ப. சிதம்பரத்தின் காமெடி ஸ்டேட்மென்ட்

ப. சிதம்பரத்தின் காமெடி ஸ்டேட்மென்ட்

ரண்டுக் கட்ட சட்டமன்றத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், குஜராத் தேர்தல் களம் சூடு பிடித்துவிட்டது.  ஆளும் பா.ஜ.க.வின் பிரதான எதிர்க்கட்சியாக காங்கிரஸ் இருந்து வரும் சூழ்நிலையில், மூன்றாவது போட்டியாளராக களமிறங்கி இருக்கிறது ஆம் ஆத்மி.

அண்மையில் முன்னாள் நிதி அமைச்சரான நம்ம ஊரு ப.சிதம்பரம் குஜராத் சென்றிருந்தார். அங்கே அகமதாபாத்தில் உள்ள கட்சி அலுவலகத்திற்குச் சென்று மாநில காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் மத்தியில் பேசினார்.  ஆனால், அவர் பேச்சு, “செம காமெடி” என்று காங்கிரஸ் வட்டாரத்திலேயே விமர்சிக்கப்படுகிறது.

“குஜராத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் பா.ஜ.க. இந்தத் தேர்தலில் தோற்கடிக்கப்படவேண்டும்” என்று கூறிவிட்டு, அதற்கு ஒரு காரணம் சொன்னார் பாருங்கள்! “ஐந்து அல்லது பத்தாண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சி மாற்றம் நடப்பதுதான் நல்லது! எனவே, வரும் தேர்தலில் நாம் பா.ஜ.க. வைத் தோற்கடித்து, ஆட்சி அமைக்க வேண்டும்...”

இதைக் கேட்டதும், கட்சிக்காரர்கள், “ மக்களிடம் போய் இப்படிச் சொன்னால் நமக்கு ஓட்டுப் போட்டு விடுவார்களா? என்று சிரித்தபடியே கேள்வி எழுப்பினார்கள்.

அந்த மீட்டிங்கில் இன்னொரு விஷயத்தையும் கவனிக்க முடிந்தது.  மேடையின் பின்னணியாக வைக்கப்பட்டிருந்த பேனரில்  மகாத்மா காந்தி, சர்தார் பட்டேல்,  சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் படங்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தன. காந்தி குடும்பத்து ஆசியுடன் தலைவர் ஆகி இருக்கும் மல்லிகார்ஜுன கார்கே படம் மிஸ்ஸிங். ஒரு வேளை சிதம்பரமும், குஜராத் காங்கிரசாரும்   கார்கேவைத் தலைவராக ஏற்றுக் கொள்ளவில்லையோ!

குஜராத் காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் இன்னொரு அதிருப்தியும் நிலவுகிறது. கன்யாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை பாரத ஒற்றுமை பாதயாத்திரை செல்லும் ராகுல் காந்தி, குஜராத்தில் காலடி வைக்காமல் போகிறார். தேர்தல் வரவிருக்கும் சூழ்நிலையில் ராகுல்  குஜராத்தைப் புறக்கணிக்கலாமா? என்று அவர்கள் மனம் வெறுத்துப் போய் இருக்கிறார்கள்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com