0,00 INR

No products in the cart.

உலகை விட்டுச் செல்வதற்கான வயது இது இல்லை!

– வினோத்

 

”பவர் ஸ்டார்” என்ற சொல் தமிழ்த் திரையுலகில் காமெடியான சொல்லாகக் கருதப்படுகிறது. ஆனால், கன்னடப் படவுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரும் ”பவர் ஸ்டார்” என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்ட
புனித்  ராஜ்குமார் உண்மையிலேயே மிக பவர்ஃபுல்லான ஸ்டார்.  புனித் தமது வீட்டுக்கு உதவி என யார் வந்தாலும் தன்னால் முடிந்ததைச் செய்வார் என்றே ரசிகர்கள் புகழாரம் சூட்டுகிறார்கள். எத்தனை பெரிய நட்சத்திரமாக இருந்தாலும் ரசிகர்களுடன் அவர்கள் வீட்டுப் பிள்ளை போல் நன்றாகப் பழகும் குணம் கொண்டவர். அவரது தந்தை ராஜ்குமார் எப்படி ரசிகர்களுடன் நன்றாகப் பழகினாரோ…. அதே குணம் இவருக்கும் இருந்தது. அது மட்டுமில்லாமல்  16 இலவசப் பள்ளிகள், 26 முதியோர் இல்லங்கள்,
2 மருத்துவமனைகள்  போன்ற சமூக சேவைகளை விளம்பரமில்லாமல் செய்து வந்தவர். அண்மையில்  மாரடைப்பால் பெங்களூருவில் காலமானார். அவருக்கு வயது 46. 

2002ஆம் ஆண்டிலிருந்து கதாநாயகனாக நடித்துவரும் புனித்தின் முதல் படமான ‘அப்பு’ அவருக்குப் பெரும் பெயரைப் பெற்றுத் தந்தது. தனது உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களுக்காக சமூக வலைதளங்களில் பெரிதும் அறியப்பட்ட புனித்,  உடற்பயிற்சி செய்துகொண்டிருக்கும்போதே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்தது மிகப்பெரிய சோகம்.  செய்தி அவரது ரசிகர்களைமட்டுமில்லை; கேட்ட அனைவரையும்  பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. 

அவர்  அண்மையில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது, திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கிவிழுந்தார். உடனடியாக பெங்களூருவில் உள்ள விக்ரம் மருத்துவனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். கொண்டு செல்லும் வழியிலும் அவருக்கு மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. விக்ரம் மருத்துவமனையில் அவர் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. செய்தி கேட்ட பலரால் நம்ப முடியவில்லை. காரணம், முதல் நாள் இரவு கதை டிஸ்கஷன்… காலையில் நண்பர்களுடன் உரையாடல்… என மிகச் சாதாரணமாக இருந்திருக்கிறார்.

கன்னடத் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக விளங்கிய ராஜ்குமார் – பர்வதம்மா தம்பதியின் ஐந்தாவது மற்றும் இளைய மகனான புனித் ராஜ்குமார் 1975 மார்ச் 17ஆம் தேதி சென்னையில் பிறந்தார். ஆறு மாதக் குழந்தையாக இருக்கும்போதே ‘பிரேமதா கனிகே’ படத்தில் புனித் தோன்றியிருக்கிறார்.

புனித் ராஜ்குமார் இதுவரை 29 திரைப்படங்களில் நடித்துள்ளார். கன்னடத் திரையுலகில் அதிக சம்பளம் பெற்ற ஒரு நடிகர் அவர். ‘கோடீஸ்வரர்’ நிகழ்ச்சியைக் கன்னடத்தில் தொகுத்து வழங்கியவர்.

“அவர் வயதுக்கு அவர் மிகுந்த ஆரோக்கியமாக இருந்தார். எளிதாகக் கரணம் அடித்து நடனக் கலைஞர்களை அசத்துவார். உடல் உறுதியில் அனைவருக்கும் முன்னோடியாக இருந்தார்” என்கிறார் அவரது நண்பரும், திரைப்பட இயக்குநருமான  கே.எம். சைதன்யா. புனித், ‘கமல், ரஜினி படம் ஒன்றில் ஒரு சின்ன ரோலாவது செய்யவேண்டும் என்பது தன் நீண்ட நாள் ஆசை’ என்று சமீபத்தில் ஒரு சானலுக்கு அளித்த பேட்டியில் சொல்லியிருந்தார்.  நீண்ட நாள் ஆசை நிறைவேறாத ஆசையாகிவிட்டது.

