‘கேப்டன்’ சினிமா விமர்சனம் - லதானந்த் இது ஒரு க்ரீச்சர் (creature) படம். ப்ரிடேட்டர் போன்ற ஹாலிவுட் படங்கள் தந்த உந்துதலில், புதுமையான முயற்சிகளை மேற்கொள்ளும் இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜனின் இன்னொரு படம் இது. இங்கே கிடைக்கும் பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப உத்திகளைக் கொண்டு முடிந்த அளவுக்கு வித்தியாசமான முயற்சிகளைக் கையிலெடுக்கும் இயக்குநருக்கு வாழ்த்துகளை முதலிலேயே தெரிவித்துவிடலாம்.இந்தியாவின் வடகிழக்கு எல்லையோரமுள்ள வனப்பகுதிக்கு அருகில் இருக்கும் ஆள் நடமாட்டமேயில்லாத செக்டார் 42 என்ற பகுதியில் மீண்டும் குடியேற்றங்களை நிறுவ அரசு முயற்சிகளை மேற்கொள்கிறது. ஆனால், அங்கே நடக்கும் சில அமானுஷ்ய விஷயங்கள் அதைத் தடுத்து நிறுத்துகின்றன. அவற்றை முறியடிக்கும் பொறுப்பை ஏற்கும் ராணுவ கேப்டன் ஆர்யாவின் செயல்பாடுகள்தான் கதை.வழக்கமாக ஜேம்ஸ்பாண்ட் படங்களின் ஆரம்பத்தில் அவரது வீர தீர சாகசங்களை – படத்துக்குத் தொடர்பில்லாதனவாக இருந்தாலும் – லேசாகக் கோடிட்டுக் காண்பிப்பார்கள் அல்லவா? அதேபோல கேப்டன் ஆர்யா மற்றும் அவரது குழுவினரின் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் காட்டப்பட்டு மெயின் படத்தைப் பார்க்க நம்மை நன்றாகவே தயார் செய்கிறார்கள்.கேப்டன் தன் சகாக்களுக்கு யுத்தத்தின் நான்கு நிலைகளாக எதிரியை அடையாளம் காணுதல், சண்டையிடுதல், எதிரியின் பலவீனத்ததைத் தெரிந்துகொள்ளுதல், எதிரியை ஏமாற்றுதல் எனப் படிப்படியாகக் கற்றுக்கொடுப்பது சிறப்பு. எழுதப்படாத ஐந்தாவது விதியாக தியாகம் என்பதையும் வலியுறுத்துகிறார்.இதுபோன்ற படங்களுக்குள் சென்டிமென்ட் மற்றும் பாடல்களைப் புகுத்துவது கதை நகர்வை பாதிக்கும் வேகத் தடைகளே ஆகும். ஆனால், படத்தின் பின்னணி இசை விறுவிறுப்பைக் கூட்டுவதையும் சொல்லியாகவேண்டும்.கடுமையான கட்டுப்பாடுகளையுடைய ராணுவ முகாமில், ஷேவ் செய்யாத முகத்துடன் ஆர்யா வலம்வருவதை எப்படி அனுமதிக்கிறார்கள் என்று தெரியவில்லை.மருத்துவர் மற்றும் பயோ ரேடியோ சிக்னல்களை ஆராயும் விஞ்ஞானியாக வரும் சிம்ரனுக்கு ராணுவத்தில் மிகப் பெரிய அதிகாரம் இருக்கிறது. அது எப்படிச் சாத்தியமாகிறது என்றும் தெரியவில்லை.இடையிடையே நயோபியம், மாலிப்டினம் தொழிற்சாலை என்றும் கதை சற்று நேரம் பயணிக்கிறது.இந்தப் படத்தில் நான்கு வகையான cold blooded க்ரீச்சர்கள் பங்குபெறுகின்றன. ‘மினோட்டோர்’ என்று அவற்றுக்குப் பெயராம். வினோத முகம் மற்றும் உடல் அமைப்புகளுடன் அடியாள் மினோட்டோர்கள், ராஜா மினோட்டோர், ராணி மினோட்டோர் மற்றும் பையோ கம்யூனிகேஷன் பணியைச் செய்யும் சிலந்தி போன்றனதாம் அவை.இதில் அடியாள் மினோட்டோர்கள் கேப்டன் மற்றும் ராணுவ வீரர்கள் முகத்தில் எச்சிலை உமிழ்வதைத் தவிர வேறு ஒன்றும் செய்வதில்லை. சிலந்தி வகை க்ரீச்சர்கள் அவ்வப்போது நடமாடுவதோடு சரி. ராணி மினோட்டோர் ஆர்யாவுடன் கிளைமேக்ஸில் தன் முட்டைகளைக் காக்கக் கொஞ்சம் ரகளை செய்கிறது. சரி… ராஜா மினோட்டோர்? க்கும்… அதைப்பற்றி நிறையப் பேசிக்கொண்டே இருக்கிறார்களே தவிரக் கடைசிவரை அதைக் கண்ணில் காண்பிக்காமலேயே படத்தை முடித்துவிட்டார்கள்.ராணுவ முகாம்கள், பனிபடர்ந்த லொகேஷன்கள், ராணுவ வீரர்களின் பயிற்சி ஆகியன சிறப்பாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.பல இடங்களில் மேலோட்டமாகக் கதை சொல்லப்பட்டிருப்பதுபோன்ற ஓர் உணர்வும் வருகிறது.மொத்தத்தில் கேப்டன் திரைப்படம் : வித்தியாசமான முயற்சி