கற்றாழை என்னும் அதிசய மருந்து!

கற்றாழை என்னும் அதிசய மருந்து!

கற்றாழையை அதன் மேல் தோலை நீக்கிவிட்டு உள்ளே இருக்கும் சதை பகுதியை ஏழுதரம் நல்ல தண்ணீரில் அலசி இதில் ஒரு கைப்பிடி அளவு எடுத்து இதனோடு ஒரு ஸ்பூன் கடுக்காய் பொடியை சேர்த்து இதில் சிறிதளவு பனங்கற்கண்டும் சேர்த்து கொண்டு இதை நன்றாக கலக்கி காலை வேளையில்அருந்தி வர தீராத மலச்சிக்கலை தீர்த்து இதன் மூலம் பல நோய்களை உடலிலிருந்து நீக்கி விடும். மேலும் இதனால் நீரடைப்பு நீர் கோவை நோய்கள் நீங்கும் உடலுக்கு அழகும் ஆரோக்கியமும் வெகு எளிதாக கிடைத்துவிடும்

தலைமுடி நீண்டு வளர கற்றாழை எண்ணெய்:

கற்றாழையின் சோற்றை நன்றாக தண்ணீரில் அலசி நூறு கிராம் எடுத்துக்கொண்டு அரை லிட்டர் தேங்காய் எண்ணெயில் இதை கலந்து தைல பதத்தில் காய்ச்சி வடித்து கொண்டு இதை தினசரி தலைக்கு தேய்த்து வர தலைமுடி நன்கு வளரும் கண்கள் குளிர்ச்சி பெறும் உடல் சூடு குறைந்துவிடும்

சோற்று கற்றாழையின் சதைப்பகுதியில் ஐம்பது கிராம் எடுத்துக்கொண்டு இதில் ஐந்து கிராம் வெந்தயத்தை கலந்து இதை நன்றாக மைபோல அரைத்து தலைக்குதடவி சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் தலை முடி மிருதுவாகி நன்கு செழித்து கருமையாக நீண்டு வளரும்

தோல் நோய்கள் நீங்க :

கற்றாழையின் சதை கொஞ்சம் இதனோடு நன்னாரி வேர் இவை இரண்டையும் சமஅளவாக கலந்து இதை நன்றாக அரைத்து சுண்டைக்காய் அளவு இரண்டு உருண்டைகளாக உருட்டி இதை காலை மாலை இருவேளையும் தொடர்ந்து பதினைந்து நாட்கள் உப்பு புளி காரத்தை குறைத்து சாப்பிட்டு வர எப்பேர்ப்பட்ட பூச்சிக்கடி விஷமும் சர்வசாதாரணமாக விலகும் பூச்சிக்கடி விஷத்தால் தோலில்ஏற்பட்ட கருப்பு மறைந்து தோலின் நிறம் பழைய நிறத்துக்கு வந்துவிடும்.

தீப்புண்ணுக்கு கற்றாழையில் மருந்து :

நெருப்பு சுட்டு கை கால்களில் புண்கள் ஏற்பட்டு விட்டால் கற்றாழையின் சதைப்பகுதியை அரைத்து புண்களின் மீது பூசி வர தீயினால் சுட்ட புண்கள் விரைவாகஆறிவரும்

ஒரு பெரிய மடல் கட்டளையை ஒடித்து அதில் வழியும் மஞ்சள் திரவத்தை தீப்புண்ணின் மீது பூசி வந்தாலும் புண்கள் வெகு விரைவாக ஆறிவிடும்

கண்களை பாதுகாக்க :

இரண்டு கண்களையும் மூடி கொண்டு கண் மற்றும் இமைகளின் மீதுகற்றாழையின் சதையை வைத்து கட்டி அரை மணி நேரம் கழித்து அவிழ்த்து விட்டுமிதமான சுடுநீரில் கண்களைக் கழுவி வர கண்நோய்கள் கண் சூடு கண் எரிச்சல் இவை அனைத்தும் தீரும் கண்கள் குளிர்ச்சி பெறும் பார்வை சக்தி அதிகரிக்கும்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com