குளிர்கால சரும பராமரிப்பு - 5 பொருட்கள் போதுமே!

Beauty tips
Beauty tips

1. தேங்காய் எண்ணெய்

Coconut Oil
Coconut Oil

பண்டைய காலத்தில் இருந்தே சரும பராமரிப்பில் தேங்காய் எண்ணெய் முக்கிய பங்கு வகிக்கிறது. வெயில் காலத்தில் இது புற ஊதாக் கதிர்களை தடுத்து சருமத்தின் நிறத்தை பாதுகாக்கிறது. இது ஒரு இயற்கையான சன்ஸ் ஸ்கிரீன் ஆகும். இதுவே குளிர்காலத்தில் சருமம் வறண்டு போகாமல் இருக்க மாய்ஸ்சரைஸ் ஆக பயன்படுகிறது. தேங்காய் எண்ணெயில் உள்ள நீர் பசை சருமம் உலர்ந்து விடாமல் ஈரப்பதத்துடன் எப்போதும் வைத்திருக்கிறது. வெளிப்புற நோய்த் தொற்றுகளிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கவும் இது உதவுகிறது. உதடுகளையும் இமைகளையும் பளபளப்பாக வைத்திருக்கிறது. ஒரே நேரத்தில் லிப் கிளாஸ் ஆகவும், மஸ்காரா போலவும் பயன்படுகிறது.

2. பால் மற்றும் தேன்

Milk and Honey
Milk and Honey

ஒரு தேக்கரண்டி தேன் மற்றும் இரண்டு ஸ்பூன் பால் சேர்த்து பேஸ்ட் போல கிரீம் தயாராகும் வரை நன்கு கலந்து விட்டு பஞ்சில் தொட்டு முகத்தில் தடவி 15 நிமிடங்களுக்கு மசாஜ் செய்துவிட்டு குளிர்ந்த நீரில் முகத்தை  கழுவினால் பிரகாசமாக இருக்கும். பாலில் லாக்டிக் அமிலம் மற்றும் ஆல்பா ஹைட்ராக்ஸி அமிலம் உள்ளது. அவை அழகு சாதனப் பொருட்களைத் தயாரிப்பதில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. 

இது குளிர்காலத்தில் வறண்ட சருமத்திற்கு மாய்ஸ்சரைசராக செயல்படுகிறது. சருமத்தில் உள்ள மெலனினை பாதுகாக்கிறது. தேன் சருமத்திற்கு ஈரப்பதத்தை அளிக்கிறது. இது முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குகிறது. முகத்தை வெண்மையாக்கும் அமிலங்கள் தேனில் இயற்கையாக உள்ளதால் இது ஒரு இயற்கையான கிளன்சராக செயல்படுகிறது. 

3. பாதாம் பருப்பு 

Almond
Almond

குளிர்காலத்தில் முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள் மற்றும் மங்குகளை நீக்க பாதமை பாலில் ஊற வைத்து, அரைத்து பயன்படுத்தலாம். பால் சருமத்தை ஈரப்பதமாக வைக்கிறது. பாதாமில் சருமத்தை வெண்மையாக்கும் வேதியியல் பண்புகள் நிறைந்துள்ளன. இது முகத்தில் உள்ள கறைகள் மற்றும் கரும் புள்ளிகளை நீக்குகிறது. 

4. பெட்ரோலியம் ஜெல்லி

Petroleum jelly
Petroleum jelly

இது மினரல் ஆயில் மற்றும் மெழுகு கலந்த கலவையாகும். இது சருமத்திற்கு மாய்ஸ்சரைசராக செயல்பட்டு ஈரப்பதத்தை தக்க வைக்கிறது. இது காயங்கள் மீதும், அறுவை சிகிச்சைக்குப் பிறகும் பயன்படுத்தப்படுகிறது. இது முகத்தை வெளுப்பாக்குவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. அது மட்டுமல்ல, குதிகால் மற்றும் உதடுகளின் வெடிப்பு சிகிச்சையிலும் பயன்படுத்தப்படுகிறது. உதடுகளில் தடவுவதன் மூலம் வெடிப்பு ஏற்படாமல் பாதுகாக்கும்.

5. கிளிசரின்

Glycerine
Glycerine

இது சோப்புகள் மற்றும் லோஷன்களில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் மூலப்பொருள். கிளிசரின் சருமத்தின் வெளிப்புற அடுக்கை ஹைட்ரேட் செய்கிறது. இதனால் அது மாய்ஸ்ரைசர் போல செயல்படுகிறது. சருமத்தை எரிச்சலிலிருந்து பாதுகாக்கிறது மற்றும் காயங்களை விரைவாக குணப்படுத்த உதவுகிறது. இதை பன்னீரில் கலந்து முகத்தில் தடவி வரலாம். இது ஒவ்வாமை, அரிப்பு உள்ளிட்ட சில சரும நோய்கலிருந்து விடுதலை அளிக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com