தேனில் ஊறவச்ச பூண்டு - இதய நோய் முதல் புற்றுநோய் வரை குணப்படுத்தும்

தேனில் ஊறவச்ச பூண்டு - இதய நோய் முதல் புற்றுநோய் வரை குணப்படுத்தும்

காலையில் வெறும் வயிற்றில் 2 பல் பச்சை பூண்டு சாப்பிடுவதால் கொலஸ்ட்ரால் குறையும், ரத்தக் குழாய் அடைப்பு நீங்கும், நோய் எதிர்ப்ப சக்தி அதிகரிக்கும், மூச்சுத் திணறல் நோய் குணமாகும். இப்படி பல நோய்களை குணமாக்கும் சக்தி வாய்ந்தது பூண்டு.

பூண்டு சாப்பிடுவதால் 150 வகையான நோய்களை தடுக்கும் என்று சித்த மருத்துவம் கூறுகிறது. இதை சமைத்து சாப்பிடுவதை விட பச்சையாக சாப்பிட்டால் பலன் அதிகம்.

மேலும் இன்று பலருக்கும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி தேவைப்படுகிறது. அதுவும் உலகில் கொரோனா பரவிய பிறகு பலரும் இம்மியூனிட்டி பவருக்காக பல மருந்துகளை உட்கொள்கிறார்கள். இதற்காக நிறைய பணம் செலவழிக்கின்றார்கள். ஆனால் நம் வீட்டு கிட்சனில் இருக்கும் பூண்டு பக்கம் அவர்களின் கவனம் செல்வதில்லை.

இது இதய நோய் முதல் புற்று நோய் வரை குணப்படுத்தும் ஆற்றல் படைத்ததாக அமெரிக்கன் ஆராய்ச்சியிலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .

சரி, இப்போது பூண்டை எப்படி சாப்பிட்டால் என்ன நன்மை என்று பார்க்கலாம்...

பூண்டை இரண்டு துண்டாக நறுக்கி ஜாடியில் போட்டு அதன் மேல் பூண்டு மூழ்கும் அளவிற்கு தூய்மையான தேனை ஊற்றி ஒருவாரம் வரை ஊற விட்டு அதன் பின் தினமும் 1 ஸ்பூன் அளவு சாப்பிடுங்கள்.

எந்தெந்த நோய்களை குணப்படுத்துகிறது தெரியுமா?

1.சளி, காய்ச்சல், இருமல், நோய் கிருமி தொற்று போன்றவை ஏற்படாமல் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து நம்மை காக்கிறது .

2. காலையில் எழுந்ததும் பல் தேய்த்து விட்டு வெறும் வயிற்றில் உண்டால் நல்ல பலன் கிடைக்கும். உணவுக்குப் பிறகு இதை உட்கொள்வது, இதன் செயல் திறனை குறைத்துவிடும். ஆகையால் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதே ஆகச் சிறந்தது. 

3.காலையில் மட்டுமின்றி மதியம், மாலை வேளையிலும் கூட இதை உட்கொண்டு வந்தால் நம் உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும். 

4. தேனில் ஊறவைத்த பூண்டை தினமும் காலையிலோ அல்லது மாலையிலோ உட்கொண்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து அன்றாடம் தாக்கும் நோய்க்கிருமிகளிடம் இருந்து நம்மைக் பாதுகாத்துக் கொள்ள இது பெரிதும் உதவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com