இந்திய நுட்பக் கலைகளை உலகளவில் இணைக்கும் முன்னோடி தளமான MDnD.in, 2017 இல் திரு. கே. கல்யாணசுந்தரம் அவர்களால் தொடங்கப்பட்டது. இசை, நாடகம், நடனம் உள்ளிட்ட கலைத்துறையினரை ஒரே இடத்தில் இணைத்து, அவர்களுக்குள் பரிமாற்றங்களை எளிமையாக்குவது இதன் முதன்மை நோக்கம்.
வரவிருக்கும் மார்கழி கச்சேரி சீசனுக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனையை MDnD மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது. ரசிகர்கள் கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ், நாரத கான சபா, சார்சூர் ஆர்ட்ஸ் ஃபவுண்டேஷன், பிரம்ம கான சபா, தியாக ப்ரம்ம சபா, மைலாபூர் ஃபைன் ஆர்ட்ஸ், பார்த்தசாரதி சுவாமி சபா, இந்தியன் பைன் ஆர்ட்ஸ் சொசைட்டி, கலாக்ஷேத்ரா ஃபவுண்டேஷன், நாத சுதா, பாரத் கலாச்சார், சங்கீத உத்சவ், அப்பாஸ் கல்சுரல், கார்நாடிகா குளோபல் உள்ளிட்ட சபைகளின் சீசன் மற்றும் தினசரி டிக்கெட்டுகளை www.mdnd.in மூலம் பெறலாம். மேலும், பிற தளங்களில் விற்கப்படும் டிக்கெட்டுகள் மற்றும் இலவச நிகழ்வுகளின் விவரங்களும் ஒருங்கிணைக்கப்படும்.
2025 சீசன் புதுமைகள்:
HOT DEALS மூலம் டிக்கெட்டுகளுடன் இசை–நடன நூல்கள் மற்றும் கலாக்ஷேத்ரா வெளியீடுகளையும் வாங்கலாம்.
'Upcoming Events' பகுதியில் அடுத்த 30 நாட்களின் நிகழ்வுகளை எப்போதும் பார்க்கலாம்.
பதிவு செய்யப்பட்ட கலைஞர்களுக்கான புதுப்பிக்கப்படும் ‘Artist Calendar’ வசதி அறிமுகம்.
15–25 வயது இளம் கலைஞர்களுக்கான 'ஆனந்த மார்கழி' கச்சேரி தொடர்: டிசம்பர் 13–28 வரை தினமும் காலை 10–12, MDnD Performance Centre-ல் இலவச நுழைவுடன் நடைபெறும்; உலகளவில் நேரலையாக ஒளிபரப்பப்படும்.