0,00 INR

No products in the cart.

கேள்வி நேரம்

ஆவதும் பெண்ணாலே; அழிவதும் பெண்ணாலேஎன்ற பழமொழியின் தத்துவம் என்ன?

என்.நிரஞ்சன்குமார், காஞ்சிபுரம்

து பழமொழியே அல்ல; ஜோதிடர்களும், பழைமைவாதிகளும் அடிக்கடிப் பயன்படுத்தும் சொல். பெண்களை தெய்வமாக மதித்து, அவர்களைத் தனிச்சிறப்போடு சொல்லும் வைர வரிகள், ஆவதும் பெண்ணாலே என்பது. ஒரு பெண் ஆலமரம் போல குடும்பத்தை நிழல் போல் காத்து, எல்லாவற்றையும் வெற்றியாக்கிடப் பாடுபடுபவள் என்று இதற்குப் பொருள். அப்படிப்பட்ட தெய்வபலம், மனோபலம் எல்லாம் ஒரு பெண்ணுக்குள் நிறைவாக இருக்கிறது என்று பொருள். அழிவதும் பெண்ணாலே என்பதற்கு, எதிர்வரும் தீமைகளை அழிப்பதில் ஒரு பெண்ணுக்கு நிகர் யாரையும் சொல்ல முடியும். மிகப்பெரிய குடும்பத்தில் அனைத்துக் கடமைகளையும் செய்துவிட்டு, ஓய்வுக்குச் செல்லும்போது, அவளை சுவாசினி தேவிக்குச் சமமாக வைத்து பூஜை செய்து அவளிடம் ஆசி பெறுகிறார்கள். ஒரு பெண்ணால் இந்த சமுதாயத்தை ஆக்கிடவும் முடியும்; தீமைகள், எதிர்ப்புகள் வந்தால் அடக்கிடவும் முடியும். புராணங்களில் தாங்க முடியாத சோதனைகள் வரும்போது இச்சொல்லை முன்னிறுத்தி, துர்கை, காளி தேவியரை வழிபடச் சொல்வது வழக்கத்தில் இருந்து வந்தது.

முருகனுக்கு ஆறு படை வீடுகள் அமைந்தது எப்படி?

.தமிழ்செல்வி, நாகை

முருகப்பெருமான் திருவருள் தாங்கிய திருமேனியைக் கொண்டு, ஆங்காங்கே திருக்கோயில் அமைத்திட எழுந்தருளிய இடங்களே ஆறு படை வீடுகள். தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் ஏனைய உயிர்களுக்கும் தீங்கிழைத்து வந்த சூரபத்மனை சம்ஹாரம் செய்ய எழுந்தருளியபோது அவரது படைகள் தங்கி இருந்த இடங்கள் ஆறு. அவையே ஆறு படை வீடானது. ‘திருமுருகாற்றுப்படை என்னும் தெய்வ நூலின் பெயர் பொருத்தம் கொண்டு,ஆற்றுப்படுத்திய இடங்களே, ஆறுபடை வீடுகள் எனவும், ஆறு நிலைகளில் முருகன் கோபம் கொண்டவையே ஆறு படைவீடானது.
கந்தர் கலிவெண்பா இக்கருத்தை, ஆறு திருப்பதி கண்டு, ஆறெழுத்தும் அன்பினுடன் கூறும் அவர் சிந்தை குடிகொண்டானே’ என்று புகழ்கிறது. சிவபெருமானுக்கு ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் என்ற ஐந்து திருமுகங்கள் இருக்க, முருகனின் அதோ முகமும் சேர்த்து ஆறுமுகம் எனவும், இதுவே மனிதனுக்கு ஆறாம் அறிவைத் தரக்கூடியது என்றும் விளக்குகிறது. ஆறு முருகனுக்குப் பிடித்த எண். அதனால் சஷ்டி திதியில் ஆறாம் நாளாக விரும்பி ஏற்கிறார் முருகன்.
ஆட்டும் சமயம் ஆறினுக்கும் ஆதாரங்கள் ஆறினுக்கும்
அத்துவா ஓர் ஆறினுக்கும் அமையும்தானே முதல் என்று
தீட்டும்படியா வரும் தெளியத் தெளிந்தாங்கு ஆறுமுகம் திகழச்
செல்வம் மலியும் இடைக்கழிவாழ் சேயைப் பரிந்து காக்கவே!’

