணக்கே இல்லாத எஸ்பிஐ வங்கியில் நான் பான் கார்டை விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். நான் விண்ணப்பிக்காத வேலைக்கு எனக்கு 16000 ரூபாய் சம்பளத்தில் பணிநியமனம் கிடைத்திருக்கிறது. என்னுடைய செல்பேசி சிம் கார்டு தடைசெய்யப்பட இருக்கிறது. சபரி சென்ட்ரல் பள்ளி எனக்கு நாளுக்கு 8000 ரூபாய் சம்பளத்தில் வேலை தர முன்வந்திருக்கிறது. இப்படி பலவிதமான மெயில்கள் உங்கள் இ மெயிலுக்கு வரும். சாம்பிளுக்கு சில. 

Dear User SBI Account Will Be Blocked today please update your PAN Card Number Thank You SBI Bank click here ........................... Thankyou SBI Team

- +917044799199

Dear Customer Your User SBI YONO Account has been Suspended Today Update Your PAN number Click here on the link ...........................

- +919931899965

Dear Your electricity power will be disconected at 9:30pm as your last month bill wasn't update call us 8918107571 immediately think you

- +919109817022

Datetradingacbal Your application has been approved in our company and the salary is 16000 RS. Contact for details: ........................... / 919176343953 KEDIAC

- JXKEDIAC

Dearimpalert you have passed our interview, you can get 8000 Rs/Day. Contact to discuss detail: ........................... / 917774072379

Thanks regards

surabibullion

- AXSURABU

Dear Parents As per the records

you have passed our interview, can get 8000 Rs/Day. Please contact to discuss detail: ........................... /918142801202

Regards

- Sabari Central School

Dear customer your SIM document has been Rejectd Your Service will be deactivate within 24h,r,s. Call Customer executive Sunil +91-8926056795 Thank you

- +919903822939

இப்படி

அறிமுகமில்லாத எண்களிலிருந்து வரும் அழைப்புகள் / குறுஞ்சேதிகளை நம்பி தகவல்களைத் தர வேண்டாம் என்று வங்கிகளும், ரிசர்வ் வங்கியும், செல்போன் நிறுவனங்களுமேகூட தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றன. ஆனாலும் ஏமாறுகிறவர்கள் ஏமாந்து கொண்டேதான் இருக்கிறார்கள்.

ஏமாறுகிறவர்கள் மூன்றே வகைதான் –

1. சட்டென்று மூளை வேலை செய்யாமல் ஏமாந்துபோய் விவரங்களைக் கொடுப்பவர்கள்.

2. இதில் சொன்னது நடந்து விடுமோ என்று பயந்துபோய் விவரங்களைத் தரும் அப்பாவிகள்.

3. உழைக்காமலே சம்பாதிக்க வேண்டும் என்ற பேராசை கொண்டவர்கள்.

முதல் இரண்டு வகையினர் விழிப்புணர்வின் மூலம் தப்பித்துக் கொள்ளலாம். மூன்றாவது வகையினருக்கு என்ன சொல்லியும் திருந்தப் போவதில்லை.

வங்கி விவரங்களைத் தருமாறு யார் கேட்டாலும் தரவே கூடாது என்று வீட்டில் செல்பேசி பயன்படுத்தும் எல்லாருக்கும் சொல்லிக் கொடுப்பது அதுவே பெருமளவுக்கு காப்பாற்றிவிடும்.

 புதுக்கோட்டையில் ஒரு லட்சத்துக்கு மாதம் 15,000 தருவதாகச் சொல்லி கோடிக்கணக்கில் சுருட்டிக்கொண்டு ஓடிவிட்டனர். இது போன்ற திட்டங்கள் குறித்து எத்தனை முறை சொன்னாலும், சொல்லும்போதெல்லாம் யாராவது ரெண்டு பேர் வந்து, 'எத்தனை வருஷமாத் தராங்க தெரியுமா?', 'ஏமாத்தறத நீ நேர்ல பாத்தியா?', 'சம்பாதிக்கலன்னா விடு, அடுத்தவங்க மனசப் புண்படுத்தாத', 'இது அது மாதிரி இல்ல வேற ஆப்ஷன் ஹெட்ஜிங்' என்றெல்லாம் மல்லுக்கு நிற்பார்கள். அப்படிப்பட்டவர்கள் இருக்கும்வரை இதுபோன்று வாரம் ஒரு செய்தி வந்தபடிதான் இருக்கும். 

கொங்கு வட்டாரத்தில் கேட்டர்பில்லர் போன்ற கட்டுமான இயந்திரங்களில் முதலீடு செய்து பல மடங்கு லாபம் பெறலாம் என்று ஒரு கும்பல் வசூல் வேட்டையில் கிளம்பியிருப்பதாகத் தெரிய வந்துள்ளது.

முதலில் பணமாகவே திரட்டினார்கள்

பிறகு ரியல் எஸ்டேட்டில் முதலீடு என்றார்கள்.

மீன் பண்ணையில் முதலீடு என்றார்கள்

பங்குச் சந்தையில் முதலீடு என்றார்கள்

கம்மாடிடி மார்க்கெட் என்றார்கள்

ஹெட்ஜிங் என்றார்கள்...

இப்போது டிப்பர், எக்ஸ்கவேட்டர்கள் .......

நாளை வேறு ஏதாவது வரலாம்.

ஏமாறாமல் தப்பித்துக் கொள்வது நம்மிடம்தான் இருக்கிறது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com