நமது சிறுநீரகங்களைப் பாதுகாப்பதற்கான 8 தங்க விதிகளைத் தெரிந்து கொள்ளுங்கள்!

நமது சிறுநீரகங்களைப் பாதுகாப்பதற்கான 8 தங்க விதிகளைத் தெரிந்து கொள்ளுங்கள்!

தொகுப்பு: கார்த்திகா வாசுதேவன்

மார்ச் 9 2023, இன்று உலக சிறுநீரக தினம்

இந்த ஆண்டுக்கான உலக சிறுநீரக தின தீம் என்ன தெரியுமா?

"அனைவருக்குமான சிறுநீரக ஆரோக்கியம்: சிறந்த சிறுநீரக பராமரிப்புக்கான அறிவு இடைவெளியைக் குறைக்கவும்." என்பது தான்.

8 தங்க விதிகள்...

உங்கள் சிறுநீரகங்களை சீரான முறையில் பாதுகாக்க நீங்கள் என்ன செய்யலாம்?

சிறுநீரக நோய்கள் சைலண்ட் கில்லர்கள் போன்றவை. இவற்றின் தாக்கம் உங்கள் வாழ்க்கைத் தரத்தை மிகவும் பாதிப்புக்கு உள்ளாக்கி விடும்.

இருப்பினும் இந்த சைலண்ட் கில்லர்கள் உண்டாக்கும் அபாயத்தைக் குறைக்கப் பல எளிய வழிகள் உள்ளன.அந்த வழிகள் என்ன என்று அறிந்து கொண்டோமெனில் அவை தான் அவற்றை எதிர்ப்பதற்கான நமது தங்க விதிகள் என்று கொள்ளலாம்.

1)ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருங்கள், தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள்,

எப்போதும் ஃபிட்னஸில் அக்கறையுடன் இருப்பது உங்கள் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும், அத்துடன் இதன் மூலமாக நாள்பட்ட சிறுநீரக நோயின் அபாயத்தையும் குறைக்க முடியும்.

2) உங்கள் இரத்த சர்க்கரை அளவை வழக்கமான கட்டுப்பாட்டில் வைத்திருங்கள்

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களில் பாதி பேருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்படுகிறது, எனவே நீரிழிவு நோயாளிகள் தங்கள் சிறுநீரக செயல்பாடுகளை சரிபார்க்க வழக்கமான சோதனைகளை மேற்கொள்வது முக்கியம்.

நீரிழிவு நோயினால் ஏற்படும் சிறுநீரக பாதிப்பை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் குறைக்கலாம் அல்லது தடுக்கலாம். எப்பொழுதும் உதவுவதில் மகிழ்ச்சியடையும் மருத்துவர்கள் அல்லது மருந்தாளுநர்களின் உதவியுடன் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது முக்கியம்.

3) உங்கள் இரத்த அழுத்தத்தை கண்காணிக்கவும்

உயர் இரத்த அழுத்தம் பக்கவாதம் அல்லது மாரடைப்புக்கு வழிவகுக்கும் என்பதை பலர் அறிந்திருந்தாலும், சிறுநீரக பாதிப்புக்கு இது மிகவும் பொதுவான காரணம் என்பது சிலருக்கு மட்டுமே தெரியும்.

4) ஆரோக்கியமாக சாப்பிடுங்கள் அத்துடன் உங்கள் எடையை கட்டுக்குள் வைத்திருங்கள்

இது நீரிழிவு, இதய நோய் மற்றும் நாள்பட்ட சிறுநீரக நோயுடன் தொடர்புடைய பிற நிலைமைகளைத் தடுக்க உதவும்.

நாம் தினமும் எடுத்துக் கொள்ளும் உப்பின் அளவை குறைக்க வேண்டும். அதாவது, நாளொன்றுக்கு பரிந்துரைக்கப்பட்ட சோடியம் உட்கொள்ளல் ஒரு நாளைக்கு 5-6 கிராம் உப்பு (சுமார் ஒரு தேக்கரண்டி). ஆனால், இது பெரும்பாலும் அளவு மீறி விடுவது தான் வழக்கம். காரணம் இன்றைய வாழ்க்கைமுறை மற்றும் உணமுறை மாற்றங்கள். இதைத் தவிர்க்க வேண்டும் எனில், உங்கள் உப்பு உட்கொள்ளலைக் குறைக்க, பதப்படுத்தப்பட்ட மற்றும் உணவக உணவின் அளவைக் கட்டுப்படுத்த வேண்டும், அதோடு உணவில் உப்பு சேர்க்க வேண்டாம். புதிய பொருட்களைக் கொண்டு நீங்களே உணவைத் தயாரித்தால், உங்கள் உட்கொள்ளலைக் கட்டுப்படுத்துவது எளிதாக இருக்கும்.

5)ஆரோக்கியமான திரவ உட்கொள்ளலை பராமரிக்கவும்

நல்ல ஆரோக்கியத்தை பராமரிக்க நாம் தினசரி உட்கொள்ள வேண்டிய தண்ணீர் மற்றும் பிற திரவங்களின் தேர்ந்த அளவு குறித்து மருத்துவ ஆய்வுகள் இதுவரையிலும் எந்த ஒரு உடன்பாட்டையும் எட்டவில்லை என்றாலும், நமது பாரம்பரிய ஞானமானது நீண்ட காலமாக ஒரு நாளைக்கு 1.5 முதல் 2 லிட்டர் (3 முதல் 4 pints ) தண்ணீர் குடிக்கப் பரிந்துரைக்கிறது.

