மாம்பழம் கேண்டி பார் வீட்டிலேயே செய்யலாம் வாங்க!

மாம்பழம்...
மாம்பழம்...
Published on

ம்மில் நிறைய பேருக்கு பிடித்த பழம் மாம்பழமாக இருக்கும். தற்போது மாமபழ சீசன் என்பதால் சுலபமாக கிடைக்க கூடியதாகும். அது மட்டுமில்லாமல் அதிக சத்துக்களை கொண்டது. மாம்பழத்தில் விட்டமின், சி, விட்டமின் ஏ, போலேட், பைபர் ஆகியன உள்ளது. இது பெருங்குடல் புற்றுநோய் வராமல் தடுக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது, உடல் எடையை குறைக்க உதவும், சரும பளபளப்பு கிடைக்கும். இத்தகைய நன்மைகளை கொண்ட மாம்பழத்தில் கேன்டி எப்படி செய்வது என்று பார்க்கலாம். 90ஸ் கிட்ஸின் மலரும் நினைவுகளில் இந்த மாம்பழக் கேன்டியும் இன்றியமையாத ஒன்றாகும்.

மாம்பழம் கேண்டி செய்வதற்கு தேவையான பொருட்கள்:

பழுத்த மாம்பழம்-1 கிலோ.

ஜீனி-100 கிராம்.

ஏலக்காய் தூள்-1 சிட்டிகை.

நெய்- சிறிதளவு.

மாம்பழம் கேண்டி செய்முறை விளக்கம்:

முதலில் மாம்பழத்தின் தோலை எடுத்து விட்டு சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி வைக்கவும். இப்போது வெட்டிய மாம்பழ துண்டுகளை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து எடுத்து கொள்ளவும்.

அடுப்பில் பேஃனை வைத்து அதில் அரைத்து வைத்த மாம்பழத்தை ஊற்றவும். பிறகு 100 கிராம் ஜீனியை அதில் சேர்த்து நன்றாக கிண்டவும்.

ஜீனி சேர்த்திருப்பதால் முதலில் கொஞ்சம் தண்ணீராகவேயிருக்கும் பின்பு கிண்ட கிண்ட கெட்டியாகத் தொடங்கும்.

விடாமல் தொடர்ந்து கிண்டிக் கொண்டேயிருக்கவும். 15 நிமிடம் நன்றாக கிண்டிய பிறகு கெட்டியாகியிருக்கும். அல்வா பதத்திற்கும் சற்று குறைவாக இருக்கும் அந்த சமயத்தில் ஒரு சிட்டிகை ஏலக்காய் தூள் சேர்க்கவும். சற்று நன்றாக கலந்து விட்டு அடுப்பிலிருந்து இறக்கி விடவும். இப்போது செய்து வைத்திருந்த மாம்பழம் கேண்டி சற்று ஆறியதும் ஒரு பெரிய தட்டில் நெய் கொஞ்சம் தடவி அதில் இந்த கலவையை ஊற்றி பரப்பி விடவும். ரொம்ப மெலிதாக பரப்ப வேண்டாம். சற்று தடிமனாகவேயிருக்கட்டும்.

ஒரு துணி போட்டு மூடி இரண்டு நாட்கள் மாடியில் நன்றாக காய வைக்கவும். இப்போது இரண்டு நாட்கள் கழித்து எடுத்து துண்டு துண்டாக வெட்டி ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக்கொண்டு பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த மாம்பழம் கேண்டி பார் மிகவும் சுவையாக இருக்கும். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் கேண்டியாகும். இனிப்பும், புளிப்பும் கலந்து நாவில் எச்சில் ஊற வைக்கும் சுவையாக இருக்கும். கண்டிப்பாக வீட்டில் செய்து பார்க்கவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com