குளிர் காலத்தில் சருமத்தையும் கூந்தலையும் பராமரிப்பது எப்படி?

குளிர் காலத்தில் சருமத்தையும் கூந்தலையும் பராமரிப்பது எப்படி?

குளிர்காலத்தில் சருமமும் கூந்தலும் அதிகப்படியான பாதிப்புகளுக்கு உள்ளாகும். குளிர்காலத்தில் அதிகம் தாகம் எடுக்காது என்பதால் நாம் குடிக்கும் தண்ணீரின் அளவு மிகவும் குறைந்து விடும். ஆனால் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். தண்ணீர் போதுமான அளவு குடித்தால் தான் சருமம் பொலிவாக இருக்கும் குளிரின் தாக்கத்தால் முடி உதிரும் பொடுகு அதிகமாகும்.

கண் மற்றும் பாத எரிச்சல் ஏற்படும். மலச்சிக்கல் ஏற்படும். வியர்வையேவெளியேறாது என்பதால் சரும துவாரங்கள் சுருங்கி பொலிவிழக்கும். இதை கட்டுப்படுத்த சில டிப்ஸ் பார்ப்போம்!

உண்ணும் உணவில் கவனம்

குளிர்காலத்தில் முதலில் சருமம் தான் வறட்சியாகும் அவற்றை கட்டுப்படுத்த நாம் உண்ணும் உணவில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம் ஏனெனில் உடலில் உள்ள சருமத்தை புத்துணர்ச்சி பெற  செய்ய சரியான ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வது முக்கியம். ஒரு நாளைக்கு மூன்று லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம் இது உங்கள் தோலின் ஈரப்பதத்தை தொடர்ந்து பராமரிக்க உதவுகிறது மேலும் நீர் காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடுவது நல்லது.

சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க வேண்டும்

குளிர்காலத்தில் சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க மாய்ஸ்ரைசர் கிரீம்களை பயன்படுத்துவது நல்லது உங்கள் தோலுக்கு ஏற்ற கிரீம்களை சிறந்த தோல் மருத்துவரின் ஆலோசனை பெற்று பயன்படுத்துவது நல்லது வீட்டில் எளிமையாக கிடைக்கக்கூடிய தயிர் அல்லது பால் கொண்டு சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்கலாம்..

உலர்ந்த பழமான பாதாம் மற்றும் நெய் சேர்த்துக் கொள்ளவும்

குளிர்காலத்தில் பாதாம் மற்றும் நெய் அதிக அளவில் சேர்த்துக் கொண்டால் உடல் ஆரோக்கியம் பெறுவதுடன் சருமம் பொலிவடையும் Flaxseeds  என்ற ஆளி விதைகளை உண்பது உடலுக்கும் சருமத்துக்கும் நல்லது.

இதையும் படியுங்கள்:
எளிமையான பளீச் டிப்ஸ் பத்து!
குளிர் காலத்தில் சருமத்தையும் கூந்தலையும் பராமரிப்பது எப்படி?

நெல்லிக்காய் நல்லது

தினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டால் மலச்சிக்கல் நீங்கும் செரிமானம் சீராகும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகம் இருக்கிறது பொதுவாகவே வைட்டமின் சி அமிலத்தன்மை அதிகப்படுத்தும் என்பதால் சரும பிரச்சனைகள் ஒவ்வாமை முடி உதிர்வை தடுக்கும் முதிர்ச்சியான தோற்றம் வராது குளிர்ச்சி அதிகமாக இருப்பதால் வரும் சிறு சிறு குளிர்கால நோய்கள் வராமல் தடுக்கும்.

உதடுகளில் கவனம்

குளிர்காலத்தில் உதடுகள் வறட்சியடைந்து உலர்ந்து தோற்றமளிக்கும் உதடுகளில் வெடிப்புகள் உண்டாகும் அப்படி இருக்கும் போது உதட்டின் தோலை கடிக்காதீர்கள் அப்படி செய்வதால் உதட்டின் நிறம் கருப்பாக மாற வாய்ப்பிருக்கிறது இதை தடுக்க நெய் மற்றும் ஆலிவ் ஆயில் தடவினால் உதடுகள் மென்மை அடையும்.

முடி உதிர்வதை தடுப்பது எப்படி

குளிர்காலத்தில் தலை குளித்தால் முடியை நன்றாக உலர வைக்க வேண்டும் முடியை உலர வைக்க டிரைவர் உள்ளிட்டவைகளை பயன்படுத்துவதை தவிர்க்கவும் வாரம் ஒரு முறை ஆயில் மசாஜ் செய்வது நல்லது ஊட்டச்சத்து குறைபாட்டாலும் முடி உதிர்வு ஏற்படலாம்.

ஆரோக்கியமான கூந்தலுக்கு புரதச்சத்து இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் நிறைந்த உணவுகள் அவசியம்.

கேரட் பச்சை காய்கறிகள் மிளகு எலுமிச்சை திராட்சை உலர் பழங்கள் மீன் முட்டை போன்ற உணவுகள் கூந்தலை அடர்த்தியாகவும் ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்க உதவுகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com