0,00 INR

No products in the cart.

கோலத்தின் நடுவே சாணப் பிள்ளையார் ஏன்?

கேள்வி நேரம்

– ஞானகுரு

மார்கழி மாதக் கோலத்தின் நடுவே சாணப் பிள்ளையாரை வைத்து வழிபடுவது ஏன்?

.சிவசங்கரி, வந்தவாசி

தனுர் மாதம் எனப்படும் மார்கழி பிறந்துவிட்டாலே ஒவ்வொருவர் வீட்டு வாசல்களிலும் விதவிதமான கோலங்களைக் காணலாம். இன்றும் கிராமங்களில் பெண்கள் அதிகாலையில் வாசலில் கோலமிட்டு, அதன் நடுவே சாணப் பிள்ளையாரை வைத்து அருகம்புல், பூசணி மலர் சாத்தி, நீர் நிலைகளுக்குச் சென்று புனித நீராடி வருவதைக் காணலாம். அப்படி ஒவ்வொரு நாளும் வைக்கும் சாணப் பிள்ளையார் பிரதிமைகளை போகிப் பண்டிகை அன்று நீர்நிலைகளில் கரைத்து விடுவர். இது தவிர, வீட்டு பூஜை அறையில் ஒரு பெரிய தட்டின் மேல் அரிசி மாவினால் கோலமிட்டு, அதன் நடுவே மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து, வாசனை மலர்கள் சாத்தி வழிபடுவர். மூன்று தினங்களுக்கு ஒருமுறை இந்த மஞ்சள் பிள்ளையாரை மாற்றி வேறு மஞ்சள் பொடியால் பிடித்து வைத்தும் வழிபடலாம். இவற்றையும் போகி பண்டிகை அன்று நீர் நிலைகளில் கரைத்து,
மார்கழியில் அவதரித்த மஞ்சள் பிள்ளையாரே!
தீர்வில்லா என மணக் கணக்கு தீர்த்திடுவாய்!
போர் வில்லை ஒடித்து வென்ற கரிமுகனே!
கார்கால மழை போலே கருணை செய்திடுக!’
எனக் கூறி தொழுது, நீராடி மஞ்சள் பூசி வருவர். இதனால் திருமணம் தடைபடும் கன்னிப் பெண்களுக்கு விரைவில் மணவாழ்க்கை அமையும் என்பது ஐதீகம்.

கிரியை நெறி’ என்றால் என்ன? இதற்கான தகுதி யாது?

சி.மாதேஸ்வரன், திருச்சி

கிரியை நெறி’ என்பதற்கு செய்கை வினை, தொழில் என்று தமிழ் அகராதியும், புற வழியிலும் அகவழியிலும் வழிபடுதல் என்று சாஸ்திர நூல்களும் பொருள் சொல்கின்றன. பூஜை தொழில், செய்கை, சடங்கு என்று ஆகமச் சொற்களும் குறிப்பிடுவது காணத்தக்கது. பொதுவாக, இறை வழிபாட்டை சாஸ்திர விதி அறிந்து முறையோடு செய்வதை, கிரியை என்று சொல்வது வழக்கத்தில் இருந்து வருகிறது. இறை பிம்பங்களைத் தொட்டு பூஜை செய்வதற்குக் கிரியைகளைக் கற்றுக்கொள்ள வேண்டும். யார் வேண்டுமாலும் கிரியைகளைத் தெரிந்துகொண்டு பூஜை செய்யலாம்.