மோட்சம் என்பது என்ன? எல்லோருக்குமே து கிடைத்து விடுகிறதா?

சி.நாகராஜன், சென்னை

லக வாழ்க்கை பூரணத்துவம் பெற்ற பிறகு ஒரு மனிதனின் ஆன்மா, இறைநிலை அடைவது மோட்சம் எனப்படுகிறது. ஜீவன் என்பது பரமாத்மாவால் அறியப்படுகிறது. இதற்கு ஜீவனது இயல்பு தெரியும். இரண்டும் சேர்ந்த ஐக்கிய ஞானமே உயர்ந்த பொருளாகிய விக்ஞானம் எனப்படுவது. இதுதான் மோட்சம் என்னும் முக்தி நிலை என்று முழங்குகிறது வேதாந்த பேரிகை.

ஒரு குழந்தை மீட்டாயைக் கண்ட பிறகு அதை உண்பதற்கு ஆத்திரப்படுகிறது. ஒரு கொள்ளையன் புதையல் இருக்கிற இடத்தைக் கண்ட பின் அதை எடுக்க ஆர்வம் காட்டுவதுபோல, பிரம்ம ஞானத்தை அடைய முயற்சி செய்ய வேண்டும் என்கிறார் ஆதிசங்கரர்.

மனித ஆயுள் தினமும் குறைந்துகொண்டே வருகிறது. ‘நன்றும் இன்றே செய்க என்கிறார் வள்ளுவர். ஆகவே, மானிடராகப் பிறந்த அனைவரும் பிரம்ம ஞானத்தை அடையக் காலதாமதம் செய்தல் கூடாது என்கிறது வேதாந்தம்.

ஆனால் வேதங்களோ, மனிதனாகப் பிறந்துவிட்டால் குருகுல வாசம் செய்து, வேதங்களைக் கற்று, திருமணம் செய்து, நியாயமான வழியில் பொருள் தேடி அக்னி ஹோத்ரம் முதலிய வைதீக கர்மாக்களைச் செய்து, தவத்தினால் காமம், கோபம், மதம், மாத்சர்யம், மோஹம், லோபம் ஆகிய ஆறு பகைவர்களை வென்றுகாட்டி, இறைநிழல் சேர்ந்தாலே பிரம்ம ஞானமாகிய மோட்சம் கிட்டும் என்கிறது. வேதங்கள் சொன்ன வழியில் சென்றால் மோட்சம் கிடைப்பது சாத்தியமே.

சினம் என்னும் கோபத்தை அடக்க வழி என்ன?

எஸ்.லலிதா, திருவள்ளூர்

சினம் என்கிற கோபத்தால் பலவற்றை வெற்றி கண்டுவிடலாம் என்று எண்ணி ஏமாற்றம் அடைந்தவர்கள் பலர் உள்ளனர். கோபம் வராமல் இருக்க, மனதைச் சுற்றி எவ்வளவு துயரங்கள் வந்தாலும், தொல்லைப்படுவதற்கான காரணங்கள் இருந்தாலும் அமைதியாக இருக்கப் பழக வேண்டும். நமது முன்வினைகள் காரணமாகாதவரை எவரும் நமக்கு எந்த இடையூறும் செய்து விட முடியாது. அப்படி யாராவது செய்தால், தன்னை உணராமல் செய்கிறார்கள் என்று இரக்கத்திற்கு உரியவனாகி விட்டுவிட வேண்டும்.