ஏராளமான திரவங்களை உட்கொள்வது என்பது சிறுநீரகங்களுக்கு சோடியம், யூரியா மற்றும் நச்சுகளை உடலில் இருந்து அகற்ற உதவுகிறது, இது நாள்பட்ட சிறுநீரக நோய் பாதிப்பு ரிஸ்கிலிருந்து நம்மை காக்க உதவுகிறது என்று ஆஸ்திரேலியா மற்றும் கனடா ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த கண்டுபிடிப்புகள், "மிதமிஞ்சிய முரட்டுத்தனமான திரவ உட்கொள்ளலைப்" பரிந்துரைக்கவில்லை, இது பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம், ஆனால் தினமும் 2 லிட்டர் அளவுக்கு மிதமான அளவு தண்ணீர் உட்கொள்ளல் மூலம் சிறுநீரக செயல்பாடு குறையும் அபாயத்தை நம்மால் குறைக்க முடியும் என்பதற்கான சான்றுகளை வழங்குகின்றன. எந்தவொரு நபருக்கும் சரியான அளவு திரவ உட்கொள்ளல் பாலினம், உடற்பயிற்சி, காலநிலை, சுகாதார நிலைமைகள், கர்ப்பம் மற்றும் தாய்ப்பால் உள்ளிட்ட பல காரணிகளைப் பொறுத்தது என்பதை நினைவில் கொள்வது அவசியம். கூடுதலாக, ஏற்கனவே

சிறுநீரகத்தில் கல் உள்ளவர்கள் புதிய கல் உருவாகும் அபாயத்தைக் குறைக்க தினமும் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

6) புகைப்பிடிக்க கூடாது

புகைபிடித்தல் சிறுநீரகங்களுக்கு இரத்த ஓட்டத்தை குறைக்கிறது. சிறுநீரகங்களுக்கு குறைவான ரத்தம் சென்றால், அது சரியாக செயல்படும் திறனை பாதிக்கிறது. புகைபிடித்தல் சிறுநீரக புற்றுநோயின் அபாயத்தையும் சுமார் 50 சதவீதம் அதிகரிக்கிறது.

7) தொடர்ந்து மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொள்ளாதீர்கள்

இபு ப்ரூஃபன் போன்ற ஸ்டீராய்டு அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகளை தொடர்ந்து வழக்கமாக எடுத்துக் கொண்டால் அது கடைசியில் சிறுநீரக பாதிப்பு மற்றும் நோயில் கொண்டு விடும்.

8) சிறுநீரக ஆரோக்யத்தைப் பொருத்தவரை உங்களால் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட 'அதிக ஆபத்து' காரணிகளை உணரமுடிந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி உங்கள் சிறுநீரகச் செயல்பாட்டைச் சரிபார்க்கவும்

இத்தனைக்குப் பிறகும் நீங்கள் நிச்சயமாக நினைவில் கொள்ள வேண்டியவை என சில உள்ளன. அவை;

உங்கள் வாழ்க்கை முறை மாற்றங்கள்... இதற்கு நீங்கள் 4D களை நினைவில் கொள்ள வேண்டும்.

DEHYDRATION (Avoid), DIET (Balanced and Right amount of Salt per day) DIABETES (Prevent or Control) Drugs (NSAIDS)- (Avoid Self Medication)

அதாவது

1. உடலில் நீரிழப்பு ஏற்படாமல் தவிர்ப்பது

2. உணவில் பரிந்துரைக்கப்பட்ட அளவுக்கு அல்லது சரியான அளவுக்கு மட்டுமே உப்பைச் சேர்ப்பது

3. நீரழிவு நோயைக் கட்டுப்படுத்துவது அல்லது முற்றிலுமாகத் தடுப்பது

4. சுய மருந்து எடுத்துக் கொள்வதை கைவிடுவது.

இதைத்தான் ஆங்கிலத்தில் 4D என்கிறார்கள் மருத்துவர்கள். இந்த பழக்கத்தை முறையாகக் கையாண்டாலே போதும் நாம் சரியான லைஃப்ஸ்டைல் மாற்றத்தைக் கண்டடைந்து விட்டோம் என்று தான் அர்த்தம்.

அடுத்தபடியாக நாம் நினைவில் கொள்ள வேண்டியது 5S

SMOKING (stop now), SALT (On Table - Extra - is bad), SUGAR (Not in Excess), SEDENTARINESS (Avoid - To avoid Obesity - Exercise Daily),

STRESS - (Not Beyond a Limit)

1. புகைபிடித்தலை உடனடியாக நிறுத்த வேண்டும்,

2. அதிகப்படி உப்பு உடலுக்கு மிகக்கேடு என உணர வேண்டும்.

3. அதிகப்படி சர்க்கரை தேவையே இல்லை எனும் கட்டுப்பாடு,

4. மந்தமாக உட்காருதலை தவிர்ப்பது (உடல் பருமனை தவிர்க்க - தினசரி உடற்பயிற்சி செய்வது),

5. மன அழுத்தம் - (வரம்புக்கு அப்பால் கவலை கொள்வது இல்லை எனும் தீர்மானம்)

மற்றும்

உங்கள் இரத்த அழுத்தத்தை எப்போதும் இதயத்தால் உணர்ந்து கொள்ளுங்கள்...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com