ரசித்து ருசிக்க ரவா டிலைட்!

ரசித்து ருசிக்க ரவா டிலைட்!

தினம் தினம் ஒரே மாதிரி இட்லி தோசை உப்புமா என இருந்தால் சாப்பிடுவதே போரடித்துவிடும். அதிலும் ரவை என்றாலே உப்புமாதான் நிறைய பேருக்கு தெரியும். கொஞ்சம் மாத்தி யோசிச்சு ரவையில இந்த ரெசிபியை செஞ்சு பாருங்க. வித்தியாசமான ரவா டிலைட் அனைவரையும் விரும்ப வைக்கும் வித்தியாசமான ரெசிபி.

தேவையான பொருட்கள்:

ரவை - ஒன்றறை கப்
புளிச்ச தயிர் -கால் கப்
பெரிய வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - ஒன்று
சாட் மசாலா - ஒரு டீஸ்பூன்
மிளகாய் தூள் - ஒரு டீஸ்பூன்
மல்லித்தூள் - ஒரு டீஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை கொத்தமல்லித்தழை - ஒரு கட்டு எலுமிச்சம் பழச்சாறு - ஒரு டீஸ்பூன் புதினா இலைகள்  - சிறிது
மிளகுத்தூள் -அரை டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது -அரை டீஸ்பூன் எண்ணெய் உப்பு - தேவைக்கேற்ப
கருப்பு உப்பு - ருசிக்கு

 
செய்முறை:

வையை வெறும் வாணலியில் வறுக்கவும். தயிரை அடித்து ரவையுடன் சேர்க்கவும் .மல்லித்தூள், மஞ்சள்தூள், மிளகுத்தூள், சாட் மசாலா, உப்பு , கருப்பு உப்பு, நறுக்கிய வெங்காயம் , பச்சை மிளகாய் , இஞ்சி பூண்டு விழுது ,கொத்தமல்லித்தழை, பொதினா, எலுமிச்சம் பழச்சாறு எல்லாவற்றையும் கலந்து கொள்ளவும். அடுப்பில் உள்ள வாணலியில்  சிறிது எண்ணெய் விட்டு அதில் கலந்து வைத்துள்ள கலவையைக் கொட்டி சிறிது நீர் சேர்த்து நன்கு கிளறவும். கலவை பந்து போல உருண்டு வரும் வரை வதக்கவும் . பிறகு எண்ணெய் தடவிய தட்டில் கெட்டியான கலவையைப் பரப்பி ஆறவிடவும். ஆறியதும் சிறு துண்டுகளாக வெட்டி மீண்டும் சூடான எண்ணெயில் போட்டு சிவக்க வறுத்தெடுக்கவும்.


தொட்டுக் கொள்ள தயிர் பச்சடியுடன் பரிமாறினால் வித்தியாசமான சுவையுடன் இருக்கும் இந்த ரவா டிலைட். இனி ரவைனா டிலைட்தான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com