அச்சுறுத்தலாக மாறி வரும் நிஞ்ஜா ஆமைகள்!

அச்சுறுத்தலாக மாறி வரும் நிஞ்ஜா ஆமைகள்!

நிஞ்ஜா எனப்படும் இந்த அழகான ஆமைகள் அளவில் மிகவும் சிறியவை, ஒரு தீப்பெட்டியில் அடக்கி விடலாம் அவ்வளவு சிறிய மினியேச்சர் உருவங்கள் அவை. அதனால் தான் இன்று உலகின் செல்லப்பிராணிகளுக்கான சந்தையில் அவை மிகவும் விரும்பப்படுகின்றன. கிட்டத்தட்ட போன்சாய் மரங்களுக்கு கிடைக்கும் மவுசு போலத்தான். சிறியதாக கைக்கு அடக்கமாக இருப்பதாலேயே இது மிகவும் மதிக்கப்படுகிறது, இந்த வகையிலான சிவப்பு காது ஆமைகள் 'நிஞ்ஜா கடலாமைகள்' எனும் காமிக் தொடருக்குப் பிறகு உலகெங்கிலும் உள்ள குழந்தைகள் மத்தியில் வெகு வேகமாகப் பிரபலமடைந்தன.

இந்த ஆமைகள் தற்போது சென்னையின் வேளச்சேரி, பெரும்பாக்கம், பள்ளிக்கரணை சதுப்பு நிலங்கள் மற்றும் செங்கல்பட்டு உட்பட இன்னும் சில இடங்களில் உள்ள ஏரிகளை ஆக்கிரமித்துள்ளன என கடலாமைகள் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் குறித்த ஆய்வில் ஈடுபட்டிருக்கும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். குழந்தைகளின் வற்புறுத்தல் காரணமாக அவற்றை வாங்கிய சில செல்லப்பிராணி உரிமையாளர்கள் மீண்டும் அவற்றை நீர்நிலைகளில் விட்டிருக்க வேண்டும் என்று நிபுணர்கள் நம்புகிறார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளில் சென்னையைச் சுற்றிலும் உள்ள கடற்கரையோரங்களில் அப்படி விடப்பட்ட சுமார் 12 நிஞ்ஜா ஆமைகள் மீட்கப்பட்டு கிண்டி சிறுவர் பூங்காவிற்கு கொண்டு செல்லப்பட்டன.

பொதுவாக இத்தகைய நிஞ்ஜா ஆமைகள் மிகுந்த ஆக்ரமிப்பு குணம் கொண்டவை என்பதால் அவை பிற கடல்வாழ் உயிரினங்களுக்கும் மனிதர்களுக்கும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. நிஞ்சா கடல் அமைகள் சால்மோனல்லா, ஷிஜல்லா போன்ற நோய்க்கிருமிகளைக் கொண்டுள்ளன, அவை மனிதர்களுக்குப் பரவி மரணத்தை ஏற்படுத்தி உள்ளன.

தெற்கு அமெரிக்கா மற்றும் வடக்கு மெக்சிகோவை பூர்வீகமாகக் கொண்ட இந்த நன்னீர் ஆமைகள் தங்களுடைய சிவப்பு நிறக் காதுகளுக்காக உலகில் பெரிதும் அடையாளம் காணப்பட்டு உலகம் முழுதும் பல்வேறு பகுதிகளில் செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படுகின்றன. சந்தையில் இந்த வகை நிஞ்சா ஆமைகள் ரூ.500க்கு கிடைக்கின்றன. தாவரங்கள், விலங்குகள் என அனைத்தையும் உண்ணக்கூடியவை!

கேரள வன ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானியான சஜீவ் இந்த ஆமைகளைக் குறித்த ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கி உயிரியல் படையெடுப்புக்கான நோடல் மையத்தை அமைத்துள்ளார், இந்த ஆமையின் பிரச்சனை என்னவென்றால், இவை தாவரங்கள், தவளை, பூச்சி, மீன் மற்றும் மற்ற வகை ஆமைகள் என அனைத்தையுமை உண்ணக்கூடியவை.

