நலம் பயக்கும் நன்னாரி வேர்!

நன்னாரி வேரை நெல்லிக்காய் சாற்றில் ஊறவைத்து, உலர்த்தி, பொடி செய்து, தினமும் இரண்டு கிராம் சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரையும். இதயம் வலுவடையும்.
நன்னாரி வேர்ப் பட்டையை நீரில் ஊறவைத்து தேவையான அளவு பாலும், சர்க்கரையும், கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்க, உடலைத் தேற்றுவதோடு நாட்பட்ட இருமலும், கழிசலும் நிற்கும்.
நன்னாரி வேரை இடித்து, சாறெடுத்து, தினமும் குடித்து வந்தால், தோல் நோய்கள் குணமாகும்.
நன்னாரி, தனியா, சோம்பு ஆகியவற்றை சம அளவு எடுத்து பொடித்து, தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும்.
நன்னாரி வேரை இடித்து சாறு பிழிந்து சுடுநீரில் கலந்து குடித்தால் அஜீரணம் குணமாகும்.
நன்னாரி, வெட்டிவேர் இரண்டையும் சம அளவு எடுத்து கஷாயம் வைத்து குடித்தால், உடலில் உள்ள பித்தம் தணியும்.
நன்னாரி, நெருஞ்சில் இரண்டையும் சம அளவு எடுத்து கஷாயம் வைத்து குடித்தால், சிறுநீரக கற்கள், பித்தப்பை கற்கள் ஆகியன கரையும்.
நன்னாரி வேரை ஒரு சட்டியில் போட்டு, இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து குடித்தால் வாத நோய்கள் தீரும்.
நன்னாரி வேரை வாழையிலையில் வைத்துக் கட்டி எரித்து சாம்பலாக்கி அதனுடன் தேவையான அளவு சீரகமும், சர்க்கரையும் பொடித்துக் கலந்து அருந்தி வர, சிறுநீரக நோய்கள் அனைத்தும் விலகும்.