அடித்தளம் அமைத்துக் கொடுப்பது அரசின் தலையாய கடமை.

அடித்தளம் அமைத்துக் கொடுப்பது அரசின் தலையாய கடமை.

னநாயகத்தின் நான்கு தூண்களின் முதல் தூணாக இருப்பது நீதித்துறை. இந்த தூணே, நாட்டின் கடைசி குடிமகனுக்கும் நம்பிக்கையைத் தந்து கொண்டிருக்கிறது. இந்த தூண், எப்போதும் உறுதியாக இருக்க அடித்தளம் அமைத்துக் கொடுப்பது அரசின் தலையாய கடமை.  இங்கு அதிகாரத்திலிருப்பவர்கள், தனது பிரதிநிதிகளாக, தங்களுக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்ற எண்ண ஓட்டமே அதிகரிக்கும்  நீதி தாமதத்திற்கு முக்கிய காரணம். அரசு, நீதிமன்றங்களின்  நியமனங்களில் தலையீடுகளை தவிர்த்து  அவை  சுதந்திரமாக தடையில்லாமல் இயங்க  வகுப்பட்டிருக்கும் வழிகளைப் பின்பற்ற வேண்டும்.

இப்போது நீதிபதிகளின் நியமனங்களில் கொலீஜியம் என்ற முறை பின்பற்றபடுகிறது. கொலீஜியம் என்பது குடியரசுத் தலைவரின் பரிந்துரைப்படி  இந்திய தலைமை நீதிபதி மற்றும் உச்சநீதிமன்றத்தின் நான்கு மூத்த நீதிபதிகள் என்று 5 பேரை கொண்ட ஒரு அமைப்பு. உச்சநீதிமன்ற நீதிபதிகளின் நியமனங்கள் மற்றும் பதவி உயர்வு, இடமாற்றம் ஆகியவற்றை இந்த அமைப்பே தீர்மானிக்கிறது.

நீதித்துறையின் வேகமான பணிகளுக்கு  இந்த கொலீஜியமே முதுகெலும்பு. கொலீஜியம் தனது பரிந்துரைகளை ஒன்றிய அரசுக்கு அனுப்ப வேண்டும். இதேபோல் ஒன்றிய அரசும், தனது பரிந்துரையாக  முன்மொழியப்பட்ட சில பெயர்களை கொலீஜியத்திற்கு அனுப்புகிறது.

ஒன்றிய அரசின் பெயர்கள் மற்றும் பரிந்துரைகளை கொலீஜியம் பரிசீலிக்கும் நிலையில், இறுதி ஒப்புதலுக்கான கோப்பு மீண்டும் ஒன்றிய அரசுக்கு அனுப்பப்படுகிறது.

அப்படி அனுப்பப்படும் கோப்புகளுக்கு  ஒன்றிய அரசு, தனது ஒப்புதலை வழங்க வேண்டும். ஆனால், இந்த ஒப்புதல்களை  ஒன்றிய அரசு, பதில் அனுப்புவதற்கான காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.

இதைக் காரணமாக வைத்து கடந்த சில ஆண்டுகளாக  ஒன்றிய அரசு, நீதித்துறையில் நீதிபதிகளாக நியமனம் செய்ய கொலீஜியம் பரிந்துரைத்த பெயர்களை பரிசீலிப்பதில் ஒன்றிய அரசு தொடர்ந்து சில ஆண்டுகளாக தாமதம் செய்து வருகிறது. கொலீஜியம் பரிந்துரைத்த சிலரின் பெயர்கள், ஒன்றரை ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. தற்போது கொலீஜியம் அனுப்பிய 20 கோப்புகளை ஒன்றிய அரசு திருப்பி அனுப்பியுள்ளது. இதனால் நாட்டிலுள்ள 25 உயர் நீதிமன்றங்களில் 402 நீதிபதி பணியிடங்களை நிரப்புவது முடங்கியுள்ளது

நிர்வாகப்பணிகளில் அதுவும் நீதிபதிகளின் நியமனங்களில்  அரசு தாமதம் செய்வது  அதன்  செயல்பாடுகளுக்கு களங்கம் கற்பிக்க ஒரு வாய்ப்பாக அமைந்துவிடும்.

அண்மையில் உச்சநீதிமன்றத்தின் 3 நீதிபதிகளைக் கொண்ட அமர்வு, நியமன செயல்முறையை முடிக்க வேண்டிய காலக்கெடுவை வகுத்துள்ளது.  அந்த காலக்கெடுவை ஒன்றிய அரசு கடைபிடித்து  இந்த நிலை ஏற்படாமல் தவிர்க்க வேண்டும் .

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com