0,00 INR

No products in the cart.

இறைவனே தந்தையாகவும் தாயாகவும் ஆகியுள்ளார்.

அன்னை சாரதா தேவி அருளுரை

 

றைவன் நமக்கு சொந்தமானவர்தான். அது நிரந்தர உறவு. அவர் எல்லோருக்கும் சொந்தமானவர். பாவனையின் ஆழத்திற்கு ஏற்ப அதை உணர முடியும்.

இறைவனே தந்தையாகவும் தாயாகவும் ஆகியுள்ளார். அவரே பெற்றோர் வடிவில் நம்மை வளர்க்கிறார். அவரே நம்மை கவனித்துக்கொள்கிறார்.

இந்த ஊனக் கண்களால் கடவுளை யாராவது கண்டிருக்கிறார்களா? குருதேவரை நேரடியாகப் பார்ப்பது அவ்வளவு எளிதல்ல.

நரேன் அமெரிக்காவில் இருக்கும்போது தீவிர மன ஏக்கத்துடன் தவித்தபோது, குருதேவர் நரேனின் கையை பிடித்துக்கொண்டிருந்ததை உணர்ந்தான். அதுவும் சில நாட்களுக்கு மட்டுமே அப்படி நடந்தது.

சன்னியாசி எல்லா மாயைகளையும் வெட்டி எறிய வேண்டும். பொன் சங்கிலியும் இரும்பு சங்கிலிபோல் ஒரு தளைதான். உண்மையான துறவிகள் மாயையை வெட்டி எறிந்து நிர்வாண நிலையை அடைவார்கள். பகவானுடன் கலந்துவிடுவார்கள்.

ஆசைகளின் காரணமாகவே உடம்பு தோன்றியிருக்கிறது. சிறிதளவேனும் ஆசை இருந்தால்தான் உடல் நிலைக்கும். ஆசைகள் முற்றிலுமாக ஒழியும்போது எல்லாம் ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறது.

தேவர்களானாலும் சரி, யாராக இருந்தாலும் சரி. எல்லோரும் இந்த பூமியில் பிறக்கவே செய்கிறார்கள். சூட்சும உடலில் உண்ணவும் உடுக்கவும் பேசவும் முடியாதல்லவா! அதனால்தான் அவர்கள் அந்த நிலையில் நீண்ட காலம் வாழ முடிவதில்லை.

சூட்சும உடலில் வாழ்பவர்கள் இருக்கும் இடத்திலேயே மரப்பொம்மைகள் போல யுகயுகங்களாக அப்படியே இருப்பார்கள். பகவான் விரும்பினால் அவர்களை அங்கிருந்து கீழே கொண்டு வருகிறார். ஜனலோகம், சத்தியலோகம். துருவலோகம் என்று தேவலோகங்கள் பல உண்டு. சுவாமிஜியை சப்தரிஷி மண்டலத்திலிருந்து கூட்டி வந்ததாக குருதேவர் சொல்வதுண்டு.

சூட்சம உடலில் வாழ்பவர்களில் இரு பிரிவினர் உண்டு.  சிலர்  இந்த உலகத்தைப்போலவே மேல் உலகத்தில் பகவானுக்கு சேவை செய்பவர்களாக இருப்பார்கள். மற்றொரு பிரிவினர் மரப்பொம்மைகள் போல தியானத்தில் ஆழ்ந்திருப்பார்கள். நிர்விகல்ப நிலையை அடைந்த பிறகும் ஈசுவரகோடிகளால் தங்கள் மனத்தைத் திரட்டி சாதாரண நிலைக்குக் கொண்டுவர முடியும்.

ஆசையின் சாயலே இல்லாமல்போனால்தான் பிறவியிலிருந்து விடுதலை கிடைக்கும்.கங்கையில் உடலை விட்டால்கூட ஆசையில் சாயல் இல்லாமல் இருந்தால்தான் முக்தி கிடைக்கும். வேறு எதனாலும் எந்தப் பயனும் இல்லை.