ஒரு மகன், தனது தந்தைக்கு வயதான காலத்தில் பணிவிடை செய்வதற்கு ஒப்பானதே சிவபெருமானுக்குச் செய்யும் பூஜைகள். கிரியை நெறியைக் கடைபிடிப்பவர் உள்ளத் தூய்மை, புறத் தூய்மை பெற்றவராகத் திகழ்ந்து திருநீறு, உருத்ராட்சகள் அணிந்து
சிவ பூஜைக்கு வேண்டிய நீர், மலர், தூபம், அபிஷேகப் பொருள், படைப்பதற்கான நிவேதனப் பொருட்களைத் திரட்டிக்கொண்டு, ஐந்து வகை சுத்திகள் செய்து வணங்குதலே இதற்கான தகுதிகள் என்று ஆகமங்கள் கூறுகின்றன. வைணவ முறையினர் எம்பெருமான் ஸ்ரீவேங்கடநாதனை பூஜித்திட சாளக்ராமத்தில் திருமஞ்சன நீராட்டு செய்வதற்கு உரிய சம்பிரதாய தீட்சை பெறுவர். வீட்டில் யாருக்கும் இப்படிச் செய்ய உரிமை உண்டு.

மார்கழியில் அதிகாலை எழுந்து நீராடாதவர் அடுத்தப் பிறவியில் கோயில் எலியாகப் பிறப்பர் என்பது நிஜமா?

எம்.சரஸ்வதி, கடலூர்

இதற்கு எந்தவித ஆதாரமும் கிடையாது. அடுத்தப் பிறவியில் எலியாகப் பிறக்கிறோமா, புலியாகப் பிறக்கிறோமா என்பது முக்கியமல்ல; இந்தப் பிறவியில் எப்படி ஒழுக்க நெறியோடு வாழ்ந்தோம் என்பதே முக்கியம். நீங்கள் மார்கழி மாதத்தில் அதிகாலை எழாமல் இருந்திருப்பதற்காக, உங்கள் அப்பாவோ, தாத்தாவோ இப்படி வேடிக்கையாகச் சொல்லி இருக்கலாம். ‘மார்கழி மாதம் மதி நிறைந்த நன்னாள்’ என்று சூசகமாகக் கூறி இருப்பதில் பல உட்பொருட்கள் இருக்கின்றன. உடலையும் உள்ளத்தையும் நோய் அணுகாமல் காப்பதற்கும் பக்குவப்படுத்துவதற்கும் மார்கழி நீராடல் பெரும் உதவி புரிகிறது. சூரிய உதய காலத்திற்கு முன் எழும் ஆண், பெண் யாராயினும் வாழ்வில் அவர்கள் பல உச்சங்களைத் தொடுவார்கள் என்பது அனுபவப் பாடம்.
வைகறை யாமந் துயிலெழுந்து தான்செய்யும்
நல்லறமு மொண்பொருளுஞ் சிந்தித்து வாய்வதில்
தந்தையுந் தாயுந் தொழுதெழுக என்பதே
முந்தையோர் கண்ட முறை.’
என்ற ஆசாரக் கோவை திருவாக்கின்படி, மார்கழி அதிகாலை எழுதலால் நலன்களே விளையும்.

மானிட அறம் என்று பெரியவர்கள் எதைக் கூறுகிறார்கள்?

சி.என்.கோபாலன், கும்பகோணம்

உலகில் பிறந்த அனைத்து உயிர்களும் மகிழ்ச்சியை மட்டுமே விரும்பி ஏற்கின்றன. ஆனால், அமைதியான, ஆனந்த வாழ்வுக்கான வழியை மகான்கள் விரும்புவதில்லை. அதேபோல், அமைதி மற்றும் ஆனந்த வாழ்வுக்கான வழியை மகான்களும் தபஸ்விகளும் உலக மக்களுக்குக் காட்டி உள்ளனர். அதற்கு, ‘சிரேயஸ் வழி’ என்று பெயர். உலகில் பொருள் சம்பாதிக்க, ஐந்து புலன்களுக்கு இன்பம் உண்டாக என்ன வழியோ, அதை மட்டுமே சிந்தனை செய்து, அதன் வழி செல்பவர்களுக்கு, ‘ப்ரேயஸ்’ என்று பெயர். அதிகமான மகிழ்ச்சி கொள்வதையே, சிரேயஸ் என்று குறிப்பிடுகிறது வேதம். இந்த வழியில் செல்வதற்கு மனிதன் முதலில் கடைபிடிக்க வேண்டியது அகிம்சை என்னும் தந்திரம். எண்ணங்களாலோ, சொற்களாலோ, செயல்களாலோ மற்றவரைத் துன்புறுத்தாமல் இருப்பதுதான் மேலான அறம். இப்படி, வாழ்நாளில் கடைபிடிக்கும் அறங்களை தெய்வப்புலவர் திருவள்ளுவரே நமக்கு உபதேசமாகச் சொல்லி இருக்கிறார். இன்னா செய்யாமை, கொல்லாமை, புலால் மறுத்தல் ஆகிய அதிகாரங்கள் இவற்றைத் தெளிவு படுத்துகின்றன.

