மூன்று வகை மூலிகை ரசங்கள்!

தூதுவளை ரசம்
தூதுவளை ரசம்

-வசந்தா மாரிமுத்து

தூதுவளை ரசம்

தேவை:

தூதுவளைக்கீரை- 1 கைப்பிடி

ஒம வள்ளி இலை - 2

உரித்த பூண்டு - 10

சின்ன வெங்காயம் - 5

மிளகு - 1/2 டீஸ்பூன்

சீரகம்- 1 டீஸ்பூன்

சிவப்பு மிளகாய் - 2

தக்காளி - 2

புளி - சிறிது (கரைத்தது)

உப்பு - தேவைக்கு

தாளிக்க

எண்ணெய், கடுகு, பெருங்காயத்தூள்

செய்முறை

தக்காளியை பிசைந்து , புளிக் கரைசலுடன் சேர்த்து தேவையான தண்ணீர் ஊற்றவும்.

மிளகு, சீரகம் , மிளகாய் முன்றையும் உரலில் இடித்து கரகரப்பாக பொடித்து, பின் பூண்டு, வெங்காயம், தூதுவளையை சேர்த்து இடிக்கவும். ஒரு வாணலியில் புளிக்கரை சல், தக்காளி, உப்பு சேர்த்து நன்கு  கொதிக்கும் போது இடித்த பொருட்களை போடவும். மறு கொதி வந்ததும் கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து கொட்டவும்.

மழை, பனிக்காலத்தில் சுடச்சுட சாதத்தில் போட்டு சாப்பிட சளி, இருமல், ஜூரம் இவற்றிற்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.

புதினா ரசம்

புதினா ரசம்
புதினா ரசம்

தேவை:

புளி - எலுமிச்சை அளவு

(கரைத்தது)

உப்பு, வெல்லம், பெருங் காயத்தூள் - தேவைக்கு

கரகரப்பாக இடிக்க

புதினா இலை - 1 கைப்பிடி

பூண்டு - 3 பல்

சீரகம் - 1 டீஸ்பூன்

மிளகு - 1/2 டீஸ்பூன்

சிவப்பு மிளகாய் - 2

தாளிக்க

கடுகு, நெய்

செய்முறை:

கரைத்த புளியுடன் உப்பு, வெல்லம், பெருங்காயத்தூள், தகுந்த தண்ணீர் விட்டு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து கொதிக்க விட்டு இடித்த பொருட்களை சேர்த்து ஒரு கொதி வந்ததும் நெய்யில் கடுகு தாளித்து போட்டு, மேலே சிறிது புதினா இலைகளை போட்டு இறக்கவும்.

சூடாக சாதத்துடன் சாப்பிட தொண்டைவலி, கரகரப்பு நீங்கும். சூடாக குடிக்கலாம்.

துளசி ரசம்

துளசி ரசம்
துளசி ரசம்

தேவை:

எலுமிச்சம் பழம் - பாதி

மிளகு, சீரகம் - 1 டீஸ்பூன்

பொடித்தது

காய்ந்த மிளகாய் - 3

துளசி - கைப்பிடி

கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது

தக்காளி - 1

பூண்டு - 5 பல்

பெருங்காயம்-சிட்டிகை மஞ்சள்தூள் - சிறிது 

எண்ணெய் - தேவைக்கு

இதையும் படியுங்கள்:
டெஃப் என்றால் என்ன தெரியுமா?
தூதுவளை ரசம்

செய்முறை:

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை  பூண்டு நசுக்கியது. காய்ந்த மிளகாயை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மஞ்சள்தூள், உப்பு போட்டு தக்காளியை கரைத்து ஊற்றி கொதிக்க விடவும்.

கொதி வரும் போது துளசி, மிளகு, சீரகத்தூள் சேர்த்து கொதி வந்ததும், பெருங்காயத் தூள் போட்டு இறக்கி  எலுமிச்சைசாறு சேர்த்து நன்கு கலந்து மூடவும். இந்த துளசி ரசம் பசியின்மை, தலைபாரம், காய்ச்சலுக்கு சூடாக குடிக்கவும், சாப்பிட நல்ல நிவாரணம் கிடைக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com