இந்த மாயா உலகில் பகவான் ஒருவர்தான் எல்லாம் அறிந்தவராக இருக்க முடியும்.

2 COMMENTS

  1. அன்னை சாராதா தேவின் அருளுரை அற்புத விளக்கு. மனதை பக்குவப்படுத்துகிறது. ‘இந்த மாய உலகில் பகவான் ஒருவரே எல்லாம் அறிந்தவர். பகவானிடம் ஐக்கியமாக ஆசைகளை துறக்க வேண்டும். ஆசைகளுக்கு காரணம் உடம்பு. எல்லா ஆசைகளையும் துறந்து உலக மாயையில் இருந்து விடுபட்டு இறைவனை அடைவதே பேரின்பம். கங்கையில் உடலை விட்டாலும் ஆசையின் சாயல் இருந்தல் வேண்டும் என்பது அற்புதம்.

    ஆ. மாடக்கண்ணு,
    பாப்பான்குளம்.

    • கங்கையில் உடலை விட்டால்கூட ஆசையின் சாயல் இல்லாமல் இருந்தல் வேண்டும் என்பது அற்புதம்.

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

ரசனையும் உணர்ச்சிபூர்வமான ஈடுபாடும்தான் முக்கியம்

1
அருளுரை  சுவாமி மகேஷானந்தகிரி   விஞ்ஞானம் என்பது பொருளை அடிப்படையாக வைத்து அமைந்தது. அந்த ஆராய்ச்சியில் ஈடுபடுபவன் பொருளுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறான். உணர்ச்சிகளுக்கோ, பிற மனிதப் பண்புகளுக்கோ அதில் இடம் இல்லை. ஆராய்ச்சி அடிப்படையில் பொருளைப் புரிந்துகொள்ளும்...

மனத்தெளிவையும் உறுதியையும் பெற…

1
அருளுரை   சிருங்கேரி ஸ்ரீ பாரதி தீர்த்த மகாசுவாமிகள்   அர்ஜுனன் யுத்தம் செய்வதற்கு குருக்ஷேத்திரத்துக்கு வருகிறான். அவன் வில் வித்தையில் சமர்த்தன். ஆனாலும் அங்கே வரும்போது அவனுக்கு மனக் கலக்கம் உண்டாகிவிடுகிறது. தன்னுடைய பலத்திலேயே நம்பிக்கை போய்...

அகந்தையை அணுகவிடாதே!

2
  ஆதிசங்கரர்   ஆதிசங்கரர் கடைசியாக செய்த உபதேசம் ‘ஸோபான பஞ்சகம்’ என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. ‘ஸோபானம்’ என்றால் ‘படிகளின் வரிசை’ என்று பொருள். ‘பஞ்சகம்’ என்றால் ‘ஐந்து’ என்று அர்த்தம். ‘ஸோபான பஞ்சகம்’ என்பது ஐந்து...

நீ செய்த நன்மைகள் உன் கூடவே வரும்

2
கிருபானந்த வாரியார் சுவாமிகளின் அருளுரை   உருவத்தால் மட்டுமின்றி உள்ளத்தாலும் மனிதத்தன்மையுடன் நாம் நடக்க வேண்டும். மிருகங்களை போல செயல்படக்கூடாது. பசு போன்ற மென்மையான மனிதர்களிடம் பழகுவது நன்மை தரும். பாம்பு போன்ற நஞ்சு தன்மை...

இனிய வாழ்வு பெறுவாய்

4
  அய்யா வைகுண்டரின் அருளுரை   பொய் சொல்பவனுக்கு அந்த இறைவன் பொய்யாகவே தோன்றுகிறான். மெய் சொல்பவனுக்கு மெய்யாகவே - அவனுடனே இருக்கிறார். நீ முதலில் உன்னை அறிந்துகொள். அதன் பிறகுதான் தலைவனாகிய இறைவனை அறிந்துகொள்ள முடியும்....