மெனோபாஸ் என்பது பெரும் உளவியல் சிக்கலா என்ன?

மெனோபாஸ் என்பது பெரும் உளவியல் சிக்கலா என்ன?

பெண்களின் உடல்நிலையில் பருவ வயதை எட்டியதில் இருந்து நாற்பது வயது வரை பலவிதமான மாற்றங்கள் நிகழும். 40 வயது முதல் 60 வயது வரையிலான பருவம் மனித வாழ்க்கையில் மிக முக்கியமானது. அதிலும் பெண்கள் வாழ்வில் இந்த காலகட்டம் மிகவும் முக்கியமானது. இதனால் பல உடல் உபாதைகளை அவர்கள் சந்தித்தாலும் அது பெரிய அளவில் அவர்களுக்கு மன மாற்றத்தை உண்டு பண்ணாது.

ஆனால் 40 வயதை கடந்த பின் பெண்கள் உடலளவில் சந்திக்கும் பற்பல மாற்றங்கள் அவர்களின் மன நிலையையும் மாற்றும்.

உடலில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் உற்பத்தி குறைந்து விடும் அல்லது நின்றுவிடும்.

அதனால் நாற்பது வயதுக்கு மேல், பெண்ணின் கருப்பையில் செயல்பாடு குறைந்து மாதவிடாய் முறையற்றதாகி பெண்கள் 45 வயதைக் கடக்கும்போது மாதவிடாய் நிற்கும் கால கட்டத்தை அடைகிறார்கள். இதற்கு மெனோபாஸ் என்று பெயர்.

மெனோபாஸ் என்றாலே தேவையில்லாத பயத்தில் வியாதிகள் வரும் காலம் என்று பலரும் பயந்து கொண்டு இருக்கிறார்கள்.

இந்த கால கட்டத்தில் பெண்கள் அடிக்கடி கூறும் வார்த்தை "மனசே சரியில்லை". வருமானம், பிள்ளைகள் திருமணம், பணப் பிரச்சனை, குடும்ப சூழல் என நெருக்கடிகள் நிறைந்த அதிக பொறுப்புகளை சுமக்க நேரிடும் காலக்கட்டம் அது. பலவிதமான நோய்கள் தேடி வரும் காலமும் கூட. கவலைகளுக்கு இடம் கொடுத்து, உடலில் உட்கார வைத்து விட்டால், ஆரோக்கியத்தை ஒட்டு மொத்தமாக கெடுத்து ஆளையே வீழ்த்தி விடும்.

ஈஸ்ட்ரோஜன் பற்றாக்குறையால் தோலுக்கு மினுமினுப்பையும், மிருதுத் தன்மையும் கொடுக்கும்.

கொலேஜன் என்ற புரதம் சார்ந்த நார்ப் பொருள் குறைந்து விடுவதால், தோலில் வறட்சியும், சுருக்கங்களும் ஏற்படுகின்றன. மாத விலக்கு நிற்கும் போது மனதளவிலும் நிறைய மாற்றங்கள் ஏற்படுகின்றன.

தேவையற்ற பயங்களை போக்கினாலே மெனோபாஸ் கால கட்டத்தை பெண்கள் மிக சுலபமாக கடந்து வரலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com