

சூப்பரான ஈவினிங் ஸ்நாக்ஸ் 5 நிமிடத்தில் ரெடியாகிவிடும். பள்ளி விட்டு வரும் குழந்தைகள் ஆகா சூப்பர் மம்மி என ரசித்து சாப்பிடும்.
கர கர முறுமுறு ஸ்னாக்ஸ்:
வடித்த சாதம் 2 கப்
பெரிய வெங்காயம் 1
இஞ்சி துருவல் ஒரு ஸ்பூன்
பச்சை மிளகாய் 1
காரப்பொடி 1/2 ஸ்பூன்
உப்பு தேவையானது
கருவேப்பிலை சிறிது
கொத்தமல்லி சிறிது
சாதம், உப்பு, பச்சை மிளகாய் மூன்றையும் மிக்ஸியில் போட்டு சிறிதே சிறிதளவு தண்ணீர் விட்டு கொர கொரப்பாக அரைக்கவும். அதனை ஒரு பாத்திரத்தில் மாற்றி பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், இஞ்சி துருவல், காரப்பொடி, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து சிறிய உருண்டைகளாக்கி அல்லது கையால் சின்ன சின்னதாக கிள்ளி போட்டு எண்ணெயில் பொரித்தெடுக்க சூப்பரான ஈவினிங் ஸ்நாக்ஸ் டீ, காபியுடன் தயார். குழந்தைகளுக்கு சிறிது தக்காளி சாஸுடன் சேர்த்து பரிமாற நிமிடத்தில் தட்டு காலி ஆகிவிடும்.
மாலையில் டீ காபியுடன் க்ரன்சியாக சாப்பிட எதுவும் இல்லையா கவலை வேண்டாம். கைவசம் இட்லி மாவு உள்ளதா? ஐந்தே நிமிடத்தில் சூப்பரான ஸ்நாக்ஸ் செய்துவிடலாம்.
Crunchy Snacks:
இட்லி மாவு ஒரு கப்
பொட்டுக்கடலை மாவு 1/4 கப்
அரிசி மாவு 2 ஸ்பூன்
உப்பு சிறிது
மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
பெருங்காயத்தூள் 1/2 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன்
ஓமம் அல்லது சீரகம் 1/2 ஸ்பூன்
எண்ணெய் பொரிக்க
இட்லி மாவுடன் பொட்டு கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, கார பொடி, பெருங்காயம், இஞ்சி பூண்டு விழுது, ஓமம் அல்லது சீரகம் அரை ஸ்பூன் எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் வைத்து எண்ணெய் காய்ந்ததும் ஒரு கரண்டி அளவு சூடான எண்ணெயை மாவில் விட்டு கலந்து நாடா அச்சில் மாவை போட்டு நீள நீளமாக பிழிந்து நன்கு பொன் கலரில் பொரிந்ததும் எடுக்க கரகரப்பான ஈவினிங் ஸ்நாக்ஸ் ரெடி.