ஒரே வாரத்தில் 4.5 கிலோ வெயிட் லாஸ் தரும் டயட் சீக்ரெட்! - இங்கே படியுங்கள்!
கோவிட் பாண்டிமிக் காலத்தில் அரசு லாக் டவுன் அறிவித்ததில் யாருக்கு நஷ்டமோ இல்லையோ?! இளம்பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு அது ஒருவிதத்தில் பெருத்த நஷ்டத்தை விளைவித்து விட்டது என்று அலுத்துக் கொள்கிறார்கள் அவர்கள்.
விர்ச்சுவல் ஸ்கூல், வொர்க் ஃப்ரம் ஹோம்… என உலகம் முழுக்க அனைவரும் வீட்டுக்குள் உட்கார்ந்து இயங்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த போது சமையலறை படு பிஸியாகத் தனது கடமையைச் செய்து கொண்டிருந்தது. சமைக்க சாப்பிட, உட்கார்ந்தபடியே வேலை செய்ய என இருந்ததில் உலகம் முழுக்க பல லட்சக் கணக்கான மக்களுக்கு உடல் எடை வழக்கத்துக்கு மாறான விகிதத்தில் டபுள், ட்ரிபிளாக எகிறியது என்று கேள்வி.
பெருந்தொற்றுக் காலம் முடிந்து இப்போது உலகமே சற்றேறக்குறைய இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருந்தாலும், பலரும் குறைந்த காலகட்டத்தில் ஏற்றிய உடல் எடையை குறைக்க வழியின்றித் திண்டாடி வருகின்றனர்.
அவர்களது தேடல்கள் அனைத்தும் இப்போது எடை குறைப்பில் கவனம் செலுத்துவது மட்டுமே என்றாகி விட்டது.
பலர் ஜிம்முக்குச் சென்று பயிற்சி செய்து எடை குறைப்பில் ஈடுபடுகிறார்கள். சிலருக்கு வொர்க் அவுட் ஆனாலும் இடையில் பயிற்சியைக் கைவிட நேர்ந்தால் மீண்டும் உடல் எடை முன்பை விட அதிகரித்து விட்டதாகப் புலம்புகிறார்கள்.\
சிலர் அதீதமாக உடற்பயிற்சியில் ஈடுபட்டு ஹார்ட் அட்டாக் போன்ற பேராபத்தை தேடிக் கொள்வதும் நிகழ்கிறது.
சிலரோ கீட்டோ டயட், வீகன் டயட், பேலியோ டயட் என்று இன்னொரு பாதையில் முயற்சி செய்கிறார்கள். இதுவும் சிலருக்கு ஒத்துக் கொள்கிறது. சிலருக்கு ஒவ்வாமை ஆகி விடுகிறது.
டயட் மூலமாக வெயிட் லாஸ் செய்வதில் என்னென்ன முறைகள் உண்டு என்று இணையத்தில் ஆராய்ந்தால் அதில் மிலிட்டரி டயட் என்றொரு வழிமுறையைக் காண முடிந்தது.
மிலிட்டரி டயட் என்றால் என்ன?
இந்த வகை டயட்டை மேற்கொண்டால் வெறும் ஒரே வாரத்தில் உடல் எடையை 4.5 கிலோ குறைக்க முடியும் எனச் சொல்லப்பட்டிருந்தது. அடடே! இது அருமையான வழிமுறையாகத் தெரிகிறதே என இணையத்தில் தேடினால் அந்த டயட் பற்றி ஆயிரமாயிரம் தகவல்கள் கொட்டி கிடக்கின்றன. அதில் சில நன்மை
தருவதாகவும், சில தகவல்கள் எதிர்மறை விளைவுகளைத் தருவதாகவும் இருக்கின்றன.
பாஸிட்டிவ் பலன்கள்…
இந்த வகை டயட்டைப் பின்பற்ற விரும்புபவர்கள் ஒரு வாரம் முழுதும் நாளொன்றுக்கு 1400 கலோரி அளவிலான உணவை மட்டுமே உண்ண வேண்டும்.
நாம் உட்கொள்ளும் உணவில் கொழுப்புச் சத்துக்கள் கொண்டவை என எதுவுமே இருக்கக் கூடாது. முற்றிலும் புரதச் சத்து கொண்ட உணவுப் பொருட்களை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.
தண்ணீர் எவ்வளவு வேண்டுமானாலும் அருந்தலாம்.
இந்த டயட்டைப் பின்பற்றிக் கொண்டே வாக்கிங், எளிதான உடற்பயிற்சிகள் என தினமும் மேற்கொண்டால் வெகு நிச்சயமாக எடை குறைப்புக்கு சாத்தியம் உண்டு.
முதல் வாரத்தில் மிலிட்டரி டயட்டில் இருந்து விட்டு மறுவாரத்தில் 3 நாட்கள் இடைவெளி விட்டு மீண்டும் பழையபடி டயட்டில் இருக்கலாம். இதே போல நாம் விரும்பும் அளவுக்கு நமது உடல் எடையைக் குறைக்கும் வரை இதை அப்படியே ரிப்பீட் செய்யலாம்.
பக்க விளைவுகள்...
மிலிட்டரி டயட் பின்பற்றும் போது கார்ப்ஸ் என்று சொல்லப்படக் கூடிய மாவுச்சத்துள்ள உணவுகளைத் தவிர்ப்பதாலும், கொழுப்பை முற்றிலுமாகத் தவிர்ப்பதாலும் நாம் மிகவும் சோர்வாக உணர்வோம். அது நம்மை நம் முயற்சியில் இருந்து பின் தங்கச் செய்யலாம்.
இந்த வகை டயட்டை மேற்கொண்டு விட்டு நடுவில் இடைவெளி விடும் போது மீண்டும் நார்மல் டயட்டுக்குத் திரும்பலாம் என்கிறார்கள். அப்படித் திரும்பினால் இழந்த உடல் எடை மீண்டும் ஏறும் வாய்ப்பு உண்டு என்பது நிஜம்.
இந்த வகை டயட்டைத் தகுந்த ஃபிட்னஸ் எக்ஸ்பர்ட்டுகளின் வழிகாட்டுதல் இன்றி மேற்கொள்ளும் போது டீஹைட்ரேஷன் பிரச்சினைகள், ஃபைபர் கலந்த உணவுகளைத் தவிர்ப்பதால் கான்ஸ்டிபேஷன் உள்ளிட்ட பிரச்சினைகளைச் சந்திக்க நேரும்.
ஆகவே மிலிட்டரி டயட்டைப் பின்பற்றி எடை குறைப்பில் ஈடுபட விரும்புபவர்கள் தகுந்த ஃபிட்னஸ் ஆர்வலர்கள் அல்லது ஊட்டச் சத்து நிபுணர்களிடம் கலந்தாலோசித்த பிறகு அதில் ஈடுபடுது நல்லது.