சமையலறையிலேயே அழகு சாதனங்கள்...

சமையலறையிலேயே  அழகு சாதனங்கள்...

தக்காளியில் சாறு எடுத்து முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து, காய்ந்ததும் தண்ணீரில் கழுவிக் கொண்டால் முகத்தில் உள்ள சிறு துவாரங்கள் அடைபட்டு, முகம் பளிச்சென்று ஆகும். முகத்தில் எண்ணெய் வழியாது.

பச்சரிசி மாவில் தயிர் கலந்து குழைத்து, இரவில் முகத்தில் பூசி, காலையில் முகம் அலம்பி கொண்டால் முகம் சுத்தமாகவும், அழகாகவும் இருக்கும்.

ஒரு வெள்ளரித் துண்டை முகத்தில் தேய்த்து பிறகு கழுவிக் கொண்டால் முகம் அழகாகும்.

ஆரஞ்சு, ஆப்பிள், வாழை, பப்பாளி ஏதாவது ஒரு பழத்துண்டில், முகத்திற்கு பேசியல் ஆக்கினால் ஒரு மாதத்தில் முகம் பளிச்சிடும்.

பப்பாளிப்பழம், தேன் இரண்டையும் கலந்து குழைத்து, முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து கழுவிக் கொண்டால் முகம் மிருதுவாக இருக்கும்.

கடலை மாவு, பயத்த மாவு இரண்டையும் சம அளவு கலந்து, முகம் மற்றும் உடலில் பூசிக்கொண்டு குளித்தால் முகமும், சருமமும் மினுமினுக்கும். அலர்ஜி பிரச்சனைகள் இல்லை.

பாலாடை, கிரீம் இவற்றோடு வெள்ளரிக்காயை அரைத்து, முகம் கழுத்தில் தடவி, பிறகு குளித்தால், சருமம் ஒளி பெறும்.

ரோஜா, ஆவாரம் பூ, மகிழம்பூ, மரிக்கொழுந்து, செண்பகப்பூக்களை உலர்த்தி பொடித்து, தேய்த்துக் குளித்து வந்தால் சருமம் முகம் மின்னும். உடலில் மணம் வீசும். உடலுக்கு ஆரோக்கியமும் கூட.

தேங்காய் எண்ணெய், தேங்காய் பால் சம அளவு கஸ்தூரி மஞ்சள் தூள் சேர்த்து, காய்ச்சி வடிகட்டி தினமும் முகம் கை, கால்கள் உடம்பில் தடவி, அரை மணி நேரம் கழித்து பாசிப் பயறு மாவு தேய்த்து குளித்தால், உடல் நல்ல நிறம் பெறும்

குளிர்ந்த நீரில் பால் கலந்து, அதை பஞ்சில் தொட்டு முகம் கழுத்து பகுதியில் பூசிக்கொண்டு, அரை மணி நேரம் கழித்து கழுவி கொள்வதை தினமும் செய்வதால் நாளடைவில் பளபளப்பு பெறலாம்.

சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருந்தாலே அழகாகி விடலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com