பாதாம் ரங்கீலா ரோல்
தேவை;
பாதாம்பருப்பு - கால் கிலோ.
சர்க்கரை - கால் கிலோ
பச்சை ஃபுட் கலர் - 1/2 டீஸ்பூன்.
நெய் - 1/4 கப்
ஏலப்பொடி - சிட்டிகை.
செய்முறை;
பாதாம் பருப்பை அரைமணி நேரம் ஊற வைத்து தோல் நீக்கி சற்று கொர கொரப்பாக அரைக்கவும்.
அடிகனமான வாணலியை அடுப்பில் வைத்து அரைத்த பாதாம் விழுது, சர்க்கரை சேர்த்து இடை இடையே நெய்விட்டு கை விடாமல் கிளறி பதம் வந்ததும் ஏலப்பொடி சேர்த்து இறக்கவும். தட்டில் கொட்டி ஆறவிடவும்.
இதை உருண்டைகளாக உருட்டி ஒன்றை ஆரஞ்சு கலர் சேர்த்தும், இன்னொன்றை பச்சை கலர் சேர்த்தும் நன்றாக பிசையவும்.
இரண்டையும் தனித் தனியாக குச்சி மாதிரி செய்து தேவையான அளவுகளில் கட் பண்ண வேண்டும் இதுவே பாதாம் ரங்கிலா ரோல். சத்தான ஸ்வீட் இது சாப்பிட ருசியாக இருக்கும்.
கார்ன் ப்ளேக்ஸ் மிக்ஸர்
தேவை:
வறுக்காத கார்ன் ப்ளேக்ஸ் - 3கப் .
வேர்க்கடலை - 1/4 கப்
முந்திரி - தேவைக்கு
பாதாம் - 10
பொட்டுக்கடலை - 5 டேபிள் ஸ்பூன்.
காய்ந்த திராட்சை - 2 டீ ஸ்பூன் .
கறிவேப்பிலை - சிறிது
பெருங்காயத்தூள் - 1 டேபிள் ஸ்பூன்.
மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன்.
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - பொரிக்க
செய்முறை;
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கார்ன் ப்ளேக்ஸை பொரித்து எடுத்து வடிகட்டவும். எண்ணெய் சூடாக இருக்கும்போதே பாதாம், முந்திரி, வேர்க்கடலை, பொட்டுக்கடலை, திராட்சை, கறிவேப்பிலை என ஒவ்வொன்றாக வறுத்து, வறுத்த கார்ன் பிளேக்ஸில் சேர்க்கவும்.
சூடாக இருக்கும்போதே உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கிளறிவிடவும். ஆறியதும் காற்று புகாத டப்பாவில் போட்டு வைக்கவும். எளிதில் இந்த மிக்ஸரை செய்யலாம்.