நவரத்தினங்கள் தெரியும். அதென்ன நவரத்ன குருமா?

Kuruma recipes...
Kuruma recipes...Image credit - indiankitchencarryout.com
Published on

வைரம், மரகதம், நீலம், கோமேதகம், பவளம், மாணிக்கம், முத்து, புட்பராகம், வைடூரியம் போன்ற  நவரத்தினங்கள் பற்றி கேள்விப்பட்டிருப்போம். அது என்ன நவரத்தின குருமா? பணக்கார பாட்டிமார்கள் இந்த நவரத்தின குருமாவை விருந்தினர் வரும்போது வைத்து தருவது அன்றைய பழக்கம். காரணம் இதிலுள்ள ரிச்சான சத்துக்கள் காய்களுடன் சேரும் பழவகைகள், கசகசா, முந்திரி பருப்பு என இது ஒரு பணக்கார குருமாவாக உள்ளது. இருந்தாலும் நமது தேவைக்கு ஏற்றவாறு இதில் உள்ள பொருட்களை பயன்படுத்தி இந்த நவரத்தின குருமாவை வைத்து ருசிக்கலாம். வாங்க செய்முறை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

தேங்காய் - முக்கால் மூடி
சின்ன வெங்காயம் - பத்து (அல்லது )பெரிய வெங்காயம் - ஒன்று பச்சை மிளகாய்-  ஐந்து
தனியா- இரண்டு டீஸ்பூன்
பெருஞ்சீரகம் - கால் டீஸ்பூன்
கசகசா - அரைடேபிள்ஸ்பூன் முந்திரிப்பருப்பு - எட்டு
காலிஃப்ளவர்  - 100 கிராம்
பட்டாணி-  200 கிராம்
கேரட் -100 கிராம்
உருளைக்கிழங்கு - 200 கிராம்
பீன்ஸ்- 50 கிராம்
அன்னாசிப்பழம் - பொடியாக வெட்டியது அரைகப்
திராட்சைப்பழம் - 100 கிராம்
எலுமிச்சம்பழம் சாறு -கால் கப்
உலர் திராட்சை -ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் - தாளிக்க
உப்பு - தேவைக்கு
கருவேப்பிலை கொத்தமல்லித்தழை – சிறிது

செய்முறை:

துருவிய தேங்காயை பாதியாக பிரித்து ஒரு பகுதியை முந்திரிப்பருப்பை சேர்த்து நைசாக மிக்சியில் அரைத்து வைக்கவும். மற்ற பகுதியை நீர் விட்டு அரைத்து வடிகட்டி தேங்காய்ப்பால் எடுத்து வைக்கவும். பெருஞ்சீரகம், தனியா, கசகசா, பச்சை மிளகாய் ஆகியவற்றை தனியாக அரைத்து வைக்கவும். காய்கறிகளை ஒரே அளவாக பொடியாக வெட்டவும். பட்டாணியை வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் உடைத்த முந்திரி பருப்பு, உலர் திராட்சை, வெங்காயம், கருவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.  (விரும்பினால் பட்டை கிராம்பு, ஏலக்காய் எண்ணெயில் சேர்க்கலாம்)  நன்கு வதங்கியதும்  காய்கறிகளையும் போட்டு நன்கு வதக்கி அதனுடன் அரைத்த தனியா கசகசா விழுதை சேர்த்து வதக்கவும். பின் அதில் அரைத்த தேங்காய் முந்திரி பருப்பு விழுதை சேர்த்து தேங்காய் பாலை ஊற்றி நன்கு கலந்து தேவையான உப்புடன் குக்கரில் ஒரு சவுண்ட் விட்டு வேகவைக்கவும். வெந்ததும் திறந்து குழம்பு கெட்டியாகும் வரை கொதிக்கவிட்டு பொடியாக நறுக்கிய மல்லி தலையை தூவி எலுமிச்சம்பழம் சாறு  பிழிந்து இறக்கி சிறிது ஆறினதும் பொடியாக வெட்டிய அன்னாசி பழம், திராட்சைப் பழங்களை சேர்க்கலாம்.

இதையும் படியுங்கள்:
நீரிழிவு நோயை அதிகரிக்கும் 5 உலர் பழங்கள்!
Kuruma recipes...

இந்த நவரத்தின குருமா பூரி, சப்பாத்தி , பரோட்டா வகைகளுக்கு தொட்டுக்கொள்ள அற்புதமாக இருக்கும். பழங்கள் மற்றும் முந்திரி பருப்பு தேங்காய்ப்பால் கலவையில் இதன் ருசியும் மணமும் வித்தியாசமாக இருக்கும். அதிக சத்துக்கள் கொண்ட இந்த குருமாவை வாரத்தில் ஒருமுறை குழந்தைகளுக்கு குழந்தைகள் முதல் பெரியவர் வரை வைத்து சாப்பிட்டால் ஆரோக்கியம் பெருகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com