

அதே அபாரமான சுவையில் திருப்பதி லட்டு வீட்டில் செய்ய முடியுமா? என்று கேட்டால்? முதல் தரமான கடலைமாவும், முதல் தரமான நெய்யும் உங்கள் கைவசமிருந்தால் நிச்சயமாக உங்களாலும் முடியும்! - என்பதுதான் பதில்!
திருப்பதி லட்டின் மிக முக்கியமான ரகசியமே நெய்யில்தான் உள்ளது. நெய்யானது மிகவும் தரமானதாக பாரம்பரிய முறைப்படி செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். பாரம்பரிய முறைப்படி தயாரிக்கப்பட்ட நெய்தான், திருப்பதி லட்டின் இயற்கையான மணத்திற்கும் சுவைக்கும் அடிப்படை ஆகும்! (ஆனால் தற்போது சந்தையில் கிடைப்பதெல்லாம் அசல் நெய் அல்ல!).
அடுத்து… கடலைமாவினையும் முதல் தரமான பருப்பை அரைத்து பக்குவமாக உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். இவ்வாறு கடலை மாவை கரைத்து செய்கின்ற பூந்தியை நெய்யில் மட்டுமே பொரிக்க வேண்டும்.
இனி லட்டின் செய்முறையைப் பார்ப்போம். இந்த செய்முறை அளவில் கையளவு உருண்டை அளவில் 25 - 30 லட்டுகள் செய்யமுடியும்!
பிறகு ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மூழ்கும் அளவு நீர் விட்டு ஒரு கம்பி பதத்துக்கு பாகு காய்ச்சவும். சர்க்கரை, பாகு கொதிக்கும்போதே 4 தேக்கரண்டி நெய்யை இடை இடையே அதில் சேர்த்து... இடித்த கிராம்பு, ஏலக்காய், பச்சைக் கற்பூரம் சேர்த்து கிளறி பின்னர் பொரித்த பூந்தி, கல்கண்டு இவற்றைச் சேர்த்து நன்கு கிளறி இறக்கிவிடவும்.
கைகளில் சிறிது நெய்யை தடவிக்கொண்டு கைபொறுக்கும் சூட்டிலேயே லட்டுகளாகப் பிடிக்கவும். இவ்வாறு செய்தால் லட்டுகள் பல நாட்கள் கெடாது.
தனித்தன்மை சுவை கொண்ட திருப்பதி லட்டு பிரசாதம் இந்த முறையில்தான் தயாராகிறது. செய்து, உண்டு மகிழுங்கள்.
தேவையான பொருட்கள்:
கடலை மாவு - 250 கிராம்.சர்க்கரை - 500 கிராம்.உலர் திராட்சை & முந்திரி- தலா 50 கிராம். கற்கண்டு - 2 தேக்கரண்டி.பச்சைக்கற்பூரம் - கால் டீஸ்பூன்.ஏலக்காய் - 12.கிராம்பு - 5.நெய் - பொரிக்கவும் இதர தேவைகளுக்கும்.
செய்முறை:
கடலைமாவை நீர் விட்டு கெட்டியாகக் கரைக்கவும். அடிகனமான வாணலியில் நெய்யை ஊற்றி, அது சூடானதும் அடுப்பை மிதமாக எரியவிட்டு தேவையான மாவை பூந்திக்கரண்டியின் மேல் ஊற்றி அதை குழிக்கரண்டியால் தேய்த்து - பூந்திகள் நெய்யில் வெந்ததும் மெதுவாக திருப்பவும்.இரு பக்கமும் வெந்ததும் அதை தனியே நெய்யை வடித்து எடுத்துவிட்டு அதே நெய்யில் முந்திரி & திராட்சையை பொரித்து எடுத்து வைக்கவும்.
-இரவிசிவன்