காசிமேட்டில் குவிந்த மக்கள்: மீன்கள் விலை உயர்வு!

காசிமேட்டில் குவிந்த மக்கள்: மீன்கள் விலை உயர்வு!

நாளை ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை முன்னிட்டு காசிமேட்டில் குவிந்த மக்கள் கூட்டம் திருவிழா போன்று கூட்டம் களை கட்டியதால் மீன்கள் விலை உயர்ந்துள்ளது.

வாரத்தின் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான நாளை காசிமேட்டில் அசைவப் பிரியர்கள் கூட்டம் திருவிழா போன்று கூடுவது வழக்கம்
 இந்நிலையில் ஒமைக்கிறான் வைரஸ் நோய் தொற்று காரணமாக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது
இதன் அடிப்படையில் காசிமேடு மீன் சந்தையில் மீன் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது
காசிமேட்டில் கூட்டம் கூடுவதை தவிர்ப்பதற்காக நேரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன
 புதிய மீன்பிடி ஏல கூடத்தில் 40 படகுகள் மட்டுமே மீன்களை விற்பனை செய்ய வேண்டும் மொத்த வியாபாரிகளை மட்டும் அனுமதிக்க வேண்டும் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மட்டும் மொத்த வியாபாரிகள் மீன்களை ஏலம் எடுக்க வேண்டும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன
ஏற்கனவே உள்ள பழைய வார்ப்பு மீன் விற்பனை சந்தையில் சில்லரை வியாபாரிகளும் பொதுமக்களும் மீன்களை வாங்குவதற்கும் விற்பனை செய்வதற்கும் அனுமதி படுகின்றனர்
 காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை மீன்களை விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது
 இதனடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதனால் அசைவ பிரியர்கள் இன்றே மீன்களை வாங்கி பதப்படுத்தி உண்பதற்காக காசிமேட்டில் குவிந்துள்ளனர் இதனால் மீன்களின் விலையும் உயர்ந்துள்ளத
 –
காசிமேடு மீன் சந்தையில் சிறிய வகை மீன்கள் நேற்று 500 ரூபாய்க்கு விற்கப்பட்ட வஞ்சிரம் 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது பெரிய வகை1000 ரூபாயிலிருந்து 1,400 ரூபாய் வரை விற்கப்படுகிறது
சங்கரா 350 ரூபாயிலிரந்து 500 ரூபாய்
நெத்திலி 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டவை 400 ரூபாய்
வவ்வால் 500 ரூபாய்க்கு விற்பனை செய்ய பட்டவை 800 ரூபாய்
கடம்பா 350 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டவை 550 ரூபாய்
 இறால் 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டவை 500 ரூபாய்
 பாறை 350 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டவை 450 ரூபாய்
நண்டு 450 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டவை 600. என விற்பனை செய்யப்படுகிறது
கொடுவா 350 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டவை 550 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது
நாளை முழு ஊரடங்கினால் மீன் சந்தைகள் மீன் விற்பனை கடைகள் இயங்காது என்பதால் மக்கள் இன்று மீன்களை வாங்கி செல்கின்றனர்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com