
தேவையானவை:
கொண்டைக்கடலை -1கப், சேனைக்கிழங்கு -1/2கப், வாழைக்காய் -1/2 கப், மிளகாய் தூள் -3/4டீஸ்பூன்,ம தூள் -1/4டீஸ்பூன், வெல்லம் பொடித்து,-2டீஸ்பூன்,தே எண்ணெய் -3டீஸ்பூன், கறிவேப்பிலை _2கொத்து,துருவிய தேங்காய் -1/2கப், மிளகுத்தூள் -3/4டீஸ்பூன், சீரகம்-1/2டீஸ்பூன் , உப்பு.
செய்முறை:
கொண்டைக்கடலையை முதல் நாள் இரவு ஊற விட்டு வேகவைத்து எடுக்கவும். சேனைக்கிழங்கை தனியாக வேக விட்டு எடுக்கவும். பிறகு இரண்டையும் சேர்த்து அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள் கலந்து கொள்ளவும். தேங்காயை பாதியளவு சீரகத்துடன் சேர்த்து விழுதாக அரைக்கவும். இதனை மசித்த காய்கறியில் சேர்த்து உப்பு போட்டு நன்கு கொதிக்க விட்டு இறக்கவும். கடாயில் தேங்காய் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாயை போட்டு இறக்கும் போது மிளகுத்தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். கடைசியாக வெல்லத்தை சேர்த்து தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து பரிமாறவும்.சுவையான கேரள கூட்டுக் கறி சாப்பிட சுவையாக இருக்கும்.