பணமோ, பொருளோ மற்றவர்க்குக் கிடைக்கும்போதும், பெண் போதை, பதவி உயர்வு போன்ற தாங்க முடியாத நட்டங்கள் வரும்போதும் சினம் தானாக வெளிப்படுவது மனித குணத்தின் இயல்பு. அப்போது இறை நாமம் ஒன்றை மனதில் பதித்தி, அதை 51 முறை ஜபித்து விட்டால் சினம் மனதை விட்டு மறைந்து விடும்.

கோபம் நான்கு வகையாகும்.
1. தாமஸ குணம் படைத்தோருக்கு வரும் கோபம், இடுப்பில் விழுந்த கோடு போன்றது. இது, எல்லா பிறவிகளுக்கும் உரிய மெல்லியது.
2. ராஜச குணம் படைத்தவர்களுக்கு வரும் கோபம், கடுமையான நட்டம் தருவது. இது, கல்லில் விழும் கோடு போன்றது.
3. சத்வ குணம் படைத்தவர்களுக்கு வரும் கோபம், மணலில் போடும் கோடு போன்றது. இது, வந்தது தெரியாமல் காற்றில் கலைந்து செல்லும்.
4. சாதுக்களுக்கு வருகிற கோபம், நீரில் போடும் கோடு போன்றது. இது, பிறர் நலம் பெற வேண்டி, ஆசியுடன் வந்து செல்வது. உரிமையோடு சற்றுக் கடிந்து சொல்லப்படும் முறை.

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

ஆணுக்கும் உண்டு கற்பு!

0
ராவண வதத்துக்குப் பிறகு ஸ்ரீராமர் ஒரு பாறையின் மீது தமது கால்களை நீட்டி அமர்ந்து, கண்களை மூடியிருந்தார். அப்போது அவருக்கு முன்பு ஒரு உருவத்தின் நிழல் விழுந்தது. ஏதோ ஒன்று உறுத்த, கண்...

தீபாவளியில் ஸ்ரீலட்சுமி பூஜை!

0
- முத்து.இரத்தினம் தீபாவளி திருநாளில் மகாலட்சுமியை வழிபடுவது மிகவும் சிறப்புக்குரியதாகும். மகாலட்சுமி வழிபாடு பெருமாள் கோயில்களில் மட்டுமின்றி, சிவாலயங்களிலும் முக்கியத்துவம் பெறுகிறது. பெரும்பாலான கோயில்களில் கருவறை வாயிலின் உச்சியில் கஜலட்சுமி உருவம் பொறிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்....

மூச்சு விடும் மூலவர்!

1
- பொ.பாலாஜி கருவறையில் ஸ்ரீ நரசிம்ம சுவாமி விடும் மூச்சுக் காற்றால் தீபச் சுடர் அசைந்தாடும் அதிசயக் கோயில் ஒன்று ஆந்திர மாநிலம், வாடபல்லியில் உள்ளது. ஒரு சமயம் கிருஷ்ணா, மூசி நதிகள் இணையும் இடத்திற்கு...

நிவேதனத்தை கடவுள் ஏற்பது நிஜமா?

2
- எ.எஸ்.கோவிந்தராஜன் இறை வழிபாட்டு நாட்களில் கோயில்களிலும் வீடுகளிலும் பல்வேறு நிவேதனங்களைச் செய்து சுவாமிக்குப் படைப்பது வழக்கம். அப்படிப் படைக்கப்படும் நிவேதனங்களை சுவாமி ஏற்றுக்கொண்டாரா? இல்லையா? என்ற கேள்வி, வெளிப்படையாகக் கேட்கப்படா விட்டாலும் பலரது...

கோமாதா; நம் குலமாதா!

0
- கே.பாலகிருஷ்ணன் பாற்கடலிலிருந்து தோன்றிய, கேட்பதை அளிக்கும் சுரபியாகிய காமதேனுவின் வடிவில் கண்ணன் விளங்குகிறான் என்பதால் ஆநிரையை முறைப்படி வழிபட்டால், ‘ஆநிரை காப்பான்’ நம்மைக் காத்தருள்வான் என்பது நம்பிக்கை. அதனாலேயே கார்த்திகை கிருஷ்ணபட்ச துவாதசி...