கோடீஸ்வரர்கள் செய்யும் தொழில்கள் எவை?

கோடீஸ்வரர்கள் செய்யும் தொழில்கள் எவை?

ந்த தொழில்களை செய்வதன் மூலம், நாம் கோடீஸ்வரர்கள் ஆகலாம் என்ற எண்ணம் நமக்குத் தோன்றலாம்.

அமெரிக்காவின் கோடீஸ்வரர்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து பிரசுரிக்கப்பட்ட 'த மில்லினியர் நெக்ஸ்ட் டோர்' (The Millionaire Next door), அதாவது அடுத்த வீட்டு கோடீஸ்வரர், என்ற புத்தகத்தில், கோடீஸ்வரர்கள் செய்யும் தொழில்களைப் பற்றி பின்வருமாறு உள்ளது. இந்தப் புத்தகம் நல்லதொரு புத்தகம். கோடீஸ்வரர்களைப் பற்றி நம்முடைய பிம்பங்களைத் தகர்க்கும் ஒரு புத்தகம். முடிந்தால் படியுங்கள். அவற்றின் தரவுகளையும் அதன் மூலம், நாம் கற்றுக் கொள்பவற்றையும் பார்ப்போம்.

தரவு; 2/3 பங்கு கோடீஸ்வரர்கள் சொந்தமாக தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

பாடம்; சுயதொழில் செய்வதன் மூலம், நம்மால் அதிகமாகப் பணத்தைப் பெருக்க முடியும். கோடீஸ்வரர்கள் ஆகமுடியும்.

தரவு; அமெரிக்காவில் வேலை செய்யும் மக்களில், 20% மக்களே சொந்தமாக தொழிலில் உள்ள மக்களாக இருந்த போதிலும், அமெரிக்காவின் கோடீஸ்வரர்களில், அவர்கள் 33% உள்ளனர்.

பாடம்; சொந்தமாகத் தொழில் செய்பவர்கள் கோடீஸ்வரர் ஆவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

தரவு; சொந்தமாக தொழிலில் ஈடுபட்டுள்ள கோடீஸ்வரர்களில், 3/4 பங்கு மக்கள் தொழிலதிபர்களாக உள்ளனர். மிச்ச கோடீஸ்வரர்கள் ஏதேனும் துறையில் வல்லுநர்களாக உள்ளனர். உதாரணமாக, மருத்துவர், கணக்கு ஆய்வாளர்.

பாடம்; தொழிலதிபராக இருப்பதன் மூலம், கோடீஸ்வரர் ஆவதற்கு வாய்ப்புகள் அதிகம். அடுத்தபடியாக, ஒரு துறையில் வல்லுநராக இருப்பதன் மூலம், கோடீஸ்வரர் ஆக முடியும்.

தரவு; கோடீஸ்வரர்கள் ஈடுபட்டுள்ள தொழில்கள் மக்களுக்கு பொதுவாக அலுப்புத்தட்டும் சாதாரண தொழில்களாக உள்ளது. மற்றவர்கள் எடுத்துக் கொள்ளத் தயங்கும் தொழில்களாக உள்ளது. உதாரணமாக, இரும்பு இணைப்பு பற்றவைக்கும் குத்தகைக்காரர், ஏலம் விடுபவர், நடமாடும் வீட்டுப் பூங்காவின் சொந்தக்காரர், அரிசி விவசாயி, பூச்சி மருந்து அடிக்கும் நிறுவனர், தொல்லிய நாணயங்கள் வர்த்தகர், தபால்தலைகள் வர்த்தகர், சாலை செப்பனிடும் ஒப்பந்தக்காரர் போன்ற தொழில்கள். ஆங்கிலத்தில், welding contractors, auctioneers, rice farmers, owners of mobile-home parks, pest controllers, coin and stamp dealers, and paving contractors.

பாடம்; எவரும் எளிதில் எடுத்து நடத்தத் தயங்கும் தொழில்களை நாம் எடுத்து நடத்துவதன் மூலம், கோடீஸ்வரர் ஆவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

இவற்றிலிருந்து, பெரும்பாலான கோடீஸ்வரர்கள், பிறர் எடுக்கத் தயங்கும் வேலைகளை துணிந்து செய்வதால், தொழிலதிபராக இருப்பதால், சுய தொழில் செய்து சொந்தக் காலில் நிற்பதனால், கோடீஸ்வரர்களாக உள்ளனர் என்று தெரிகிறது. மேலும், அவர்கள் சிக்கனமாக வாழ்க்கை வாழ்ந்து, முதலீடு செய்து எதிர்காலத்தினை நிதி சுதந்திரத்துடன் அமைத்துக் கொள்கின்றனர். நிம்மதியான வாழ்க்கையை வாழுகின்றனர்.

நாமும் கோடீஸ்வரர் ஆவதற்கு இந்தப் பாடங்களைப் பயன்படுத்திக் கொள்வோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com