இந்தித் திரையுலகின் பழம்பெரும்பாடகிலதாமங்கேஷ்கருக்கு கொரோனாதொற்று ஏற்பட்டதை தொடர்ந்து கடந்த 8-ம் தேதி மும்பையில் உள்ள ப்ரீச்கேண்டி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வயது 92. அந்த மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் லதாமங்கேஷ்கர்உள்ளார்.
இந்நிலையில், அவரது உடல்நிலை குறித்த அவருக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர் பிரதித் சம்தானி கூறியதாவது:
லதா மங்கேஷ்கர் இன்னும் தீவிர சிகிச்சைப் பிரிவில்தான் உள்ளார். அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவர் விரைவில் குணமடைவதை உறுதிசெய்ய எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம். லதா மங்கேஷ்கர் குணமடைய பிரார்த்தனை செய்யுங்கள்.
-இவ்வாறு அநத மருத்துவர் தெரிவித்துள்ளார்.