முள்ளங்கி இலைகளிலிருக்கு முழுமையான ஆரோக்கியம்!

முள்ளங்கி இலைகளிலிருக்கு முழுமையான ஆரோக்கியம்!

மண்ணுக்கு அடியிலிருக்கும் வேர்பகுதி முள்ளங்கியில் இருக்கும் சத்துக்களை விட மண்ணிற்கு மேலிருக்கும் அதன் பச்சை நிற இலைகளில் அடங்கியிருக்கும் சத்துக்கள் ஏராளம்.

இதிலுள்ள வைட்டமின் C, K, A, B6 மற்றும் அயன், பாஸ்பரஸ், மக்னீசியம், கால்சியம் போன்ற முக்கியமான கனிமச் சத்துக்கள், நார்ச்சத்து ஆகியவை உடலுக்கு பல நன்மைகள் தருகின்றன.

வைட்டமின் A பருக்களை நீக்கவல்லது. கால்சியம் எலும்புகளை வலுப்படுத்தும். நார்ச்சத்து செரிமானத்தை சீர்படுத்தி மலச்சிக்கலை தவிர்க்கிறது. அயன், பாஸ்பரஸ் போன்றவை நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். உடல் சோர்வை தடுக்கும். இரத்தத்தில் ஹீமோக்ளோபின் அளவை உயர்த்தும். இரத்தத்தில் கலந்திருக்கும் கழிவு மற்றும் நச்சுக்களை உடனுக்குடன் களைந்து அதன் மூலம் இதயம், கிட்னி, லிவர் போன்ற முக்கிய உள்ளுறுப்புகளின் செயல்பாட்டை மேம்படுத்தும். ரத்த சர்க்கரை அளவும் கட்டுக்குள் இருக்கும். தோலில் சுருக்கம் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது. கண் நோய்களும் குணமடையும்.

இத்தனை நன்மைகளை உள்ளடக்கிய முள்ளங்கிக் கீரையை நம் வட நாட்டவர்கள், ரைத்தா, சட்னி, சப்ஜி, ரொட்டி என பலவகை உணவுகளுடன் சேர்த்து உண்டு வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com