நமக்கு பிடித்த தாவரங்களை பூச்சிகளிடமிருந்து இயற்கையாக எப்படி நாம் பாதுகாக்கலாம்?

Protection of plants
Plants
Published on

தாவரங்களை பூச்சிகளிடமிருந்து பாதுகாக்க சில இயற்கை முறைகளைப் பயன்படுத்துவது சுற்றுச்சூழலுக்கு உகந்தது மட்டுமல்ல, இது தோட்டச் சுற்றுச்சூழல் அமைப்பின் ஆரோக்கியத்தையும் முற்றிலும் பராமரிக்கிறது. செயற்கை பூச்சிக்கொல்லிகளைச் சாராமல் எப்படி மர செடிகளைப் பாதுகாக்கலாம் என்பதைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

1. இயற்கையாகவே பூச்சிகளுக்கு எதிராக செயல்படும் சில தாவரங்கள்: சில வகையான தாவரங்கள் இயற்கையாகவே பூச்சிகளை விரட்ட பயன்படுத்தப்படுகின்றன. மேரிகோல்ட்ஸ்(Marigolds): வலுவான வாசனை நூற்புழுக்கள்(nematodes) மற்றும் அஃபிட்களை(aphids) விரட்டும் என்று அறியப்படுகிறது. துளசி: அதன் கடுமையான வாசனையுடன், கொசுக்கள் மற்றும் ஈக்களை தடுக்கிறது. வேம்பு(Neem): ஒரு பாரம்பரிய தீர்வாக அனைவராலும் பயன்படுத்தப்படுகிறது. காரணம் அதன் சக்தி வாய்ந்த பூச்சிக்கொல்லி பண்புகள். இவை பூச்சிகளுக்கு எதிரான இயற்கையான தடையை ஏற்படுத்துகின்றன, அதனால் இவற்றை எளிதில் பூச்சிகளால் பாதிக்கப்படக்கூடிய தாவரங்களுக்கு அருகில் நடலாம். பூண்டு மற்றும் வெங்காயம்: அஃபிட்ஸ்((aphids) மற்றும் வண்டுகள் உட்பட பல்வேறு பூச்சிகளை விரட்டுவதற்கு சிறந்தவையாக திகழ்கின்றன.

2. ஆர்கானிக் மல்ச்சிங் (Organic mulching): வைக்கோல், மர சில்லுகள் அல்லது உரம் போன்ற பொருட்களை சேர்த்து பயன்படுத்துவது மண்ணை வளப்படுத்துவது மட்டுமல்லாமல் பூச்சிகளுக்கு எதிரான தடையாகவும் செயல்படுகிறது. இந்த முறை ஈரப்பதத்தைத் தக்கவைத்து, பூச்சிகள் செழிக்க தடையாக இருக்கின்றன. டைட்டோமேசியஸ் எர்த்(diatomaceous earth): இது புதைபடிவ அல்கெலிருந்து(Fossil algae) தயாரிக்கப்படும் ஒரு இயற்கைப் பொடி போன்றது. இதைப் பயன்படுத்தினால் பூச்சிகள் ஊர்ந்து செல்வதை தடுக்க இயலும். மேலும், அவற்றின் வெளிப்புற உடல் பகுதிகளைச் சேதப்படுத்தி அதன் இனப் பெருக்கத்தைத் தடுக்கவும் செய்யும்.

3. தோட்டத்தில் இயற்கையாக வேட்டையாடும் உயிரினங்களை ஊக்குவிப்பது பூச்சிகளின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைக்கும். லேடிபக்ஸ், லேஸ்விங்ஸ்(lacewings) மற்றும் ஒட்டுண்ணி குளவிகள் போன்ற நன்மை அளிக்கும் பூச்சிகள் அஃபிட்ஸ், கம்பளிப்பூச்சிகள் போன்ற தீங்கு விளைவிக்கும் பூச்சிகளை வேட்டையாடுகின்றன. வெந்தயம், பெருஞ்சீரகம் மற்றும் யரோ(yarrow) போன்ற செடிகளை நடவு செய்வது இந்த இயற்கை வேட்டைக்காரன்களை ஈர்க்கும். இதுவே ஒரு சமநிலையான சுற்றுச்சூழல் (balanced ecosystem) அமைப்பைப் பராமரிக்க உதவுகிறது.

இதையும் படியுங்கள்:
பல தானியப் பயிர் சாகுபடி அவசியம் தேவை: ஏன் தெரியுமா?
Protection of plants

சில தாவரங்கள் பூச்சி தாக்குதலுக்குச் சீக்கிரம் ஆளாகின்றன. ரோஜாக்கள் பெரும்பாலும் அஃபிட்ஸ் மற்றும் ஜப்பானிய வண்டுகளை ஈர்க்கின்றன. செம்பருத்தி செடி மற்றும் மல்லிப்பூ செடி சிலந்திப் பூச்சிகள் மற்றும் வெள்ளை ஈக்களால் பெரிதும் பாதிக்கப்படக்கூடியவை. இதை தடுக்க மேலே குறிப்பிட்ட சில இயற்கை முறைகளை தொடர்ந்து கண்காணித்து அதை செயல்படுத்துவது இந்த தாவரங்களை கடுமையான சேதத்திலிருந்து பாதுகாக்க உதவும்.

எனவே, இந்த இயற்கை உத்திகளைக் கடைப்பிடிப்பதன் மூலம், தோட்ட வேலைகளில் விருப்பமாக ஈடுபடுவோர் தங்கள் தாவரங்களையும் மரங்களையும் பூச்சிகளிடமிருந்து திறம்பட பாதுகாக்க முடியும். இந்த அணுகுமுறை தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களின் பயன்பாட்டைக் குறைப்பது மட்டுமல்லாமல், ஆரோக்கியமான, மிகவும் நிலையான இயற்கை பாதுகாப்பு சூழலை ஊக்குவிக்கிறது. இதனால் தாவரங்கள் நன்றாக செழித்து, அவற்றின் பல்லுயிர் பெருக்கத்திற்கான பங்களிப்பை உறுதி செய்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com