நூறு நன்மைகள் தரும் நூல்கோல்/நூக்கல்!
நூக்கலில் வைட்டமின்கள் ஏ, ஈ, சி மற்றும், மாங்கனீசு, பீட்டா கரோட்டீன் ஆகிய ஊட்டச்சத்துக்களும் நிறைந்திருக்கின்றன.
நூக்கலில் உள்ள அதிகப்படியான விட்டமின் கே சத்தானது இதயக் கோளாறுகள் வராமல் தடுக்கிறது. நூக்கல் கீரையானது, உடலில் உள்ள கொழுப்பைப் பயன்படுத்தி பித்தநீரை உறிஞ்சிக் கொள்ளக்கூடியது. இதன் விளைவால் கொலஸ்ட்ரால் குறைகிறது.
குழந்தை பெற்ற பெண்கள் பிஞ்சு நூக்கலை மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் தாய்ப்பால் நன்றாக சுரக்கும்.
நூக்கலின் வேர்ப்பகுதிகளில் உள்ள பீட்டா கரோட்டின், ஆரோக்கியமான சவ்வுகள் உற்பத்தியாக உதவுவதுடன், நோய் எதிர்ப்புத் சக்தியையும் அதிகரிக்கிறது.
நூக்கலை அடிக்கடி உணவில் சேர்த்து கொண்டால் நரம்பு தளர்ச்சி ஏற்படாது,,ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் உற்பத்தியையும் அதிகரிக்கும்.
நூக்கலானது மார்பகப் புற்றுநோய், பெருங்குடல் மற்றும்மலக்குடல் புற்றுநோய்கள் வராமல் தடுக்கிறது.
நூக்கலில் பொட்டாசியம் நிறைந்துள்ளது. பொட்டாசியம் ஒரு வாசோடைலேட்டராக செயல்பட்டு திடீரெனே இரத்த அழுத்தம் உயர்வதைக் குறைக்கிறது.
நூல்கோலில் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு காரணமான கால்சியம், இரும்புச்சத்து, மாங்கனீசு ஆகியவை காணப்படுகின்றன.
நூல்கோலில் பார்வைத்திறன் மேம்பட காரணமான பீட்டா கரோடீன்கள் காணப்படுகின்றன. இவை வயதாகும் போது ஏற்படும் கண்தசை அழற்சி நோய், கண்புரை நோய் ஏற்படாமல் பாதுகாக்கின்றன.
தினமும் டர்னிப் ஜூஸ் அருந்தினால், உடல் துர்நாற்றம் மறையும்.
மேலும் வெடிப்புற்ற பாதங்களில் டர்னிப் சாற்றை பூசுவதால் வெடிப்பு மறையும்.