0,00 INR

No products in the cart.

​கேள்வி நேரம்

ஞானகுரு

பலகரை ஆரூடம் பலன் தருமா?


சிவ.சாந்தி, அவினாசி

அனைத்துக் குடும்பங்களிலும் வழிகாட்டும் குருநாதர்கள், குடும்ப ஜோதிடர்கள் இருப்பதில்லை. இவ்வாறு வழிகாட்டுவோர் இல்லாத ஏழைக் குடும்பத்தவருக்கு ஜாதகங்களும் எழுதப்பட்டிருக்காது. அவர்களுக்கு சமய சஞ்சீவியாக விளங்கியது பலகரை (சோழி) ஆரூடம். இதில் நம்பிக்கை வைத்தால் நிச்சயமாகப் பலன் கிடைக்கும். ஆரூடம் கேட்க வந்தவர்களை எதிரில் அமரச் செய்து பன்னிரெண்டு பலகரைகளைக் கையில் கொடுத்து, குல தெய்வத்தைப் பிரார்த்தனை செய்துகொண்டு கீழே உருட்டும்படி சொல்வர். உருட்டிய பலகரையில் எத்தனை நிமிர்ந்திருக்கிறது என்பதைக் கணக்கிட்டு, அதற்கான பலனைச் சொல்வார்கள். இவை அனைத்துமே சாஸ்திர நம்பிக்கையோடு செய்தால் பலன் கிட்டும்.

ஒன்று நிமிர்ந்திருந்தால் நினைத்த காரியம் வெற்றி.
இரண்டு செயல் தாமதமாகும்.
மூன்று செய்தொழிலில் பிரச்னை வந்து விலகும்.
நான்கு திருமகள் அருள் உண்டு.
ஐந்து நோய் கவலை போகும்.
ஆறு வருத்தங்கள் கூடும்; உறவினர் மதிப்பு குறையும்.
ஏழு சண்டையோடு போனவர், சிரித்தபடி வந்து சேருவார்.
எட்டு உடல் நலம் கெடலாம்; மருத்துவச் செலவு வரக்கூடும்.
ஒன்பது பதவிகள் வரும்; உறவினர் கைகோர்ப்பர்.
பத்து வீண்பழி வரலாம்; புது முயற்சிகளைத் தள்ளிப் போடலாம்.
பதினொன்று கவலைகள் மறையும்; பொருட்சேர்க்கை உண்டு.
பன்னிரெண்டு வம்பு வழக்குகள் வரலாம்; கவனம் தேவை.

பன்னிரெண்டு சோழிகள் உருட்டலுக்கும் விரிவான பலன்களையும் கேட்டுப் பலன் பெறலாம்.

விநாயகருக்கு தோப்புக்கரணமிட்டு வணங்குவதுபோல், சிவன், முருகனை வணங்குவது எப்படி?

என்.கார்த்திகேயன், சிவகாசி

விநாயக வழிபாட்டினைப் போலவே, சிவபெருமானை வழிபட மாபெரும் மந்திரப் பகுதியான ஸ்ரீருத்ரம் இருக்கிறது. இதை, சுண்டு விரலை ஆட்காட்டி விரலால் தொட்டுக்கொண்டு ஆலயத்தின் பக்கவாட்டில் அமர்ந்து, பதினொரு அனுவாகங்களாகப் பிரித்துக் கூறலாம். முருகனை வழிபட, அழகுத் தமிழில் கந்த சஷ்டி கவசம் இருக்கிறது. அத்துடன், முருகனின் காவடிச் சிந்து பாடி வழிபட்டுப் பலன் பெறலாம்.

சித்தர்கள் கூறியுள்ள தத்துவங்களைப் பயன்படுத்திக்கொள்ள வழி இருக்கிறதா?

கே.சுகுமாரன், காரைக்கால்

சித்தர்களின் தத்துவத்தைப் பயன்படுத்திக் கொள்வதற்குப் போதிய பயிற்சி தேவை. முதலில் மன அமைதி, தியானம் பழகுதல், இன்பத்தையும் துன்பத்தையும் சமமாக எடுத்துக் கொள்ளுதல் போன்ற பக்குவ நிலைகளுக்குத் தயாராக வேண்டும்.

lதனது உடலை தனக்குத்தானே சிறு அணுவின் அளவுக்கு சிறியதாக்கிக்கொள்வதற்கு, ‘அனிமா’ என்று பெயர். இதற்கு மனம் சிறிதாகி, கனப்பின்றி இருக்க வேண்டும்.

lதம் உடலை மலையைப் போலப் பெரிதாக எடுத்துக்கொள்வதற்கு, ‘மகிமா’ என்று பெயர். இது, அங்கத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்கான வழி.

lஉடலை மாயத் தோற்றமாக்கி எல்லாவற்றிலும் புகுந்து வெளியேறுதலுக்கு, ‘கரிமா’ என்று பெயர். இது, உலக ரகசியங்களைத் தெரிந்து கொள்வதற்கான வழி.

lதன் உடலைப் பறவையின் சிறகை விட லேசானதாக்குவதற்கு, ‘லகிமா’ என்று பெயர். இது, கண்களுக்குத் தெரியாத உலகங்களைக் கண்டு பிரவேசிப்பதற்கான வழி.

lஎத்தகைய பொருளையும் முயற்சி செய்து அடைந்து விடுவதற்கு, ‘பிராத்தி’ என்று பெயர்.

