உங்கள் வார்த்தைகளுக்காக 'நீங்கள் வெட்கப்பட வேண்டும்'

உங்கள் வார்த்தைகளுக்காக 'நீங்கள் வெட்கப்பட வேண்டும்'

“தி காஷ்மீர் ஃபைல்ஸ்” இந்தி திரைப்படம் இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் 'பனோரமா' பிரிவில் திரையிடப்பட்டது குறித்து அதன் விருது தேர்வுக்குழுத் தலைவர் நடாவ் லபிட் கடுமையான விமர்சனங்களை வெளியிட்டார். இது சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.

 “இந்திய சர்வதேச திரைப்பட விழாவைப் போன்ற மதிப்புமிக்க திரைப்பட விழாவின் கலைப் போட்டிப் பிரிவுக்குப் பொருத்தமற்ற, அருவருக்கத்தக்க, பிரசார பாணியிலான படம் திரையிடப்பட்டுள்ளது,” என்ற அவருடைய கருத்து தற்போது பல்வேறு எதிர்வினைகளை எழுப்பியிருக்கிறது.

திரைப்பட விழாவின் நிறைவு விழாவில் அமைச்சர் அனுராக் தாக்கூர் முன்னிலையில் இந்த வலுவான விமர்சனத்தை திரைப்படத்தின் மீது முன்வைத்தார். தேர்வுக் குழுவின் தலைவரான லபிட், “நாங்கள் (தேர்வுக் குழு உறுப்பினர்கள்) அனைவரும், காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தால் கலக்கமடைந்தோம், அதிர்ச்சியடைந்தோம். இது ஒரு மதிப்புமிக்க திரைப்பட விழாவின் கலைப் போட்டி பிரிவுக்குப் பொருத்தமற்ற, அருவருக்கத்தக்க, பிரசார திரைப்படமாக எங்களுக்குத் தோன்றியது” என்றார்.

இந்தியாவுக்கான இஸ்ரேலிய தூதர், நவோர் கிலோன் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் நடாவ் லபிட்டை விமர்சித்துப் பதிவிட்டுள்ளார். அதில், “நடாவ் லபிட்டுக்கு ஒரு திறந்த மடல். இதை என் இந்திய சகோதர சகோதரிகளும் புரிந்துகொள்ளவேண்டும் என்பதால், நான் ஹீப்ரூவில் எழுதவில்லை. உங்கள் வார்த்தைகளுக்கு   நீங்கள் வெட்கப்படவேண்டும். இஸ்ரேல் மீதான இந்தியாவின் அன்பைக் கொண்டாடவே ஒரு இஸ்ரேலியராக உங்களையும் தூதராக அழைத்தார்கள். இந்திய கலாசாரம், விருந்தாளி என்பவர் கடவுளைப் போன்றவர் எனக் கூறுகிறது. சர்வதேச திரைப்பட விழாவில் விருது தேர்வுக் குழுவில் பங்கேற்குமாறு இந்தியா உங்களுக்கு விடுத்த அழைப்பையும் உங்கள் மீது வைக்கப்பட்ட நம்பிக்கை, மரியாதை, விருந்தோம்பல் ஆகியவற்றைத் தவறாகப் பயன்படுத்திவிட்டீர்கள். வருந்துகிறேன்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com