மதுவினால் மட்டுமில்லை, மது பாட்டில்களாலும் பிரச்சனை

மதுவினால் மட்டுமில்லை, மது பாட்டில்களாலும் பிரச்சனை

மிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் தினமும் சுமார் 10 லட்சம் பாட்டில்கள் பயன்படுத்தப்படுகின்றன.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் காலி மதுபாட்டில்கள் வீசப்படுவதால், வனவிலங்குகள் பாதிக்கப்படுவது தொடர்பான வழக்கு ஒன்று கடந்த மே மாதம் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. அதில், விற்பனையின்போது, “10 ரூபாய் அதிகப்படியாக வாங்கி, மதுபாட்டிலை திரும்பக் கொடுப்பவர்களுக்கு அந்தத் தொகையைத் திருப்பித் தரலாம்” என சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்திருந்தது.

கடந்த மே மாதம் நீலகிரியில் டாஸ்மாக் பாட்டில்களை திரும்பப் பெறும் முயற்சி ஒரு மாதம் செயல்படுத்தப்பட்டது. “முதல்கட்ட சோதனையின் முடிவில், நீலகிரி மாவட்டத்தில் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பாட்டில்கள் ஒரு மாதத்தில் திரும்பப் பெறப்பட்டுள்ளதால், இந்த நடவடிக்கையை மாநிலம் முழவதும் ஏன் செயல்படுத்தக்கூடாது” என நீதிபதிகள் கேட்டனர். காலி பாட்டில்களை சேகரிக்கும் திட்டத்தை டாஸ்மாக் செயல்படுத்தவேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர்

 ஆனால், பாட்டில்களை திரும்ப பெறுவதில் கடுமையான சவால்களை சந்தித்திப்பதாகவும் , நீலகிரி மாவட்ட  சோதனை நடைமுறைகளை வைத்து, தமிழகம் முழுவதும் பாட்டில்களை திரும்ப பெறுவது சாத்தியமில்லை என்று டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 என்ன காரணம்?

டாஸ்மாக் ஊழியர்களின் பிரதான வேலை என்பது, மது விற்பனை, டாஸ்மாக் டிப்போவில் இருந்து கடைகளுக்கு வரும் பாட்டில்களை இறக்குவது, சோதனைக்கு பிறகு, கடைகளில் சேமித்துவைத்து, வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்வதுதான்.

 தற்போது, பயன்படுத்திய பாட்டில்களை மீண்டும் வாடிக்கையாளர்களிடம் பெற்று, அதனை அடுக்கி, கணக்கு பார்த்து, சேமித்து வைப்பது கூடுதல் பணிசுமையாக இருப்பதாக டாஸ்மாக் கருதுகிறது.

மேலும், ஒரு சில வாடிக்கையாளர்கள் பாட்டில்களை எச்சிலோடு கொடுப்பதால், சுகாதார சீர்கேட்டுக்கு ஆளாவதாக அவர்கள் கூறுகிறார்கள். ஒருவேளை பாட்டில்கள் உடைந்தால், அதற்கான பணத்தை டாஸ்மாக் ஊழியர்கள்தான் தரவேண்டிய பொறுப்பு உள்ளதால், பணிச்சுமையுடன், பொருளாதார சிக்கல்களையும் சந்திக்க வேண்டியுள்ளதாக தெரிவிக்கிறார்கள்.

 மேலும், டாஸ்மாக் இடநெருக்கடி காரணமாக, திரும்பப் பெறும் பாட்டில்களை சேமித்து வைப்பதில் சிக்கல் இருப்பதாகவும், அதிக வாடிக்கையாளர்கள் வரும் சமயத்தில், பாட்டில்களை திரும்ப பெறுவதில் கவனம் செலுத்துவதில் சிரமம் இருப்பதாகவும் ஊழியர்கள் தெரிவிப்பதாக டாஸ்மாக் நிர்வாகம் கூறுகிறது.