அவருக்கு இறுதி மரியாதை செலுத்த 5 கி.மீ. காத்திருந்த மக்கள், 8 கி.மீ. ஊர்வலம் போன்ற காட்சிகளுக்குக் காரணம், வெறும் பிரபலமான நடிகர் என்பதைத் தாண்டி சிறந்த மானிடர் எனவும் வாழ்ந்து காட்டியதற்கான அடையாளமே அன்று  கூடிய  கூட்டமும், சான்றோர் இரங்கலும்…

கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். கர்நாடக அரசு அவருக்கு  அரசு இறுதி  மரியாதை செய்து  கெளரவித்திருக்கிறது.

புனித் ராஜ்குமாரின் மரணம் குறித்துக் கேள்வியுற்று தான் அதிர்ச்சி அடைந்ததாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ராஜ்குமார் குடும்பத்தினரும், கலைஞர் குடும்பத்தினரும்  நல்ல உறவிலிருப்பவர்கள். ராஜ்குமார் வீரப்பனால் கடத்தப்பட்டிருந்தபோது, ’எப்படியாவது அப்பாவை மீட்டுக்கொடுங்கள்’ என்று கலைஞரை சந்தித்துக் கேட்ட ராஜ்குமாரின்  மகன்களில்  புனித்தும் ஒருவர்.

“கொடூரமான விதி ஒரு திறமைவாய்ந்த நடிகரை நம்மிடமிருந்து பிரித்துவிட்டது. உலகை விட்டுச் செல்வதற்கான வயது இது இல்லை. புனித்தின் சிறந்த பணிகளுக்காகவும், சிறப்பான குணத்திற்காகவும் அவர் வருங்கால தலைமுறையின் நினைவில் தொடர்ந்து நிற்பார்” – என இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி  தன் அஞ்சலிச் செய்தியில்  தெரிவித்திருப்பது நிதர்சனமான உண்மை.

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

ப்ளாகிங்

சுஜாதா தேசிகன்                                             ...

வெற்றிடம்

1
சுவிஸ்நாட்டில் ஜெனிவா நகரில் அதன் அழகான ஏரிக் கரையிலிருக்கிறது இந்த நவீன சிற்பம். “உலகெங்கும் பெற்றோர்கள் வயதான காலத்தில் தங்கள் குழந்தைகள் தங்களுடன் இல்லாமல் தனித்து வாழ்வதைச்சொல்லுகிறது” என்கிறது அதன் அருகிலிருக்கும் குறிப்பு. சிலைக்குச்...

மிகக்கொடூரமான ஒரு சமூகத்தில் வாழ்கிறீர்கள்.

0
முகநூல் பக்கம் சென்னையை விட்டுக் கிளம்பி 24 மணி நேரம் ஆகிறது. கன்னியாகுமரிக்கு படப்பிடிப்பிற்கு வந்திருக்கிறேன். பயணம் தொடங்கியதிலிருந்து இந்த நாட்டில் ஒரு சக்கர நாற்காலி உபயோகிப்பவரின் துயரங்கள் எங்கு போனாலும் என்னை தொடர்ந்தவண்ணம்...

அமெரிக்காவில் தமிழ்ப்  புத்தகக் கண்காட்சி!

- சோம. வள்ளியப்பன் தற்பொழுது நம் நாட்டைப் போலவே, அமெரிக்காவிலும் கோவிட் பெருந்தொற்று குறைந்து, இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, அமெரிக்காவின் நியூ ஜெர்சி தமிழ் சங்கம், அக்டோபர் 17, ஞாயிறு...

இந்த வாரம் இவர்

1
"சர்தார் படேல் வரலாற்று ஆளுமை மட்டுமல்ல; அவர் நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் இதயத்திலும் வாழ்கிறார்" - நரேந்திர மோடி     ஓவியர் ஸ்ரீதர்