தேங்காய் பால்
தேங்காய் பால்

தேங்காய் பால் க்ரீம் ஹேர் பேக்!

நிறைய பேருக்கு ஸ்கால்ப்பில் முடி குறைவாக இருக்கும். தலையை சீப்பை வைத்த சீவினால் கூட வழுக்கை தெரியும். அப்படி முடி விழுந்த இடத்தில் மீண்டும் முடி வளர அதே சமயம் நெருக்கமாக முடி திக்காக வளர விரும்பினால் இந்த பிரச்சினைகளுக்கு எல்லாம் ஒரு தீர்வு கிடைக்க சூப்பரான ஹேர் பேக்கை உபயோகிக்கலாம்.

இந்த ஹேர் பேக்குக்கு நமக்கு தேவையான ஒரே ஒரு பொருள் தேங்காய். அந்த ஹேர் பேக்கை எப்படி தயார் செய்வது?

தேங்காய் பால் க்ரீம்
தேங்காய் பால் க்ரீம்

முதலில் 1/2 மூடி அளவு தேங்காயை எடுத்து துருவி மிக்ஸியில் போட்டு கொஞ்சம் தண்ணீர் விட்டு நன்றாக அரைக்க வேண்டும். அரைத்த இந்த தேங்காயை ஒரு வடிகட்டியின் மூலம் வடிகட்டி எடுத்தால் திக்கான தேங்காய்ப்பால் நமக்கு கிடைக்கும். அதை அப்படியே ஒரு கிண்ணத்தில் ஊற்றி மூடி போட்டு ஒரு நாள் இரவு முழுவதும் அப்படியே வைத்து விடுங்கள். அதாவது 8 மணி நேரம் இந்த தேங்காய்ப் பால், அப்படியே இருக்கலாம். பிரிட்ஜில் வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. வெளியிலேயே வையுங்கள்.

எட்டு மணி நேரம் கழித்து இந்த தேங்காய் பாலை திறந்து பார்த்தால், தயிர் போன்ற திரவம் நமக்கு கிடைத்திருக்கும். அடியில் தண்ணீர் அப்படியே தங்கி இருக்கும். இதை போட்டு கரண்டியை வைத்து கலந்து விடக்கூடாது. அப்படியே ஒரு வடிகட்டியில் இதை ஃபில்டர் செய்து கொள்ளுங்கள். தண்ணீர் அனைத்தும் வடிகட்டி விடும். மேலே கிரீமியாக கோக்கனட் கிரீம் கிடைத்திருக்கும். இது தான் நம் தலை முடிக்கு தேவையான கோக்கனட் க்ரீம் ஹேர் பேக்.

ஹேர் பேக்
ஹேர் பேக்

இதை அப்படியே உங்களுடைய தலையில் அப்ளை செய்து கொள்ளுங்கள். தலையின் மயிர்க் கால்களில், வேர்ப்பகுதியில் இந்த கிரீம் நன்றாக பட வேண்டும். அதன் பின்பு முடியின் மேல் பக்கத்தில் இருந்து நுனிப்பாகம் வரை இந்த க்ரீமை அப்ளை செய்துவிட வேண்டும். பிறகு 20 நிமிடங்கள் இந்த ஹேர் பேக் உங்கள் தலையிலேயே அப்படியே இருக்கட்டும்.

அதன் பின்பு ஷாம்பு போட்டு தலைக்கு குளித்து விடுங்கள். வாரத்தில் ஒருநாள் இந்த ஹேர் பேக்கை போடவேண்டும். பட்டு போன்ற மிருதுவான உங்கள் கேசம் காண்போரை வியக்க வைக்கும்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com