சென்னையில், இந்த சிவப்பு காது ஆமைகளின் எண்ணிக்கையை மட்டும் நாம் சரியான நேரத்தில் கட்டுக்குள் கொண்டு வராவிட்டால், இங்கு ஏற்கனவே பூர்வீகமாக இருக்கும் கருப்பு குளத்து ஆமைகள் மற்றும் மென்மையான ஓட்டுடன் கூடிய ஆமைகள் இனம் அழிந்துவிடும். இந்திய ஏரிகளில் சுமார் 29 வகையான நன்னீர் ஆமைகள் உள்ளன.

சுங்கத்துறை சோதனையில் பிடிபட்ட 7,200 நிஞ்சா ஆமைகள் 2018 ஆம் ஆண்டில், இந்த ஆமைகளில் சுமார் 7,200 ஆமைகள் செல்லப் பிராணிகளுக்கான சந்தைக்காக பாங்காக்கில் இருந்து கொண்டு வரப்பட்டபோது சென்னை சுங்கத்துறையினரால் கைப்பற்றப்பட்டன. 2019-ம் ஆண்டு திருச்சி விமான நிலையத்தில், இலங்கையில் இருந்து கொண்டு வரப்பட்ட 4,500 நிஞ்ஜா ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டன. IUCN இன் உலகளாவிய ஆக்கிரமிப்பு இனங்கள் தரவுத்தளத்தின்படி, 1989 மற்றும் 1997 க்கு இடையில், சுமார் 52 மில்லியன் ஆமைகள் அமெரிக்காவிலிருந்து மட்டும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்.

தற்போது உலகெங்கிலும் உள்ள முக்கியமான நீர்நிலைகளை ஆக்கிரமித்து, உலகின் டாப் 100 ஆக்கிரமிப்பு உயிரினங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. "தீவுகள் நிறைந்த ஆஸ்திரேலியாவில், இந்த ஆமைகளை உள்நாட்டு மற்றும் வெளிப்புற நீர்நிலைகளில் இருந்து அகற்றுவதற்கு மிகப்பெரிய தொகை செலவிடப்பட்டது. அதன்காரணமாகவே அந்நாடு அதைக் கடத்துபவர்களுக்கு நீதிமன்றக் காவல் உள்ளிட்ட கடுமையான சட்டங்களைக் கொண்டு வந்தது," என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

நாம் இப்போதும் இந்த ஆமைகளைக் குறித்த சரியான விழிப்புணர்வைப் பெறாமல் போனால், இந்த ஆமைகள் நகரின் அனைத்து நீர்நிலைகளையும் கைப்பற்றி ஆக்ரமித்து ஏற்கனவே அங்கு வாழ்ந்து கொண்டிருக்கும் பூர்வீக ஆமைகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி விடும் அபாயம் வெகு சீக்கிரத்தில் வந்து விடும். எனவே, இவற்றை அகற்ற விரும்புவோர் திறந்திருக்கும் பிற நீர்நிலைகள் மற்றும் கடலில் விடாமல் கிண்டி சிறுவர் பூங்காவில் அவற்றை ஒப்படைக்க முயற்சியுங்கள் என சென்னை வனவிலங்கு காப்பாளர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

உண்மையில், அவர்கள் இப்போது ஒரு படி மேலே சென்று, நீர்நிலைகளில் இந்த ஆமைகளின் தடயங்களைக் காட்டக்கூடிய சுற்றுச்சூழல் டிஎன்ஏ கருவி ஒன்றை உருவாக்கியுள்ளனர். "எல்லா ஏரிகளையும் எங்களால் பார்க்க முடியாததால், இந்த கருவியை நாங்கள் உருவாக்கியுள்ளோம். இது இந்த ஆமைகளின் டிஎன்ஏ தடயங்களைக் காட்ட உதவும், பின்னர் அவற்றை காடுகளில் இருந்து மீட்டு ஏரிகளில் இருந்தும் ஒழிப்போம். இந்த கிட்டை மற்ற மாநிலங்களுடனும் பகிர்ந்து கொள்ளலாம். அவர்கள் அதை விரும்புகிறார்கள், "என்று அவர் கூறினார்.

"அவர்கள் எங்களை 0487-2690222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்," என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com