 டாஸ்மாக் கடைகளில், பார் வசதியடன் நடத்தப்படும் கடைகளில் பாட்டில்களை சேகரித்து டெண்டர் விடப்படுவது டாஸ்மாக் ஒப்பந்தத்தில் ஒரு அம்சம் ஆகும். அதனை நிறுத்துவது என்பது சட்ட சிக்கலை ஏற்படுத்தும் என்றும் டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 மேலும் டாஸ்மாக் பார், உரிமம் பெற்ற ஓட்டல்களில் செயல்படும் டாஸ்மாக் கடைகள் உள்ளிட்டவற்றில் இருந்து பாட்டில்களை சேகரிப்பதை பலர் தொழிலாக கொண்டுள்ளனர். அவர்களில் சுமார் 600 பேர் ஒரு சங்கத்தை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் 10,000 நபர்கள் பணியாற்றுகின்றனர். இவர்கள் மறுசுழற்சிக்கு பாட்டில்களை சேகரித்து தருவதை தங்கள் வாழ்வாதாரமாக கொண்டுள்ளதாகவும் டாஸ்மாக் கூறுகிறது. அதனால் இவர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குரியதாகும் என்பது டாஸ்மாக்கின் வாதம்.

 சுற்றுசூழல் ஆர்வலர்கள்   வன விலங்குகள் பாதிக்கப்படுவதையும்  அதோடு, வயல்வெளிகள், நீர்நிலைகள், மழைநீர் வடிகால் மற்றும் குப்பைத் தொட்டிகளுக்குள் வீசப்படும் பாட்டில்கள் சுற்றுசூழலை மாசுபடுத்துவதுவுடன், உடைந்த பாட்டில்களை கைகளால் எடுக்கும் நபர்கள் காயங்களுக்கு ஆளாவதையும் சுட்டிக்காட்டினர்.  அதனால், பாட்டில்களை திரும்பப்பெறுவதுதான் சரியான முடிவாக இருக்கும் என்கின்றனர். 

மேலும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலரும், கண்ணாடி பாட்டில்களை மீண்டும் பயன்படுத்துவதால், புதிய பாட்டில்களை உருவாக்கும் தேவை குறையும் என்றும் சுற்றுச்சூழலுக்கு அது உதவும் என்றும் கூறுகின்றனர். புதிய கண்ணாடி பாட்டில்களை உருவாக்குவது தடைபடுவதால், அந்த பாட்டில்களின் தயாரிப்புக்காக செலவாகும் தண்ணீர், கனிமங்கள், உருவாக்கும்போது செலவிடப்படும் மின்சாரம் என பல வளங்கள் மிச்சமாகி, பலவகையில் சுற்றுச்சூழலுக்கு நன்மை ஏற்படும் என்கிறார்கள்.

 மேலும், கண்ணாடி பாட்டில்களை மீண்டும் பயன்படுத்துவதால், புதிய பாட்டில்களை உருவாக்கும் தேவை குறையும் என்றும், சுற்றுச்சூழலுக்கு அது உதவும் என்றும் கூறுகின்றனர். ''புதிய கண்ணாடி பாட்டில்களை உருவாக்குவது தடைபடுவதால், அந்த பாட்டில்களின் தயாரிப்புக்காக செலவாகும் தண்ணீர், கனிமங்கள், உருவாக்கும்போது செலவிடப்படும் மின்சாரம் என பலவகையில் சுற்றுச்சூழலுக்கு நன்மை ஏற்படும்.

கண்ணாடி பாட்டில்களை ஒருமுறை பயன்படுத்தி விட்டு தூக்கி எரிவதால், குப்பைக்கிடங்குகளில் மேலும் குப்பை சேரும். “சுமார் 10 லட்சம் பாட்டில்களை அரசு மறுபயன்பாடு செய்தால், அந்த 10 லட்சம் பாட்டில்களை புதிதாக உருவாக்கும் தேவை குறையும் இல்லையா“ என்கிறார்  கோவையை சேர்ந்த சுற்றுசூழல் ஆர்வலர் அருள்செல்வம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com