சுவையான சத்தான மசாலா கறி இடியாப்பம் & ரொட்டி லட்டு!

healthy recipes
healthy recipesImage credit - youtube.com
Published on

மசாலா கறி இடியாப்பம்

தேவையானது:

இடியாப்ப மாவு - 2 கப்

வேகவைத்த பச்சைப் பட்டாணி - 3 டேபிள் ஸ்பூன்

நறுக்கிய வெங்காயம், துருவிய கேரட், நறுக்கிய பீன்ஸ் சேர்த்து - 1 கப்

பச்சை மிளகாய் - 2

மிளகுத்தூள் - 1 டீ ஸ்பூன்

உப்பு, எண்ணெய் - தேவைக்கு

நெய் - 1 டீ ஸ்பூன்

பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

அடி கனமான பாத்திரத்தில் இடியாப்ப மாவைப் போட்டு சிறிது உப்பு சேர்த்து, மூன்று கப் கொதித்த நீரை ஊற்றி கிளறி விடவும்.

கிளறிய மாவை இடியாப்பமாக இட்லி தட்டில் வைத்து ஆவியில் வேக வைத்து எடுக்கவும். ஆறிய பின் உதிர்த்து விடவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அரிந்த மிளகாய், வெங்காயம், |காய்கறிகள், பட்டாணி போட்டு வதக்கி உதிர்ந்த இடியாப்பத்தைச் சேர்த்து கிளறி, உப்பு, மிளகுத்தூள் தூவி நெய் சேர்த்து இறக்கி மல்லித் தழை தூவி இறக்கவும்.

மணக்க மணக்க சுவையான மசாலா  கறி இடியாப்பம்  ரெடி. சாப்பிட சாப்பிட இன்னும் வேண்டும் என்று கேட்டு விரும்பிச் சாப்பிடுவார்கள். செய்து பாருங்கள்.

சப்பாத்தி லட்டு

தேவையானது;

சப்பாத்தி - 6

துருவிய வெல்லம் - கால் கப்

பாதாம் பருப்பு, முந்திரிப்பருப்பு, பிஸ்தா - தலா 10

தேங்காய் துருவல் - 2 ஸ்பூன்

நெய் - 3 டேபிள் ஸ்பூன்.

செய்முறை;

சப்பாத்தியைத் துண்டுகளாக்கி மிக்ஸியில் நீர் விடாமல் பொடியாக்கவும். பாதாம், முந்திரி, பிஸ்தாவையும் பொடியாக்கவும்.

பின் பொடித்த சப்பாத்தி, பருப்புகள், துருவிய வெல்லம் நெய் நான்கையும்  சேர்த்து  மிக்ஸியில் ஒரு முறை சுற்றி  எடுத்து லட்டுகளாக பிடிக்கவும். பிடித்த உருண்டைகளை தேங்காய்த் துருவலில் புரட்டி எடுத்து வைக்கவும்.

சுவையான சத்தான சப்பாத்தி லட்டுகள் ரெடி. குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவர். செய்து பார்த்து சொல்லுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com