ஸ்கின் கலர் (சரும நிற) லெக்கிங்ஸ் அணிவதால் ஏற்படும் சங்கடங்கள்!

types of leggings
types of leggings
Published on

பெண்களின் ஃபேஷன் உலகில் லெக்கிங்ஸ் என்பது அணிவதற்கு மிகவும் வசதியான மற்றும் பிரபலமான ஆடை வகையாகும். ஆனால் சரும நிற லெக்கிங்ஸ் அணிவது பற்றி நன்கு யோசிக்கவேண்டும். அவற்றை அணிவதால் ஏற்படும் சில சிரமங்கள் பற்றி அறிந்து கொள்வோம்.

தவறான தோற்றம்: தூரத்தில் இருந்து பார்க்கும்போது, சரும நிற லெக்கிங்ஸ் நீங்கள் எதுவும் அணியாதது போன்ற தவறான தோற்றத்தை உருவாக்கும். இது மிகவும் சங்கடமான சூழ்நிலைகளை ஏற்படுத்தலாம். குறிப்பாக பொது இடங்களில் சிலர் இது ற்றி கேலி செய்யக்கூடும்.

எதிர்மறையான தோற்றம்: சரும நிற லெக்கிங்ஸ் உங்கள் உடல் வளைவுகளையும் குறைபாடுகளையும் மிகவும் தெளிவாக காட்டிவிடும். கருப்பு அல்லது அடர் நிற லெக்கிங்ஸ் இயற்கையாகவே ஒரு மென்மையான தோற்றத்தை கொடுக்கும், ஆனால் சரும நிற லெக்கிங்ஸ் எதிர்மறையான தோற்றத்தை கொடுக்கும்.

மேட்ச் செய்வது கடினம்: ஸ்கின் கலர் லெக்கிங்ஸுடன் மற்ற ஆடைகளை மேட்ச் செய்வது மிகவும் சவாலானது. எந்த நிற டாப் அல்லது துணிக்கும் இது சரியாக பொருந்தாது. கருப்பு, நீலம் அல்லது சாம்பல் நிற லெக்கிங்ஸ் எந்த உடையுடனும் நன்றாக மேட்ச் ஆகும்.

பராமரிப்பதில் சிரமம்: வெளிர் நிற லெக்கிங்ஸில் எந்த சிறிய கறையும் பளிச் என்று நன்றாக தெரியும். காபி, மை, அல்லது உணவுக்கறை போன்றவை இதில் பார்த்தவுடன் கண்ணுக்கு தெரிவதுபோல இருக்கும்வேறு ஏதேனும் விழுந்தால் அது உடனே கவனிக்கப்படும். துவைத்தாலும் கறைகள் எளிதில் அகலாது. பராமரிப்பது கடினமாக இருக்கும்.

அலுவலகத்திற்கு ஏற்றது அல்ல: அலுவலகத்திற்கோ அல்லது முறையான நிகழ்வுகளுக்கோ ஸ்கின் கலர் லெக்கிங்ஸ் பொருத்தமானது அல்ல. இது மிகவும் சாதாரணமாகவும், சில நேரங்களில் அநாகரிகமாகவும் தோன்றலாம்.

இதையும் படியுங்கள்:
கூந்தல் வேர்களை வலுப்படுத்தும் இயற்கையின் அருமருந்து!
types of leggings

புகைப்படங்களில் மோசமாக தோற்றம்: கேமரா வெளிச்சம் மற்றும் கோணத்தைப் பொறுத்து, புகைப்படங்களில் இது உங்கள் கால்களின் நிறத்தோடு கலந்து ஒருவித குழப்பமான தோற்றத்தை உருவாக்கும்.

பருவகாலத்திற்கு ஏற்றதல்ல: குளிர்காலத்தில் ஸ்கின் கலர் மிகவும் வெளிறிப் போனதுபோல தோன்றும். கோடைகாலத்தில் இது அசௌகரியமானதாக இருக்கலாம். ஏனெனில் அது மிகவும் வெளிப்படையானது. அடர் நிறங்கள் எல்லா பருவங்களுக்கும் பொருந்தும்.

முதுமைத் தோற்றம்: சரும நிற லெக்கிங்ஸ் சில நேரங்களில் பழைய காலத்து பாணி போல தோன்றும். இது உங்களை வயதானவர் போல காட்டலாம். ட்ரெண்டிங்கில் இல்லாத பழமைவாதி போல தோன்ற வைக்கும்.

தரமற்றது: தரம் குறைந்த சரும கலர் லெக்கிங்ஸ் பார்வைக்கு மிகவும் மோசமாக தெரியும். சற்று தரம் குறைந்த துணியில் தைக்கப்பட்ட சரும நிற லெக்கிங்ஸ்கள், தையல் மற்றும் துணியின் மெல்லிய தன்மையை அப்பட்டமாக வெளிப்படுத்தும். இது தோற்றத்தையே கெடுத்துவிடும்.

இதையும் படியுங்கள்:
உங்கள் கைகள் அழகாக மாற... நகப் பராமரிப்பு ரகசியங்கள்!
types of leggings

குறைந்த தன்னம்பிக்கை: இறுதியாக, சரும கலர் லெக்கிங்ஸ் அணிந்தால் உங்கள் தோற்றத்தை பற்றி தொடர்ந்து கவலைப்பட வைக்கும். இது நன்றாக இருக்கிறதா? உடல் அமைப்பு வெளியே தெரிகிறதா?’ என்ற நினைக்க வைத்து உங்கள் தன்னம்பிக்கையை குறைக்கும்.

லெக்கிங்ஸ் வாங்கும்போது கருப்பு, நீல நிறம், சாம்பல், அல்லது அடர் பச்சை போன்ற நிறங்களை தேர்வு செய்யுங்கள். இவை பார்க்க அழகாக, எளிதான பராமரிப்புடன், சிறந்த ஸ்டைலான தோற்றம் தரும். ஃபேஷன் என்பது அழகுக்காக மட்டுமல்ல, வசதியாகவும் இருக்கவேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com