பேச்சில் பொய் கலவாது இருப்பது வாய்மை, தன்னிடம் உள்ளவற்றைப் பிறருக்கு மனமுவந்து வழங்குவது ஈகை, ஒப்புரவறிதல், பிற பாலினத்தவரை தவறான நோக்கத்துடன் பார்க்காமல் இருப்பது பிறன் இல் விழையாமை, ஆசைகளுக்கு அடிமை ஆகாதிருத்தல் அவா அறுத்தல். பெரியோரிடத்தில் பணிவுடன் நடந்து கொள்ளுதல், அனைத்து உயிர்களிடத்தும் கருணை காட்டுதல், அருளுடைமை இவையே அடிப்படை அறங்கள் என்று வேதங்கள், இலக்கணங்கள் வலியுறுத்தி வருகின்றன.

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

வினைப்பயன்!

1
- பா.கண்ணன், புதுதில்லி மகாபாரதம் ஆதிபர்வத்தில் மக்களுக்குப் படிப்பினையை போதிக்கும் விதமாக, ரிஷிகள் தங்கள் சீடர்களுக்கு பற்பலக் கதைகளைச் சொல்லியுள்ளனர். அதில் ஒன்றை இப்போது பார்க்கலாம். ஒரு தாய் தனது இளம் மகனுடன் விறகு, சுள்ளிகள்...

​சங்கராந்தி வழிபாடும் பலன்களும்!

0
சூரிய பகவான் ஒரு ராசியைக் கடந்து அடுத்த ராசிக்குப் பிரவேசிக்கும் நேரத்தில்தான் தமிழ் மாதம் பிறக்கிறது. இதை வடமொழியில், ‘சங்கராந்தி’ என்பர். தை மாதப் பிறப்பான மகர சங்கராந்தி தினம் விசேஷமாகக் கொண்டாடப்படுவதை...

​இடது கண் ஏன் அழுதது?

0
இறைவனுக்கு எதைச் சமர்ப்பித்தாலும் அது மனப்பூர்வமானதாக இருக்க வேண்டும்.அது பொருளாக இருந்தாலும் சரி, உயிராக இருந்தாலும் அந்தச் சமப்பணம் எந்தப் பிரதிபலனும் எதிர்பாராததாக இருப்பதே உண்மையான சமர்ப்பண வழிபாடாகும். ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா, ஒருசமயம்...

​ஸ்ரீ அனுமத் ஜயந்தி துளிகள்

0
மாதங்களில் சிறந்த மார்கழியில், அமாவாசை திதியும் மூல நட்சத்திரமும் இணைந்து வரும் நாளில் அஞ்சனையின் மகனாக அவதரித்தவர் ஸ்ரீ ஆஞ்சனேயர். இத்திருநாள் அனுமத் ஜயந்தி நாளாக நாடெங்கும் வழிபடப்படுகிறது. இனி, அனுமன் குறித்த சில...

வேதனை தீர்ப்பார் வெள்ளடைநாதர்!

- நெய்வாசல் நெடுஞ்செழியன் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழிக்கு அருகில் அமைந்துள்ளது திருக்குருகாவூர் அருள்மிகு காவியங்கன்னி உடனுறை வெள்ளடைநாதர் திருக்கோயில். தேவார பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்களில் இது பதிமூன்றாவதாகும். ஆதியில் இத்தலம் சுவேதவிருஷபுரம்,...