உருளைக் கிழங்கு பியூட்டி டிப்ஸ்!

உருளைக் கிழங்கு பியூட்டி டிப்ஸ்!

இனியாவுக்கு வயது 19, இப்போது தான் கல்லூரி செல்லத் தொடங்கி இருக்கிறார். பள்ளியில் இருக்கும் வரை பெரிதாக முக சருமம் பாதிப்படையவில்லை. ஆனால், கல்லூரிக்காக தினமும் ஸ்கூட்டியில் 4 கிலோமீட்டர் பயணிக்க வேண்டிதாயிருப்பதால் முகம் அதிகமாக வெளிக்காற்றில் எக்ஸ்போஸ் ஆகையில் சருமம் வறண்டு போவதுடன் ஆங்காங்கு தோல் உரிதல் பிரச்சனையும் அவரை வாட்டி இருக்கிறது. அதிலிருந்து மீள்வதற்காக அவர் இணையத்தில் தேடிக் கண்டறிந்தது தான் இந்த பியூட்டி டிப்ஸ். இந்த டிப்ஸை மட்டும் பின்பற்றாமல் கூடுதலாக இப்போது வெளியில் ஸ்கூட்டியில் பயணிக்கையில் முழங்கைகள் வரை மறைக்கும் கையுறை மற்றும் முகத்தையும், கேசத்தையும் மறைக்க நீண்ட துப்பட்டாவும் பயன்படுத்துவதாகத் தெரிவித்தார். இதனால் நகரின் மாசுக்களில் இருந்து தான் தப்பிக்க முடிவதாகச் சொல்லும் இனியா, பகிர்ந்து கொண்ட இந்த உருளைக் கிழங்கு பியூட்டி டிப்ஸால் எந்த வித நெகடிவ்வான சைட் எஃபெக்ட்ஸும் இல்லை என்பதால் எல்லா வயதினரும் பயமின்றி பின்பற்றலாம்.

உங்கள் சருமத்தின் ஆரோக்கியத்தை மீட்டெடுக்க, வீட்டிலேயே இப்படி ஃபேஸ்-வாஷ் செய்யுங்கள்.

அரை உருளைக்கிழங்கைத் தட்டி, அதனுடன் அரை தேக்கரண்டி கடலை மாவு மற்றும் அரை டீஸ்பூன் எலுமிச்சை (சாறு) சேர்த்து கலக்கவும். இந்த ஃபேஸ் பேக்கை முகமூடி போல உங்கள் முகத்தில் தடவி சுமார் 15 நிமிடங்கள் ஊற வைக்கவும், நன்கு காய்ந்ததும் அதை வெதுவெதுப்பான நீரில் கழுவவும், அவ்வளவுதான். முகம் பளிச்சென்று ஆகி விடும்.

உருளைக்கிழங்கு சருமத்தை பொலிவாக்க உதவுமா?

ஆம், இது தோல் நிறத்தை பிரகாசமாக்குகிறது என்று தான் அழகுக்கலை நிபுணர்கள் கருதுகிறார்கள்.

உருளைக்கிழங்கில் அசெலிக் அமிலம் உள்ளது, இது இயற்கையான சருமத்தை பளபளப்பாக்கும் ஏஜெண்டாகச் செயல்படுகிறது. எனவே, உருளைக்கிழங்கு சாப்பிடுவதும், முகத்தில் பேக் ஆக தடவிக் கொள்வதும் வடுக்கள், தழும்புகள், கரும்புள்ளிகள் மற்றும் ஹைப்பர் பிக்மென்டேஷன் மறைவதை துரிதப்படுத்துகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com