lஉலகத்தைச் சரிப்படுத்தும் பொருட்டும், நமக்கு எதிராய் ஒரு சக்தி உண்டு என நம்ப வைக்க பூகம்பம், புயல், கடல் கொந்தளிப்பு, சூறாவளி போன்ற இயற்கைச் சீற்றங்களை உருவாக்குவதற்கு, ‘பிராகாமியம்’ என்று பெயர். இது, நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்களுக்கு எதிரான செயல்.

lஜடமாக இருக்கும் பொருட்களுக்கு உயிருட்டுவதும் அழிப்பதுமான செயலுக்கு, ‘ஈசத்துவம்’ எனும் உயர் தத்துவமாகும். பஞ்ச பூதங்களை வசியப்படுத்தி, தனது விருப்பத்தின்படி நடக்கச் செய்யும் கலை, ‘வசித்துவம்’ என்பது. இயற்கை தன் விருப்பப்படி செயல்படும்போது கட்டுப்படுத்தி வைப்பது!

மன நிம்மதியுடன் இறைவனை வணங்க வழி சொல்லுங்களேன்?

.சரஸ்வதி, திருச்சி

கோயிலுக்குள் நுழைந்ததும் பிள்ளையார் சன்னிதியில் குட்டிக்கொண்டு தோப்புக் கரணமிட்டு வணங்கி, இறைவன் முன்பு உங்களுக்குத் தெரிந்த துதிகளைக் கூறி, ஆத்ம பிரதட்சிணம் செய்து திருச்சுற்று முடிந்ததும் சாஷ்டாங்க நமஸ்காரம், (பெண்கள் மூவங்க நமஸ்காரம்) செய்து அமைதியாக தியானம் செய்தபடி அமர வேண்டும். மனித உடம்பில் உள்ளங்கால்களிலிருந்து உச்சந்தலை வரை பல நரம்புக் கற்றைகள் இருக்கின்றன. தோப்புக்கரணம் போடும்போது அது சுருங்கி விரிவடைந்து, சோர்வு நிலை நம்மை விட்டுப் போய்விடுகிறது. ரத்தம் மூளைக்கு நன்கு பாய்ந்து பலம் தருகிறது. தலையில் இரு கைகளால் குட்டிக்கொள்வதால் உணர்ச்சியற்ற நரம்புகள் தூண்டப்பட்டு மூளைக்குச் சக்தி தருகிறபோது, கனத்த மனம் லேசாகிறது. பள்ளிகளில் மந்த நிலையில் உள்ள மாணவனை தோப்புக்கரணம் போடச் சொல்வது இதன் காரணமாகவே என்று அறிய வேண்டும். இப்படிச் செய்வதால் மனம் பதினாறு நிமிடங்களில் நிம்மதி நிலையை அடைவதை உணரலாம்.

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

​அம்பிகையின் அருள்!

0
- வி.ரத்தினா, ஹைதராபாத் எனது அண்ணி அம்பாளின் மீது மிகுந்த பக்தியும் ஈடுபாடும் கொண்டவர். தினமும் பூஜைகள் செய்து அம்மனைப் போற்றி பல பாடல்களை உருக்கமாகப் பாடுவார். அதுமட்டுமின்றி; எப்போதும் அம்பாளின் நினைவுடனே இருப்பார்....

இறைவன் ஏற்கும் விசேஷ நிவேதனங்கள்!

0
lகொல்லூர், ஸ்ரீ மூகாம்பிகைக்கு இரவு அர்த்த ஜாம பூஜையின்போது சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலம், லவங்கம், சர்க்கரை சேர்த்துத் தயாரிக்கப்படும் மணமிக்க கஷாயமே நிவேதனமாகப் படைக்கப்படுகிறது. lசிதம்பரம், ஸ்ரீ நடராஜப் பெருமானுக்கு கிச்சடி சம்பா...

​பலன் தரும் ஸ்லோகங்கள்!

0
- எம்.வசந்தா ​உடல் உஷ்ணம் குணமாக... ‘பத்ம ஹஸ்த பரம் ஜ்யோதி பரேஸாய நமோ நம அண்டயோனே மஹாஸாக்ஷின் ஆதித்யாய நமோ நம கமலாஸன தேவேஸ பானு மூர்த்தே நமோ நம தர்மமூர்த்தே தயாமூர்த்தே தத்வமூர்த்தே நமோ நம’ பொருள் :...

​தீபப் பலன்!

1
- பொ.பாலாஜிகணேஷ் ‘விளக்கேற்றிய வீடு வீண் போகாது’ என்று கூறுவர். தீபச் சுடருக்குத் தன்னைச் சுற்றியுள்ள தேவையற்ற கதிர்களை (நெகடிவ் எனர்ஜி) ஈர்க்கும் சக்தி உண்டு. அவ்வாறு ஈர்க்கும்போது நம்மைச் சுற்றி பாசிடிவ் எனர்ஜி...

​கடவுள் தரிசனம்!

0
- சுந்தரி காந்தி துறவி ஒருவர் ஆற்றில் நீராடிவிட்டு, கரையில் இருந்த மரத்தடியில் அமர்ந்து தியானம் செய்தார். இதை மாடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் பார்த்தான். நீண்ட நேரம் கழித்து துறவி தியானம் கலைந்து...