இஞ்சியை இப்படியும் பயன்படுத்தலாம் தெரியுமா..?

இஞ்சியை இப்படியும் பயன்படுத்தலாம் தெரியுமா..?

ஞ்சி ஒரு மருத்துவ உணவுப்பொருள் என்பது தெரிந்ததுதான். ஆனால், அது ஒரு சிறந்த தலைமுடி பராமரிப்பு பொருள் என்பது தெரியுமா? உலகில் ஹவாய் தீவில் வசிக்கும் பெண்களின் கூந்தல் மிக நீளமானதாக இருக்கும். அந்தளவுக்கு அவர்களின் கூந்தல் வளர்ச்சிக்கு காரணம் இஞ்சிச்சாறுதான் என்கிறார்கள். அந்த தீவுகளில் வசிக்கும் பெண்கள் இஞ்சி சாற்றை நேரடியாக தலைக்கு ஷாம்பு போல்  போட்டு குளிப்பார்களாம்.

இஞ்சி சாறு தலைக்கு தேய்த்து குளித்து வர பெண்களின் கூந்தல் அடர்த்தியாகவும், நீளமாகவும் வளர்வதுடன், பொடுகு தொந்தரவுமின்றி இருக்கலாம் என்கிறார்கள். ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கும் இஞ்சி சாறு மிகவும் நன்மை பயக்கும். இது உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க வேலை செய்கிறது. இதில் உள்ள கிருமி நாசினிகள் பொடுகை கட்டுப்படுத்த உதவுகிறது.

இஞ்சியை நன்றாக கழுவி பொடிப்பொடியாக வெட்டி வெயிலில் நன்கு காயவைத்து, அதை தேங்காய் எண்ணெயில் கலந்து அரைத்து பேஸ்ட் போல் செய்து, அதை 15 நாட்கள் வெயிலில் காய வைத்து வடிகட்டி ஒரு பாட்டிலில் வைத்து, கொண்டு தினமும் பயன்படுத்தி வர பொடுகு தொந்தரவு போய் விடும்.

இஞ்சியிலுள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் கிருமி நாசினிகள், முடி உதிர்வை கட்டுப்படுத்தும் ஒரு சிறந்த தீர்வாகும். இது உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவும் தூண்டுதல் பண்புகளைக் கொண்டுள்ளது, இதனால் மயிர்க்கால்களின் வளர்ச்சியை மேம்படுத்துகிறது.

உணவிற்கும் முன் சில ஸ்பூன் இஞ்சி சாற்றை தண்ணீருடன் குடித்து வந்தால் உடல் எடையை குறைக்கலாம். இஞ்சி உங்கள் வயிற்றை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்கும், இதனால் நீங்கள் தேவைக்கு அதிகமாக சாப்பிட மாட்டீர்கள்.  இஞ்சி சாறில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஜிஞ்சரால் என்ற செயலில் உள்ள கலவை உள்ளது. இதன் ஆண்டிசெப்டிக், ஆண்டிஆக்ஸிடன்ட், அழற்சி எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் அனைத்தும் இணைந்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

இஞ்சி சாறு வாய் துர்நாற்றத்தையும் குறைக்கும். மழை மற்றும் குளிர்கால சூழ்நிலையில் இந்த ஜூஸை ஒரு முறை குடித்தால் போதும். இதில் உள்ள வைட்டமின் சி, சுவாசத்தை துர்நாற்றம் வீசும் பாக்டீரியாக்களை அழித்து பாதுகாக்கும். இஞ்சியின் பல கூறுகள் வலி நிவாரணிகளாகவும் செயல்படுகின்றன. பாதிக்கப்பட்ட இடத்தில் இஞ்சி சாற்றை தடவலாம். இஞ்சி சாறு குடிப்பதால் வலி குறையும்.

இஞ்சியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் பண்புகள் கொலாஜனை உடைப்பதைத் தடுக்கிறது, தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களிடமிருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது, இதன் மூலம் உங்கள் சருமத்தை இளமையாகவும், நீண்ட காலத்திற்கு பளபளப்பாகவும் வைத்திருக்கும். அதே நேரத்தில், இஞ்சி சாற்றில் உள்ள கிருமி நாசினிகள் முகப்பருவின் அறிகுறிகளை சரிபடுத்துவதோடு, சருமத்தில் தொற்று ஏற்படாமல் பாதுகாக்கிறது.

நல்ல இஞ்சி எது?

இஞ்சி தென் கிழக்கு ஆசியாவில் தோன்றிய ஒரு பூக்கும் தாவரம். மஞ்சள், ஏலக்காய் குடும்பத்தைச் சேர்ந்தது. நல்ல இஞ்சி மனம் எப்போதும் நெடிய ஆகவும், தூக்கலாகவும் இருக்கும். போலி இஞ்சியில் வாசனை இருக்காது. நிறைய இடங்களில் "mountain root" எனும் கிழங்கை இஞ்சி என்று சொல்லி விற்கிறார்கள்.

அசல் இஞ்சியின் தோலை உரித்தால், அது கையில் பிசுபிசுப்பாக ஒட்டும். வாசனை கைகளில் இருக்கும். போலி இஞ்சி தோலை உரிக்க கடினமான இருக்கும். இஞ்சியை உடைத்தால் நூல் போல் வந்தால் அது நல்ல இஞ்சி. எப்போதும் இஞ்சியை வாங்கி கழுவி காயவைத்து தான் பயன்படுத்த வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com